ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..? முழு விவரங்கள்….



ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..?
முழு விவரங்கள்….

ரஃபேல் போர் விமானம் சம்பந்தமாக நேற்று ஃப்ரென்ச் முன்னாள் ஜனாதிபதி

வெள்ளியன்று போட்ட குண்டு பலத்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

இது குறித்து, அவ்வப்போது, துண்டு துண்டாக பல செய்திகளை நண்பர்கள்
படித்திருப்பார்கள். அத்தனை விவரங்களும் ஒரே இடத்தில் இருந்தால் –
செய்தியை முழுமையாக தெரிந்துகொள்ளவும், எதிர்காலத்தில் தொடரவும்
உதவும் என்று நினைத்தேன். நான் எழுத முனைந்து, விவரங்களை சேகரிக்கும்போது,

தினமணி வலைத்தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 20-ந்தேதி, அருளினியன்

அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையை பார்த்தேன்… அதை இங்கே பகிர்வதன் மூலம்

முழுமையான விவரங்களை நண்பர்கள் அறிந்து கொள்ள உதவலாமென்று தோன்றியது.

இந்த கட்டுரை ஃப்ரென்ச் ஜனாதிபதி ஹோலந்த் நேற்று தெரிவித்த புதிய தகவல்கள்
வெளியாகும் முன்னர் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

———————————————-

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..?
By அருளினியன் | Published on : 20th September 2018

——–

பிரான்ஸ் நாட்டுடன் அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 1989 தேர்தலில் போஃபர்ஸ் பீரங்கி’ பேரம் பிரச்னையானதுபோல, இது 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக அமையுமா என்ற கேள்வி அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

1999-இல் நிகழ்ந்த கார்கில் போரின் போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன விமானங்களின் தேவையை இந்தியா உணர்ந்தது. 1999, மே தொடக்கத்தில், கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி நிலை கொண்டது. அப்போது, 1989-இல் பிரச்னையான போஃபர்ஸ் பீரங்கிகள்தான், இந்திய ராணுவத்திற்குப் பேருதவியாக இருந்தன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

கார்கில் ஊடுருவலின்போது, 1999, மே 26- இல் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக வான்வழித் தாக்குதலை இந்திய விமானப்படை தொடங்கியது.

ஆனால், அடுத்த நாளே, மிக்-21, மிக்-27 ஆகிய இரு போர் விமானங்களையும், அதற்கு அடுத்த நாள் எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டரையும் இந்திய விமானப்படை இழந்தது. அவை பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன. கார்கிலில் பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இருப்பினும்
பாகிஸ்தான் ஊடுருவலில் இருந்து இந்தியப் பகுதிகளை நமது ராணுவம் 74 நாள்களில் மீட்டது. அப்போதுதான், ரஃபேல் போன்ற அதி நவீன போர் விமானங்களின் தேவையை வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு உணர்ந்தது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையைப் பலப்படுத்தும் நோக்கில் 126 அதி நவீன போர் விமானங்களை வாங்குவதற்கான பூர்வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காங்கிரஸின் ஒப்பந்த முயற்சி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்குப் பிறகு 2004-14 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்த விவகாரத்தில் மும்முரம் காட்டியது. 2007, ஆகஸ்ட் 28-இல் 126 போர் விமானங்களுக்கான முன்மொழிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெளியிட்டது.

இதன்படி, டஸால்ட் ஏவியேஷன், யூரோ ஃபைட்டர் உள்பட ஆறு சர்வதேச நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்பு விலையை முன்வைத்தன.

பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு டஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் டைஃபூன் வகைப் போர் விமானங்கள் உகந்தவையாக இருக்கும் என இந்திய விமானப்படை 2011-இல் தெரிவித்தது. இதில் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்த விலை கோரியிருந்ததால் அந்த நிறுவனத்துடன் 2012- இல் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது.

ரூ.54,000 கோடி மதிப்பில், 126 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதில், 18 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டுப் பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியாவிடம் அளிக்கப்படும் என்றும் –

எஞ்சியுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் (ஹெ.ஏ.எல்.) நிறுவனத்தால் தயாரிக்கப்படும்
என்றும் கூறப்பட்டன.

மேலும், விமானங்கள் தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட்டன. விமானத்தில் பொருத்தப்படும் ஆயுதங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை. அதனால், பேச்சுவார்த்தையின் போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படவிருந்த 108 விமானங்களின் தரத்துக்கு டஸால்ட் நிறுவனம் பொறுப்பேற்க மறுத்தது. அதேசமயம், இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களுக்காக டஸால்ட் நிறுவனம் சார்பில் மனித உழைப்பு 3 கோடி மணி நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தது . ஆனால், சுமார் 9 கோடி மணி நேரம் தேவைப்படும் என ஹெஏஎல் நிறுவனம் தெரிவித்தது. இதனால், டஸால்ட் – ஹெஏஎல் இடையே எழுந்த கருத்து முரண்பாடுகளால், ஜக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 2014-ஆம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை.

பாஜக கூட்டணி ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம்: பின்னர் பாஜக கூட்டணி அரசு 2014-இல் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த விமானக் கொள்முதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் விஜயம் செய்த மோடி, அந்நாட்டுஅரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும்
பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல்

கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விமானத்தின் விலை விவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்திலும், கொள்முதல்
நடவடிக்கைகளிலும் இந்திய தரப்பில் இருந்து எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

புதிய ஒப்பந்தத்தில் தொழில் நுட்பப் பரிமாற்றம் தொடர்பான ஷரத்துகள் இல்லை.

ஆனால், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி, இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் என மத்திய அரசு கூறியது. மேலும், அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வகையில் இந்த விமானங்கள் வடிவமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லக் கூடிய மிராஜ்- 2000 ரக விமானம் மிக விரைவில் சேவையில் இருந்து
நீக்கப்படவுள்ள நிலையில் இந்த விமானத்தின் அவசியம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஒப்பந்த சர்ச்சை:

இந்த ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும்
ரூ. 21,000 கோடிக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கியது.

இந்நிலையில், ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10
நாள்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும்,
இதற்கு மத்திய அரசு உதவியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதற்கு, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தாங்கள் விரும்பும் எந்த இந்திய நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை வழங்கலாம் என்பது ஒப்பந்தம்… அது அவர்களது உரிமை. இந்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை” என்று மத்திய அரசு மறுத்தது.

எஸ்கேஐஎல் இன்ஃப்ரா ஸ்டிரக்சர் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாக, 1997 ஆம் ஆண்டு பிபாவாவ் ஷிப்யார்டு (PIPAVAV SHIPYARD) ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய கடற்படைக்கு போர்க் கப்பல்கள் உள்பட ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் பங்குச் சந்தையில் 2009-இல் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் 17.66 சதவீதம் பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்தால் 2015, மார்ச் 5-இல் வாங்கப்பட்டது.

படிப்படியாக இந்நிறுவனத்தின் 36.5 சதவீத பங்குகளை 2016, ஜனவரியில் ரிலையன்ஸ் வாங்கியது. இதைத் தொடர்ந்து, அனில் அம்பானி இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016, மார்ச் 3-இல் பிபாவாவ் ஷிப்யார்டு நிறுவனம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அண்ட் என்ஜினீயரிங் எனப் பெயர் மாற்றப்பட்டது. 2017, செப்டம்பர் 6-இல் இந்த நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. அந்த நிறுவனத்துடன்தான் இப்போது ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

126 போர் விமானங்களை ரூ.54,000 கோடியில் கொள்முதல் செய்ய காங்கிரஸ் அரசு
பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது, ரூ.60,000 கோடியில் 36 விமானங்களை
மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால், இதில் பெரும் ஊழல் உள்ளதாக
காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்தது.

‘காங்கிரஸ் ஆட்சியின் போது விமானங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருந்தன. அந்த விலை நிலவரம் விமானங்களின் விலைக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில் அனைத்து நவீன போர்க் கருவிகளும் பொருத்தப்பட்டே புதிய விலை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, போர் கருவிகள் பொருத்தப்படாத விமானத்தின்
விலையையும், போர்க் கருவிகள் பொருத்தப்பட்ட விமானத்தின் விலையையும் ஒப்பிடுவது தவறு’ என மத்திய அரசு கூறுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரக் குழு அமைத்து இந்த ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

இச்சூழ்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் இந்த ஒப்பந்தம் விவகாரம் பாஜகவுக்கு
சவாலாக அமையுமா? காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் துருப்புச்சீட்டாக
இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

காங்கிரஸ் கிடுக்கிப்பிடியும் அரசின் பதிலும் –

இந்த ஒப்பந்தத்தில் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தை தவிர்க்கக் காரணம்
என்ன என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருக்கிறது. இந்தியாவில் தயாரிப்பு என்று
கூறிவிட்டு, வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம்
என்ன என்பது காங்கிரஸின் கேள்வி.

இந்திய அரசின் விமானம் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம்
இருக்கும்போது, உதிரிபாகங்களைத் தயாரிக்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
நிறுவனத்துடன் ரூ.21,000 கோடிக்கான ஒப்பந்தம் ஏன் போடப்பட வேண்டும்? அதை
இந்திய அரசு நிறுவனத்துக்கு ஏன் பெற்றுத்தரவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின்
கேள்வி.

காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவிருந்த முந்தைய ஒப்பந்தத்தின்படி, 118 விமானங்கள்
இந்தியாவில் தயாரிக்கப்பட இருந்தன. இதனால், ஹெஏஎல் நிறுவனம் அந்த
ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால் புதிய ஒப்பந்தப்படி பறப்பதற்கு தயார்
நிலையில் உள்ள விமானங்கள் கொள்முதல் செய்யப்படுவதால் ஹெஏஎல் நிறுவனத்தின்
பங்களிப்புத் தேவை ஏற்படவில்லை’ என்கிறது மத்திய அரசு.

விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பிரான்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்றும் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.

ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது, உதிரிபாகங்களை எங்கள் அரசு நிறுவனங்கள் வழங்கும் என்று அரசு ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மறைமுகமாக அனில் அம்பானிக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தமா என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஐயப்பாடு.


மத்திய அரசு சறுக்கிய இடங்கள்..!

1 .ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க
முடியாது என மத்திய அரசு கூறுகிறது. இது இந்த ஒப்பந்தத்தில் ஊழல்
நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகளின் கூறும் குற்றச்சாட்டை வலுப்படுத்துவதாக
நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், ரூ. 60,000 கோடி வரிப்பணம் தொடர்பாக கேள்வி
கேட்கும் உரிமை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளுக்கு இல்லையா
எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2 .தேசப் பாதுகாப்பு கருதி ரஃபேல் விமானத்தின் முழுமையான விலை விவரத்தை
வெளியிட முடியாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறும் விளக்கம்
ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என சில பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

3 .ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் பெரும்பாலானவை ஆயிரக்கணக்கான கோடி
மதிப்பிலானவை. போஃபர்ஸ் பீரங்கி ஊழலுக்குப் பிறகு அனைத்து பிரம்மாண்ட ராணுவ
ஒப்பந்தங்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வழக்கம் தற்போது உள்ளது.

இந்நிலையில், வெளிப்படைத் தன்மையின்றி அவசர கதியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பெரும் வாய்ப்பை கொடுத்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

4 .அனில் அம்பானி பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர். இவரது
நிறுவனம் பல சர்ச்சைகளைச் சந்தித்ததாகும். பிரதமர் மோடியின் 2015, ஏப்ரல்
பிரான்ஸ் விஜயத்தில் இவரும் பங்கு கொண்டார். இதுதான் சர்ச்சைக்கு முக்கியக் காரணம்
என நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. 2005-இல் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார்;

அதேபோல, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை அழைத்து
விளக்கம் அளிப்பது மத்திய அரசின் கடமை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..? முழு விவரங்கள்….

  1. Bose's avatar Bose சொல்கிறார்:

    Finance bill for 2014: defense: equipment of the forces and technological excellence of the defense industries “(in French) Senate of France, 21 November 2013. Retrieved 2 July 2014.” Before taking into account the draft LPM, the The total cost of the program for the State was € 45.9 billion 2013. The unit cost (excluding development costs) of € 74 million for the Rafale B (for 110 aircraft) of € 68.8 million for the Rafale C (for 118 aircraft) and € 79 million for the Rafale M ( for 58 aircraft). ”
    Translated: Before taking into account the draft Trademark Law, the total cost of the program for the state was 45.9 billion € 2013. Unit cost (excluding development costs) of € 74M 2013 for the Rafale B (110 aircraft) € 68.8M 2013 for the Rafale C (for 118 aircraft) and € 79m 2011 for the Rafale M (58 aircraft). ”

    Above the details from Wikipedia in which the higher end model costs 74m Euros which is 628Cr indian rupees. If the govt says 1600Cr per flight then what kind of additional fittings they are going to fix in these 36 aircrafts? 1000Cr worth of what?

  2. பிங்குபாக்: ரஃபேல் போர் விமானம் : என்ன முறைகேடு..? ஏன் விவாதம்..? முழு விவரங்கள்…. – TamilBlogs

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    // அந்த ராணுவ ரகசியம் இதுதானா? 2014ல் மோடியுடன் பிரான்ஸ் சென்ற அம்பானி.. வெளியான ரபேல் ஆதாரம்! //

    https://tamil.oneindia.com/news/india/rafale-deal-big-blow-bjp-after-france-released-its-meeting-details-
    330371.html. ….அவர்களுக்கு ஒரு பீரங்கி …இவர்களுக்கு விமானம் …மக்களுக்கு ….?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      செல்வராஜன்,

      இந்த லிங்க் open ஆக மாட்டேனென்கிறது…
      வேறு விதத்தில் கொடுக்க முடியுமா பாருங்களேன்…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! லிங்க் மறுமாெழியில் பதிவாகவில்லை …அதனால் : https://tamil.oneindia.com/news/india/rafale-deal-big-blow-bjp-after-france-released-its-meeting-details-330371.html

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      மெர்சி… என்னுடைய கருத்து, நமது நாடு, பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களுக்கானதல்ல. நாம பெரும்பாலும், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள்ல, எத்தனை சதவிகிதம் நேர்மையாக, பணி செய்வதில் மும்மரமாக இருப்பவர்களைப் பார்த்திருக்கிறோம்? நம்ம மனசாட்சியைக் கேட்டால் அது ஒற்றை டிஜிட் சதவிகிதத்தைத் தாண்டாது. அந்த 3 சதவிகித மக்களுக்காக நாம் ஏன் அரசு/பொதுத் துறைகளை ஆதரிக்கவேண்டும்?

      இன்றைக்கு நாம் என்ன செய்கிறோம்? தனியார் துறையைத்தான் நாடுவோம், நாடுகிறோம், வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம். அவ்வளவு மோசமாக அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.

      அதனால் பேருந்துகள், இரயில் போன்ற எல்லாம் தனியார் மயமானால் நாட்டுக்கு நல்லதுதான். அவர்களுக்குள் போட்டி இருக்கட்டும். யார் நல்ல செர்வீஸ் தருகிறார்களோ அவர்களுக்கு நம் ஆதரவைத் தருவோம். முதலில் அரசுத்துறை என்ற ஒன்றே இருக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பம் (இது இந்தியாவிற்கு மட்டும் பொருந்தும். வெளி தேசத்து மக்கள், தங்கள் நாட்டின்மீதும், தங்கள் வேலையின் மீதும் கொண்டிருக்கும் பொறுப்புணர்வை நான் பார்த்தவன் அனுபவித்தவன் என்ற முறையில்)

      அரசு, வருமான வரி போன்ற வரவுகளை, ஹெல்த் இன்ஷூரன்ஸ், கல்வி வசதி (12ம் வகுப்பு வரை மட்டும்), சாலை வசதி, குடிதண்ணீர், மக்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளில் மட்டும் கவனம் செலுத்தட்டும்.

      • Mani's avatar Mani சொல்கிறார்:

        புதியவன்

        தனியார் துறை என்ன இவர்களின் அப்பன் சொத்தா ?
        பிரதமரின் நெருங்கிய தொழிலதிபர்கள் என்று சொல்லிக் கொள்ளும்
        திருடர்களுக்கு மட்டும் அள்ளிக்கொடுக்க ?
        பிரதமவருக்கு நெருக்கமான 15-20 தொழிலதிபர்களை விட்டால்
        130 கோடி இந்தியர்களில் தொழில் செய்யும் வேறு நபர்களே இல்லையா ?

        • Mani's avatar Mani சொல்கிறார்:

          எல்லா தொழில்களும் திரும்ப திரும்ப இவர்களுடைய
          ஆதிக்கத்தீற்கே போவது எப்படி ?
          இதன் பெயர் தானே க்ரொனி கேபிடலிசம் ?

  5. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    புதியவன் சார் சொல்வது ரொம்ப சரி:

    “எல்லாவற்றையும் தனியார் துறைக்கு விட்டு விட வேண்டும்.”

    நமக்குத் தெரிந்து –
    டெலிபோனை – முகேஷ் அம்பானிக்கும்,
    டிஃபென்ஸை (பாதுகாப்பு உற்பத்தி) – அனில் அம்பானிக்கும்,
    மின்சாரத்துறையை – அடானிக்கும் ஏற்கெனவே கொடுத்தாச்சு.

    மிச்சம் இருக்கும் மோடிஜியின் குஜராத்தி நண்பர்கள் –
    (தனியார் துறை என்றால் அவர்கள் தானே. ? )
    யார் யாருக்கு என்னென்ன துறை வேண்டுமென்று கேட்டு
    கட்கரிஜியிடம் பொருத்தம் கேட்டு (அவர் தானே வசூல் பொறுப்பாளர் ?)
    நல்ல நேரம் பார்த்து கொடுத்து விடலாம்.
    புதியவன் சார் (அடுத்த 7 மாதங்களுக்குள் வருகிறபடி) சீக்கிரம் முகூர்த்தம் பார்த்து கொடுக்க வேண்டும் – தாரை வார்ப்பதற்கு..

  6. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    மேலே விடுபட்டு விட்டது:

    நிலக்கரியும் அடானிக்கு தான்.
    துறைமுகங்களும் அடானிக்கு தான் – ஏற்கெனவே book ஆகி விட்டது.
    மிச்சம் இருப்பதை வேண்டுமானால் மற்ற நண்பர்களுக்கு கொடுக்கலாம்.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      @ அரவிந்தன் – சார்.. உங்க ஆதங்கம் சரிதான். காங்கிரஸ், அவங்களுடைய தொழிலதிபர்களுக்குக் கொடுத்தாங்க. அப்புறம் வாத்ராவுக்குக் கொடுத்தாங்க (அரசாங்க இடத்தை). இங்க கருணாநிதி, தன் ஆளுக்கு பாலம் கட்ட, அரசு ஆஸ்பத்திரி கட்ட (நான் பெட்ரோல் டேங்கைச் சொன்னேன்), ஸ்டார் இன்ஸ்யூரன்ஸ் என்று அரசுப் பணத்தைத் தாரைவார்த்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கா, தயாநிதிக்கு மந்திரி பதவி கூடாது என்பதற்காக டாடா, அவருடைய நிலத்தை ராஜாத்தி அம்மாளுக்குக் கருணாநிதியின் கட்டளை பேரில் கொடுத்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வந்ததே (வோல்டாஸ்).

      இப்போ பாஜக அவங்களுக்குத் தோதுபடுபவர்களுக்கு கொடுக்கறாங்க.

      நாமே ஒரு கம்பெனி ஆரம்பித்தால் என்ன செய்வோம், நமக்குத் தோதான ஆட்களைத்தானே வேலைக்கு வச்சுப்போம்.

      நான் பாஜக செய்வதை சரி என்று சொல்லலை. ஆனால் நடைமுறை அப்படித்தான் இருக்கு. இதை யார் சரி செய்வது?

  7. Sekar's avatar Sekar சொல்கிறார்:

    //இப்போ பாஜக அவங்களுக்குத் தோதுபடுபவர்களுக்கு கொடுக்கறாங்க.

    நாமே ஒரு கம்பெனி ஆரம்பித்தால் என்ன செய்வோம், நமக்குத் தோதான ஆட்களைத்தானே வேலைக்கு வச்சுப்போம்

    .நான் பாஜக செய்வதை சரி என்று சொல்லலை. ஆனால் நடைமுறை அப்படித்தான் இருக்கு. இதை யார் சரி செய்வது?//

    Vow. You have found out a new method of supporting BJP indirectly.

    So you also support PROSTITUTION because practically it is prevalent.
    BJP fanatics nowadays found out that their open support faces negative re-action
    from the Public; so found out new technic.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      சேகர் – நான் கருணாநிதி கும்பல், காங்கிரஸ் தலைமை, வாத்ரா போன்றவர்கள் செய்ததையும் ஆதரிக்கலை, பாஜக தலைமை இப்போது செய்துள்ளதையும் ஆதரிக்கலை. அதைவிட இதனை ஜஸ்டிஃபை செய்து பேசும் பாஜக பேச்சாளர்கள் பிரதமரின் இமேஜை இன்னமும் குறைக்கிறார்கள்.

      உங்கள் கோபத்தை எழுத்தில் காண்பிப்பதன் மூலம் நீங்கள் கருணாநிதியை அவமரியாதை செய்கிறீர்கள் என்பது ஒருபுறமிருக்கட்டும், அந்த இண்டஸ்டிரி பற்றியும் உங்களுக்குத் தெரியலை. நாம பொதுவா, மது கெடுதல், சிகரெட் கெட்டது, குட்கா உடலுக்குத் தீங்கு என்று வாய் நிறையப் பேசுவோம், அரசியல்வாதிகள் சொல்லும்போது தலையாட்டுவோம். நாம் சொல்வதை நாம் கடைபிடிப்பதில்லை, அரசியல்வாதிகள் மேடையைவிட்டு இறங்கியதும் அவரவர் பிசினெசில் இறங்கிவிடுவார்கள். இதுதான் உங்கள் பின்னூட்டம் படித்ததும் எனக்குத் தோன்றியது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.