புலி வேட்டையும் – பிரிட்டிஷ் ராணியும் ….


சரித்திர நிகழ்வுகளில், முக்கியமாக கடந்த 100 ஆண்டுகளில் நம் சமூகத்தில் நிலவி வந்த பழக்க வழக்கங்களில் அவ்வப்போது ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதில் ஒரு பகுதி இந்த இடுகை.

சுதந்திர இந்தியாவில் புலிவேட்டை தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில், வெள்ளைக்கார அதிகாரிகளும், சுதேசி சமஸ்தானத்து மன்னர்களும் வேட்டையாடுவதை ஒரு ஆடம்பரமான கேளிக்கையாகவும், தங்கள் வீரத்தை பறைசாற்றும் செயலாகவும் கருதினார்கள்.

யானை மீது வசதியான ஆசனங்களை அமைத்துக்கொண்டு, ஒரு குழுவாக – துப்பாக்கிகள், பைனாகுலர் சகிதமாக காடுகளுக்குள் போவார்கள்.

கூட உதவிக்கு 100 – 200 ஆட்களை திரட்டிக்கொண்டு சென்று, காட்டுக்குள் புதர்களில், குகைகளில் – பதுங்கியிருக்கும் புலிகளை, சத்தம் போட்டு, திறந்தவெளிக்கு வரவழைத்து சுட்டுக் கொல்வது ஒரு வகை.

காடுகளுக்குள், நீர்நிலைகளின் அருகில், மிருகங்கள் இரை தேடி வரக்கூடிய இடங்களை கண்டுபிடித்து, அந்த மிருகங்கள் அங்கே வரத்தூண்டும் வகையில் ஆடு, மாடுகளை கட்டிவைத்து,

தங்களுக்கு மரங்களின் மீது உயரமான, பாதுகாப்பான இடத்தில், மேடை
அமைத்துக் கொண்டு, இரையை புலிகள் தாக்கும்போது, இவர்கள் அவற்றை சுட்டுக் கொல்வது இன்னொரு வகை.

எல்லிஸ். ஆர்.டங்கனை பற்றி ஏற்கெனவே இந்த தளத்தில் விவரமாக சொல்லி இருக்கிறேன். 1935 முதல் 1950 வரை தமிழ்நாட்டில் தங்கியிருந்து பல வெற்றிகரமான தமிழ்ப்படங்களை இயக்கிய ஒரு அமெரிக்கர் அவர்.

அவர் சில செய்திப்படங்களையும் ( documentary ) தயாரித்திருந்தார். அவற்றில் ஒன்றை இங்கே கீழே பதிவு செய்திருக்கிறேன். மத்தியப் பிரதேச காடுகளில், 1940-களில் நடந்த சில புலிவேட்டைகளை அவர் நேரடியாகப் படமாக்கி இருக்கிறார்…..

கீழே – இந்தியாவில் புலி வேட்டை…!!!

..
——————————————————————————————————-

கூடுதலாக, இன்னொரு புலி வேட்டை – இது நேபாளத்தில்….!!!

நேபாளம், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தினுள் வரவில்லை என்றாலும் கூட, பிரிட்டிஷ் அரசுடன் ஒருவித கூட்டணியில் இருந்தது. நேபாளத்தில் கடந்த சுமார் 20 ஆண்டுகளாக ஜனநாயகம் தொடர்பாக ஏற்பட்ட பலவித மாற்றங்களுக்கு முன்னதாக, கடந்த சில நூற்றாண்டுகளாகவே மன்னராட்சி தான் இருந்து வந்தது.

1961-ல் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்- 2, தனது கணவருடன் நேபாளத்திற்கு விஜயம் செய்தார். அவருக்கு நேபாள ராஜ குடும்பத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த விஜயத்தின்போது, பிரிட்டிஷ் அரசி அங்கே நடந்த ஒரு புலிவேட்டையில் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இந்த விஜயம், மற்றும் நிகழ்வுகள் அப்போதே, 1961-ல் பிரிட்டிஷ் செய்தி
ஏஜென்சியான pathe -யால் தயாரித்து வெளியிடப்பட்டது. நண்பர்கள் காண அதையும் கீழே பதிப்பிக்கிறேன்.

அப்போதைய நேபாள அரச குடும்பம், ராணுவம், குடிமக்கள், சமூக சூழ்நிலை பற்றியெல்லாம் சில பின்னணிகளை இந்த செய்திப்படம்
ஓரளவு நமக்கு விளக்குகிறது ….!!!

..
——————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.