பாவம்…. நாயும், பங்குச்சந்தையும் … புரிந்துகொள்ள இவ்வளவு நேரமா…!!!


நேற்று காலை 11 மணிக்கு துவங்கி 12.55 -க்கு முடிந்து விட்டது
பிரசங்கம்….

GIF -ல் உள்ள இந்த வீடியோவை இங்கு wordpress -ல் பதிவிடும் வசதி இல்லை…!!! எனவே, புகைப்படமாக …..

ஏதோ இருக்கின்றதென்று நினைத்து வெறும் நிழலை,
இல்லாத ஒன்றை, மீண்டும் மீண்டும் துழாவிப் பார்க்கும் இந்த நாயின் நிலையும், இந்திய பங்குச்சந்தையின் நிலையும் ஒன்றாகி விட்டதே…!!!

நேற்று முழுவதும் தாக்குப் பிடித்து,
இன்று பூராவும் அலைந்து, திரிந்து – இறுதியில் மாலையில்
முடிக்கும்போது 839.91 புள்ளிகள் சரிவடைந்திருக்கின்றன…



எதையும் உடனடியாக பிரதிபலிக்கும்
பங்குச்சந்தையே புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு
அதிபுத்திசாலித்தனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது….!!!

இந்த நாட்டின் சாமான்யர்கள் எம்மாத்திரம்….?

வாழ்க வளமுடன்…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to பாவம்…. நாயும், பங்குச்சந்தையும் … புரிந்துகொள்ள இவ்வளவு நேரமா…!!!

  1. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஏமாற்றுதல் என்று சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இதில் இருக்கின்றன.

    உதாரணத்திற்கு பெட்ரோல் /டீசல் விலையை குறைக்க அதை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரவேண்டும் என்று நிறைய அழுத்தம் வர ஆரம்பித்து விட்டது. நீண்டகாலத்திற்கு அதனை தள்ளிப்போட முடியாது.
    எனவே, சந்தடி சாக்கில், சத்தமே இல்லாமல், பெட்ரோல், டீசலுக்கான எக்சைஸ் வரியிலிருந்து எட்டு ரூபாயை Road Tax என்று பட்ஜெட்டில் மாற்றி விட்டார்கள்.
    இனி பெட் ரோல், டீசல் – ஜிஎஸ்டிக்குள் போனாலும், ஜிஎஸ்டியை தவிர
    Road Tax என்று ஒவ்வொரு லிட்டருக்கும் 8 ரூபாய் தனியே கொடுக்க வேண்டி இருக்கும்….
    இது போலவே வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிக்கும் form-ல் சில திருத்தங்கள்… சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கூட , மிக மோசமாக பாதிக்கக்கூடியவை…

    இன்னும் நிறைய …. பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது தெரிய வரும்.
    கெட்டிக்காரர்கள்…. சொந்த நாட்டின் மக்களையே ஏமாற்றுவதில்…!

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இதற்குச் சம்பந்தமில்லாத செய்தி.

    பசுக்கள் புனிதமானவை என்பது சரிதான். ஆனால், அவைகளை வளர்க்கவேண்டுமா, பாதுகாக்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை யார் முடிவு செய்வது? மத்திய அரசு இதற்காக 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. எனக்கும் பசுக்களின்மீது பெரும் கருணை, கோமாதா என்ற சென்டிமென்டெல்லாம் உண்டு. (அதே சென்டிமென்ட் மற்ற உயிர்களின்மீதும் உண்டு. உயிர்க் கொலையை வெறுக்கிறேன்).

    ஒருவேளை அரசு, ‘ஆதரவற்ற பசுக்களைப் பராமரிக்கும்’ நிலையங்களுக்கு பணம் கொடுப்போம் என்று சொல்லியிருந்தால் (அதைப் போன்று பலர் செய்கின்றனர், தமிழ்’நாட்டிலேயே), என்னால் ஜீரணிக்க முடிந்திருக்கும். பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவோம், அதற்கு 50 கோடி நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் ஆரம்பிப்பது, எதற்கு முன்னுரிமை என்பதே இந்த அரசுக்குத் தெரியவில்லை என்றுதான் என்னை நினைக்கவைக்கிறது.

    Govt must protect the interests of Hindus. But they are responsible for all Indians. They must protect சமூகத்தின் சமச்சீர். Govt can not take this kind of steps. எனக்கு இவைகள் ஏற்புடையதல்ல.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.