குவைத் இந்திய தூதரக விழாவில் – முபாரக் அல்-ரஷீத் ….!!!



ஒரு புகழ்பெற்ற அரபிய இசைக்கலைஞர்,
மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு,
காந்திஜிக்கு மிகவும் பிடித்த – அவரது பிரார்த்தனை கூட்டங்களில்
தவறாமல் இடம்பெறும் ஒரு இந்து சமய பாடலை – இசைப்பது –
மனதிற்கு மகிழ்வும்,
மத நல்லிணக்கத்தில் நமக்கு உள்ள நம்பிக்கையை
மேலும் வலுப்படுத்துவதாகவும் அமைகிறது.

குவைத் இந்திய தூதரகத்தில் நிகழ்ந்த சுதந்திர தின விழாவில்,
திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் முன்னிலையில்,
திரு.முபாரக் அல் ரஷீத்
“வைஷ்ணவ ஜனதோ” பாடலைப் பாடும் ஒரு காணொளி கீழே –

என்னைப் பொருத்த வரை – இந்த பாடலில் வரும்
“வைஷ்ணவர்” என்கிற சொல்லிற்கு
“இறைவனுக்கு பிடித்த நபர் யாரென்றால்…”
என்று பொருள் கொண்டால் – இந்த பாடல் அனைத்து மதத்தினருமே
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே….

இந்த பாடல், இன்றைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர்
1500-களில் குஜராத்திய மொழியில் கவிஞர் நரசிம்ஹ மேத்தா
என்பவரால் இயற்றப்பட்டது…..

காந்திஜியின் ஒவ்வொரு பிரார்த்தனை கூட்டத்திலும், அனைத்து
மதங்களையும் சேர்ந்த பிரார்த்தனை பாடல்கள் இசைக்கப்படுவது
வழக்கமாக இருந்தது…. அவற்றில் இதுவும் ஒன்று…

இந்த பாடலின் பொருள் – ஆங்கிலத்தில் சுருக்கமாக –

One who is a Vaishnav (Devotee of Vishnu)
Knows the pain of others
Does good to others
without letting pride enter his mind.

A Vaishnav, Tolerates and praises the the entire world.
Does not speak ill of others
Keeps his promises, actions and thoughts pure
your mother is blessed indeed.

A Vaishnav sees everything equally, rejects greed and avarice
respects women as he respects his own mother
though his tongue may tire he will utter no untruth
Never touches the property of others.

A Vaishnav does not succumb to worldly attachments
he has renounced lust of all types and anger

—————
இதற்கு நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் –
தமிழில் சுருக்கமாக பொருள் சொல்ல வேண்டுமானல் –

——————
வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே!

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;

உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;

உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள்.

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்

ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்

ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்

வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்….

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன்

—————————————————————-

இதனைத் தொடர்ந்து, இந்த பாடலை இன்னமும் முழுமையாக
தேடினேன்… கிடைத்தது ஒரு பொக்கிஷம்…. கீழே –

Gandhi’s favourite bhajan goes global, artists from 124 countries recreate
‘Vaishnava Jan To’

…….

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to குவைத் இந்திய தூதரக விழாவில் – முபாரக் அல்-ரஷீத் ….!!!

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    500 ஆண்டுகளுக்கு முந்தைய கவிஞர் ஒருவர்,
    பக்திப்பாடல் ஒன்றில் ஒழுக்கத்திற்கு இத்தனை
    முக்கியத்துவம் கொடுத்திருப்பது வியப்பளிக்கிறது.

  2. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    காந்திஜி தனது பிரார்த்தனை கூட்டங்களுக்கு மிகவும்பொருத்தமான பாடலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.