…
…
ரொம்ப நாட்களாக இந்த ஆசாமி
நினைவிலிருந்து
முற்றிலும் மறைந்தே போயிருந்தார்…
நேற்று பழைய நண்பர் ஒருவர் ஒரு காணொளியை அனுப்பி,
என்ன, இவரை சுத்தமாக மறந்து விட்டீர்களா …?
என்று கேட்டிருந்தார்….
வீடியோவை இயக்கிப் பார்த்தேன்…
தாங்க முடியவில்லை சிரிப்பு…
நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு வலிக்க சிரிப்பு…!
மேலே போவதற்கு முன்னால்,
முதலில் நீங்களும் வீடியோவை
பார்த்து விடுங்கள்….
…
.
————————————————————–
என்ன சிரிப்பு அடங்கியாகி விட்டதா…?
நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை…
இந்த ஆள் இத்தனை நாள்
தாக்குப் பிடிப்பாரென்று…
எப்படி…?
நல்லவேளை..
தமிழ்நாட்டில் இல்லையென்றே நினைக்கிறேன்.
கர்நாடகா தானே…?
ஆனாலும், இவரின் திறமைகளையும், தன்னம்பிக்கையையும்,
சாமர்த்தியங்களையும் பார்த்து, என்னால் வியந்து பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.
இவரை – நண்பர்கள் யாராவது அண்மைக்காலங்களில் நேரில் பார்த்தீர்களா….? அவரது ஆசிரமத்திற்கு போயிருக்கிறீர்களா…?
எதாவது course -களில் கலந்து கொண்டிருக்கிறீர்களா…?
இத்தனை சிஷ்ய கோடிகளை வைத்துக்கொண்டு
சமாளிக்கிறாரே – எப்படி…?
அவருக்கு எங்கிருந்து, எப்படி – இத்தனை பணம் வருகிறது…?
பின்னணியில் யார் இருக்கிறார்கள்…?
நான் இவரைப்பற்றி இன்னம் நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன்…
விவரங்கள் தெரிந்த நண்பர்கள் தயவுசெய்து பின்னூட்டம் மூலம்
அவற்றை இங்கே தெரிவியுங்களேன்…
.
—————————————————————————————————–



எனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.
இந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது 🙂
கா.மை. சார்….. ஆன்மீகம் என்பதே வியாபாரமாகவும், கோடிகளைப் பதுக்கும் இடமாகவும் பெரும்பாலும் ஆகிவிட்டது.
காசு இருந்தால் எதையும் வாங்கலாம் என்பதை கிட்டத்தட்ட நித்யானந்தா நிரூபித்துவிட்டார். மதுரை ஆதீனத்தை விலைக்கு வாங்கிவிட்டார். பிறகு ‘வாங்கியவர் என்ன செய்வார்’ என்பதைப் புரிந்துகொண்ட மதுரை ஆதினகர்த்தர் அதை நீக்க கடும் முயற்சி எடுத்து இன்னொரு வாரிசை அறிவித்த பின்னரும், நித்தியானந்தாவின் ஆக்டோபஸ் கைகளுக்கு இன்னும் மதுரை ஆதீனம் தப்பியமாதிரி தெரியவில்லை. நிச்சயம் இப்போதுள்ளவருக்குப் பிறகு ஆதீன மடத்துக்குச் சிக்கல்தான்.
இவரைப் பற்றி மட்டுமல்ல, இன்னும் இதுபோல் பலர், பல புதுக் கோவில்கள்லாம் இருக்கின்றன. ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் நிறைய கண்டுபிடிக்கலாம். (மருவத்-வேலூர்-கல்கி-ஜக்கி-நித்தி-சர்வம் வியாபாரம் மயம்)
epperpatta muttaal ivan..karmam..