256 கோடி – கருப்பு – அது பியூஷ் ஆக இருந்தாலென்ன … புஷ்பாவாக இருந்தாலென்ன ….?

The Director General of GST Intelligence,
Ahmedabad, has unearthed a major tax evasion
racket involving Uttar Pradesh-based
businessman Piyush Jain, at whose business
and residential premises taxmen have found
₹194.45 crore cash, 23 kg of gold and
unaccounted raw materials worth ₹6 crore.

( https://www.thehindu.com/news/national/other-states/perfume-industrialist-piyush-jain-arrested-over-tax-evasion-charges/article38046498.ece )

  • இதை பாஜக – பியூஷ் ஜெயின், அகிலேஷ் யாதவின்
    சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறி,
    அகிலேஷின் ஊழல் வாசனை வெளிப்பட்டு விட்டது
    என்று கூறுகிறது….

  • ஆனால், அகிலேஷ் யாதவோ, அவர்கள் குறி வைத்தது
    சமாஜ்வாதி கட்சியின் புஷ்பராஜ் ஜெயினை தான்… ஆனால்,
    தவறுதலாக, பாஜகவின் பியூஷ் ஜெயின் மீது ரெய்டு
    நடத்திவிட்டு, இப்போது பரிதாபமாக விழிக்கிறார்கள்
    என்று கிண்டல் செய்கிறார்….

மாட்டியது பியூஷோ அல்லது புஷ்பராஜோ,

ஊழலில் ஊறியது சமாஜ்வாதியோ, பாஜகவோ –
எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்….

மீடியாக்கள் இதை “காமெடி” என்று சொல்லி தீவிரத்தை
குறைத்து, மக்களை சிரித்து விட்டு மறந்து விடச்செய்யும்
தங்கள் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடட்டும்.

நாம் கவலைப்படுவது வேறு விஷயத்தைப்பற்றித்தான்….

  • ஒருவர், 256 கோடி ரூபாய் பணத்தை சட்டவிரோதமாக
    சம்பாதித்து, அதை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக
    மாற்றி, வருமான வரி அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு
    அதிகாரிகள், ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆகிய அத்தனை
    பேர்களையும் மீறி பதுக்கி வைத்திருக்கிறார் என்றால் –

நமது சிஸ்டம் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது….?

அஹமதாபாத் கம்பெனிக்கும், கான்பூர் கம்பெனிக்கும் raw material supply-யில் நடந்த ரொக்கப்பரிமாற்றம் ஜிஎஸ்டி மோசடியில் முடிந்திருக்கிறது என்கிறார்கள். ஜிஎஸ்டி- யில் ரொக்கப் பரிவர்த்தனைக்கு இடம் ஏது…? ஜி.எஸ்.டி.யில் இவ்வளவு பெரிய ஓட்டையா….? இதை இவ்வளவு நாட்களாக எப்படி அனுமதித்தார்கள்….?

பண மதிப்பிழப்பீட்டிற்குப் பிறகு, நாட்டில் கருப்புப்பணமே
இருக்காது என்று சொன்னார்களே…. பின் இது எப்படி….?
இவருக்கு இத்தனை கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள்
கிடைத்தது எப்படி….?

மூத்த அதிகாரிகளின் துணையின்றி, அரசியல்வாதிகளின் ஆதரவு இன்றி,
தனி ஒருவர் இதனை சாதித்திருக்க முடியுமா….?

இதன் பிறகும், அரசு – இலாகாக்கள் இந்த ஆட்சியில்
மிகத்திறமையாக செயல்படுகின்றன என்று யாருக்காவது
நம்பத் தோன்றுமா….?

.
……………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to 256 கோடி – கருப்பு – அது பியூஷ் ஆக இருந்தாலென்ன … புஷ்பாவாக இருந்தாலென்ன ….?

  1. Rajs சொல்கிறார்:

    You are wondering about weakness of our system. Remember Sekar Reddy and bundles of freshly printed 2K notes.

  2. Manivannan Kamaraj சொல்கிறார்:

    இதனை இப்பொழுதும் நமது புதியவன் போன்ற நண்பர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.

    ஐயா உங்கள் அனுமதியுடன் இந்த பதிவினை வேறு ஒரு வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளப் போகிறேன் அவர் பெயர் நேதாஜி தேவியர் இல்லம் என்று ஒரு வலைப்பதிவு நடத்துகிறார் அவரிடம் இதைப் பகிர்ந்து அவரிடமிருந்து ஆரோக்கியமான விவாதத்திற்கு பதில் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன்.

    பாஜக மட்டுமே இந்தியாவை காக்க வந்த கட்சியாகவும் இன்று வரை எல்லா தவறுக்கும் காரணம் இந்தியாவை ஆண்ட பழைய பிரதமர்கள் என்று அவர் சொல்கிறார் அவரிடம் இதற்கு பதில் கிடைக்குமா என்பதற்காகவே உங்கள் பதிவினை உங்கள் அனுமதியுடன் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Manivannan Kamaraj,

      தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
      எதாவது விளக்கம் கிடைத்தால், எனக்கும் சொல்லுங்களேன்…!

      ஆனால், உங்களுக்கு அங்கும் தகுந்த response கிடைக்குமென்று
      எனக்குத் தோன்றவில்லை.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. bandhu சொல்கிறார்:

    இது வாசனை திரவியங்களை gst செலுத்தாமல் பதுக்கிய பணம் போலத் தெரியவில்லை. அரசியல்வாதி / அதிகாரி களின் ஊழலில் ஒரு பகுதியாக இருக்கவேண்டும். அரசு கொடுக்கும் பற்பல காண்ட்ராக்ட்களில் கை மாறும் கோடிக்கணக்கான பணத்தின் ஒரு சிறு பகுதியாகத்தான் இருக்க வேண்டும். புதியதாக போட்ட சாலையில் அதை திறக்கும்போது ஒரு எம் எல் ஏ அதில் ஒரு தேங்காய் உடைக்க சாலை தெறித்து தேங்காய் உடையாமல் இருப்பதை சமீபத்தில் படித்தோம். அது போன்ற விவகாரங்களில் எவ்வளவு ஊழல் நடந்திருக்க வேண்டும்.

    ஒரு கிலோ மீட்டர் ஒரு வழிப்பாதை சாலைக்கு ஆகும் செலவு கிட்டதட்ட 2 கோடி என்று கூகிள் சொல்கிறது. எவ்வளவு சாலைகள் மறுபடி மறுபடி போடப்படுகிறது? எவ்வளவு கோடிகள் கை மாறி இருக்கவேண்டும்!

    இது ஒரு சிறிய சாம்பிள் தான்.

    ஜிஎஸ்டி விற்பனை தொகையை கணக்கில் கொண்டு வர வழி செய்கிறது. இது போல கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டைகளை அடைக்க அடைக்க, பிடிபடும்போது இது போன்ற தொகைகள் கணக்கில் காட்ட சிரமம் ஆகும்.

    //மூத்த அதிகாரிகளின் துணையின்றி, அரசியல்வாதிகளின் ஆதரவு இன்றி,
    தனி ஒருவர் இதனை சாதித்திருக்க முடியுமா….?//

    கண்டிப்பாக முடியாது. இவர் வெறும் கருவிதான். மாட்டியது வேறு யாருடைய பணமோ!

    தேர்தல் விநியோகத்துக்காக உபயோகப்படவேண்டி சேர்த்த பணம் இப்போது மாற்றியிருக்கிறது. சொந்த கட்சியின் பணத்தை கையும் களவுமாக பிடிக்கும் அளவு நேர்மை யாருக்கும் இருப்பதாக தெரியாததால் இது சமாஜ்வாதி கட்சியினரின் பணமாகத்தான் இருக்க வேண்டும்!

  4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    bandhu,

    // சொந்த கட்சியின் பணத்தை கையும் களவுமாக பிடிக்கும் அளவு
    நேர்மை யாருக்கும் இருப்பதாக தெரியாததால் இது
    சமாஜ்வாதி கட்சியினரின் பணமாகத்தான் இருக்க வேண்டும்! //

    இன்று இன்னுமொரு காரியத்தைச் செய்து, தாங்கள் எப்படி ஏமாந்தோம்
    என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்…..

    முன்னால் பிடித்த பியூஷ் ஜெயின், பாஜக காரர் தான், தவறுதலாகப் பிடித்து
    விட்டோம் என்பதை உறுதி செய்யும் விதமாக, இன்று சமாஜ்வாதி கட்சியின்
    புஷ்பராஜுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள்….

    எனவே, நேற்று பிடித்தது – பாஜக பணம்.
    இன்று பிடிப்பது – சமாஜ்வாதி பணம்….!!!
    இன்று எவ்வளவு மாட்டியது என்பதை இன்னும் சொல்லவில்லை;

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ” எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை ” என்கிற
    பழமொழி நினைவிற்கு வருகிறதா….?

    இதைப்படித்தவுடன் நிச்சயம் நினைவிற்கு வந்து விடும்.. !!! 🙂

    ——————————————–
    இன்னுமொரு தகவல் –
    நேற்று பிடிபட்ட பியூஷ் ஜெயின் சம்பந்தமானது –

    The Directorate General of GST Intelligence (DGGI) on Thursday refuted reports claiming that the department has agreed to treat the money recovered from Kanpur-based perfume trader Piyush Jain as turnover of the manufacturing unit. The DGGI said that these reports are “purely speculative”.

    (கவனிக்கவும் – பொய்யானது அல்லது தவறு என்று சொல்லவில்லை;
    உறுதிப்படுத்தப்படாத செய்தி என்று தான் கூறப்படுகிறது…..!!!

  6. Tamil சொல்கிறார்:

    நமது சிஸ்டம் அவ்வளவு பலவீனமாகவா இருக்கிறது….?

    There is no doubt about this. its in ICU.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.