…
…

…
ஏனோ தெரியவில்லை…. இந்த காணொளியை
பதிப்பிக்கும்போது இந்த பாடல் வரிகள்
தானாகவே நினைவிற்கு வந்தன…
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை… இது தான் பயணம் …
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் – பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்..
அதன் effect தான் இந்த இடுகையின் தலைப்பு….!!!
அருமையான இந்த காணொளியை பாருங்கள்…
இது துவங்கும்போது, இது இப்படி முடியப்போகிறது என்பதை
நீங்கள் கற்பனை செய்திருக்கவே முடியாது….சரி தானே…?
…
…
—————————————————-
சரி வந்தது தான் வந்தோம்…
முழு பாடலையும் பார்த்து விடுவோமே…!!!
…
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவது தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்
– எவ்வளவு சிறப்பான தத்துவங்களை எவ்வளவு எளிமையான
வார்த்தைகளில் சொல்கிறார் கவிஞர் கண்ணதாசன் …!!!
…
———————————————————————————



அய்யா ….! உண்மைதான் … அந்த மாமனிதன் ” போன பாதையை மறந்து போகலாமா ..? ” ….. // எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை… இது தான் பயணம் …
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் – பயணம் முடிந்து விடும்
மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்.. // …. இந்த பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல ஒரு செய்தி … //
சிறப்புக் கட்டுரை: நிகழ்களம் – கைவிடப்பட்ட கிராமம்! // https://minnambalam.com/k/2018/11/15/20
செல்வராஜன்,
இப்போது கூட, அந்த கிராமத்து மக்கள் ஒரு 10 பேர் சேர்ந்தால் கூட, பசுமையை அங்கே மீண்டும் கொண்டு வந்து விட முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது… இது நமக்குத் தோன்றி பயனில்லை… அவர்களில் சிலருக்காவது தோன்ற வேண்டும்…கிராமம் இப்படி ஆனதற்கு அந்த கிராமத்து மக்களே ஒரு முக்கிய காரணம்…என்பது என் கருத்து.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்