“இருவர்” – வெளிவராத சில உண்மைகள் …திங்கள் இரவு – கம்ப்யூட்டரில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்
கொண்டிருந்தேன்… இடையில் டிவி பார்த்துக் கொண்டிருந்த
மனைவி ஹாலிலிருந்தே கூப்பிட்டார்… என்ன சொல்கிறார்
என்று சரியாகப் புரியாததால், எழுந்து ஹாலுக்கு சென்றேன்.

“ஜெயா” டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
எனக்கு மிகவும் பிடித்த படம் என்று தெரியுமாதலால்,
ரிமோட்டை திருப்பிக்கொண்டே வந்தவர், இதைக்கண்டதும்
நிறுத்திவிட்டு, என்னை கூப்பிட்டிருக்கிறார்…

மிகவும் விருப்பமான படம் தான் என்றாலும்,
நான் செய்ய நினைத்திருந்த வேலைகள் நிறைய இருந்தன…
அடுத்த இரண்டரை மணி நேரம் டிவியில் மூழ்கியிருக்க
முடியாத ஒரு நிலை… ஒரு 10-15 நிமிடங்கள் பார்த்துவிட்டு,
நகர மனமில்லை என்றாலும், கணிணிக்குத் திரும்பி விட்டேன்.

அப்போது ஈடுபட்டிருந்த வேலையை தொடர முடியாதபடி
“இருவர்” குறித்த பல விஷயங்கள் மீண்டும் மீண்டும்
நினைவிற்கு வந்தன….

2 நாட்களுக்கு முன்னர், பிரகாஷ் ராஜ் “இருவர்” பற்றி பேசிய
ஒரு வீடியோவை வேறு, பிற்பாடு பயன்படுத்துவதற்காக சேமித்து
வைத்திருந்தேன். ( இடுகையின் கடைசியில் தந்திருக்கிறேன்…!! )

கடைசியில், மற்ற வேலைகளை தூரத் தள்ளிவைத்து விட்டு,
இதை எழுதுகிறேன்.

“இருவர்” – திரைப்படம், எம்.ஜி.ஆர், கருணாநிதி சம்பந்தப்பட்டது
என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

தெரியாத விஷயம், உண்மையில் மணிரத்னம்
1995 அக்டோபரில் “இருவர்” படத்தின் உருவாக்கத்தில்
இறங்கியபோது மனதில் வைத்திருந்த “கரு”
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருக்கு
மிகவும் நெருக்கமாக அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து,

– பின்னர் பிரபாகரனுக்கே துரோகம் இழைத்து,
அவரால் தண்டிக்கப்பட்ட “மாத்தையா” ஆகியோர்
சம்பந்தப்பட்ட சம்பவங்களை வைத்து பின்னப்பட்ட கதையே.

மாத்தையா, விடுதலைப்புலிகளுக்கு துரோகம் இழைத்ததாக,
குற்றம் சாட்டப்பட்டு, டிசம்பர் 1994-ல் புலிகளால் மரண தண்டனை
வழங்கப்பட்டார்.

படம் திட்டமிடப்பட்டபோது, பிரபாகரன் உயிருடன் இருந்தார்.
மாத்தையாவுக்கு மரணதண்டனை நிறைவேறி ஒரு வருடம்
கூட ஆகியிருக்கவில்லை

மணிரத்னம் அப்போது சூடாக இருந்த இந்த சம்பவத்தைத்தான்
முதலில் மனதில் நினைத்திருந்திருக்கிறார்.

பிரபாகரன் வேடத்தில் மோகன்லாலும், மாத்தையா வேடத்தில்
ஹிந்தி நடிகர் நானா படேகரும் இணைக்கப்படவிருந்தார்கள்.

ஆனால், கதைக்கரு பற்றிய விஷயம் leak ஆகி,
சில பிரச்சினைகள் உருவாயின. ( மாத்தையா மீதான
அடிப்படைக் குற்றச்சாட்டு, அவர், இந்திய உளவு அமைப்பான
RAW-வுடன் நெருக்கம் வைத்து, பிரபாகரனுக்கு எதிராக
செயல்பட்டதாகவும், புலிகள் பற்றிய சில ரகசிய தகவல்களையும்
RAW -க்கு சொன்னார் என்பதும் தான்… )

இத்தகைய ஒரு “கரு”வுடன் படம் வெளியாவது கடினம்
என்கிற நிலை ஏற்பட்டவுடன், கதையில் அடிப்படை மாற்றம்
செய்யப்பட்டு, அது எம்.ஜி.ஆர்-கருணாநிதி ஆகியோரிடையே
இருந்த நட்பு-அரசியல் உறவு-பகை என்று ஒரு அரசியல்
கதைக்கருவாக உருமாறி விட்டது.

ஆனால், கதை மாற்றப்பட்ட இருவர் படமும் சென்சாரில்
பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற
இரண்டு அரசியல் தலைவர்களின் உண்மைக்கதை என்கிற
வகையில், இது ரிலீஸ் ஆவது சமூகத்தில் சட்டம் ஒழுங்கு
பிரச்சினையை உண்டாக்கும் என்று சொல்லி, சென்சார் சர்டிபிகேட் மறுக்கப்பட்டது.

பிறகு மணிரத்னம், அப்பீலுக்குச் சென்று, 8 பேர் கொண்ட
குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு, சில காட்சிகள்
நீக்கப்பட்டும், சில வசனங்கள் முடக்கப்பட்டும், இறுதியில்
U/A சர்டிபிகேடுடன் ரிலீசுக்கு அனுமதி பெற்றார்.

மேலும், படம் உருவாகத் துவங்கிய சமயத்தில், ஜெயலலிதா
முதலமைச்சராக இருந்தார். ரிலீஸ் ஆகும்போதோ, கருணாநிதி
முதலமைச்சராக இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்களோ -1987 வரை
முதலமைச்சராக இருந்தவர்…. அவர் இன்னமும் மக்கள் மனதில்
நிறைந்திருந்தார்.

தமிழ்நாட்டின் நடப்பு அரசியலில் உச்சத்தில் இருந்த இவர்களை
வைத்து படம் எடுப்பது சாதாரணப்பட்ட விஷயம் அல்லவே.

ஆனால், இந்த 3 பேரின் கௌரவத்திற்கும் சற்றும் இழுக்கு
ஏற்படாத வகையில் – மணிரத்னம் வெகு திறமையாக
திரைக்கதையை அமைத்திருந்தார்.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் – முதலில் கருணாநிதி
வேடத்திற்கு கமல்ஹாசனும், பிறகு சத்தியராஜும்
பேசப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் இருவருமே
அந்த ரோல் கருணாநிதி சம்பந்தப்பட்டது என்பதால்,
ஏற்க மறுத்திருக்கின்றனர். அதன் பின்னரே பிரகாஷ் ராஜ்
ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

படத்தில் பிரகாஷ் ராஜ், கலைஞருக்கான வசனங்களை தன் சொந்தக்குரலிலேயே பேசி இருக்கிறார்…!

கதையில் மாற்றம் ஏற்பட்டதும் நல்லதற்கே என்று சொல்ல
வேண்டும்….”இருவர்” படம் வசூல் ரீதியாக வெற்றி
பெறாவிட்டாலும், மணிரத்தினத்தின் தலைசிறந்த படைப்புகளில்
ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
( “Iruvar” tamil movie was included by critic Rachel Dwyer in the 2012
British Film Institute Sight and Sound 1000 greatest films of all time. )

படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன…

National Film Awards 1997 –

Best Supporting Actor – Prakash Raj
Best Cinematography – Santosh Sivan

இன்னும் இந்தப்படத்தைப்பற்றி நிறைய எழுதலாம்… ஆனால் –
இடுகை ஏற்கெனவே நீண்டு விட்டது. எனவே இத்துடன்
நிறுத்திக் கொள்கிறேன்.

இந்தப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த
அழகான காட்சி எதுவென்றால்
அது “நறுமுகையே .. பாடல் காட்சி தான்…

முதலில் அந்தப்பாடல் –
பிறகு நான் ஏற்கெனவே சொன்ன பிரகாஷ் ராஜ் வீடியோ…

….

….

பிரகாஷ் ராஜ் வீடியோ –

.
————————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to “இருவர்” – வெளிவராத சில உண்மைகள் …

 1. Raghavendra சொல்கிறார்:

  ரொம்ப சுவாரஸ்யமான கட்டுரை சார்.
  கருணாநிதியின் வேடத்தில், கமல் குறித்து
  இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
  கற்பனை செய்து பார்த்தேன்.
  நன்றாகவே பொருந்தியிருக்கும் என்று
  தோன்றுகிறது.
  கமல் ஒரு நல்ல சான்ஸை மிஸ் பண்ணி
  விட்டார்.

 2. Tamilmani சொல்கிறார்:

  Eventhough Iruvar had a good casting in mohanlal, prakashraj aishwarya rai etc etc and santosh
  sivan behind the camera it bombed at the box office, but critically it is hundreds time better than
  BOMBAY a very artificial movie . In my opinion the best film of Maniratnam is Mounaragam
  with Karthik doing a nice cameo, the film produced on shoe string budget , karthik scenes were shot in around panteon road chennai .(even the delhi house of mohan in that film is actually a house in kilpauk chennai) . Mounaragam with revathi karthik mohan is a huge success. i am eagerly awaiting his ponniyin selvan.

 3. R,Gopalakrishnan சொல்கிறார்:

  Sir, if you have time, even now you can see Iruvar film in U tube.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   thank you Mr.Gopalakrishnan

   .
   -with all best wishes,
   Kavirimainthan

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    எழுதி வெளியிட்ட பிறகு,
    இந்தக் காட்சியமைப்பையும், வசனகவிதையையும்
    பற்றி சொல்லாமல், இந்த இடுகை முழுமை
    பெறாது என்று தோன்றியது.
    எனவே, பின்னூட்டத்தில் இணைக்கிறேன்.

    இந்த வசன கவிதையைப் பேசி இருப்பது –
    அரவிந்தசுவாமி என்பது பலருக்கு
    ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கும்.

    “உன்னோடு நானிருந்த” – வசன கவிதை-


பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.