…
…

…
நேற்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் செய்த புரட்சி, இந்திய அரசியல் மற்றும் நீதித்துறையையே ஒரு உலுக்கு உலுக்கி விட்டது…. இவற்றிற்கான சில காரணங்கள் உரத்து சொல்லப்பட்டன; சில காரணங்கள் மெல்ல சொல்லப்பட்டன.
ஆனால் – அடிப்படை காரணம் – பாஜகவின் அகில இந்திய தலைவரைப் பற்றிய வழக்கை விசாரித்து வந்த மும்பை நீதிபதி ஜஸ்டிஸ் லோயா சந்தேகத்துக்கு உள்ளான விதத்தில் மரணம் அடைந்ததும்,
அது தொடர்பான வழக்கு – அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டதும்
தான் ….
இந்த வழக்கு பற்றிய விவரங்கள் ஏற்கெனவே, நவம்பர் மாதம் இந்த வலைத்தளத்தில் விவரமாக பதியப்பட்டிருந்தது. முன்பு அதை படிக்காதவர்கள் அல்லது இப்போது மீண்டும் அதை நினைவு படுத்திக்கொள்ள விரும்புபவர்களின் வசதிக்காக கீழே அவற்றின் தொடர்பு லிங்க்கை கொடுக்கிறேன்.
1) பாஜக தலைவர் அமீத் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி கொலை செய்யப்பட்டாரா…? ( நவம்பர் 26, 2017)
…
3) மங்களம்… சுப மங்களம்…. ஜஸ்டிஸ் லோயா இறப்பு கதை முடித்து வைக்கப்பட்டது….! ( நவம்பர் 29, 2017 )
……………….
தலைமை நீதிபதியின் செயல்பாட்டு முறைகள் குறித்து மற்ற சீனியர் நீதிபதிகளுக்கு ஏற்கெனவே பல பிரச்சினைகள் இருந்தபோதும், இது குறித்து ஏற்கெனவே – அவர்கள் பலமுறை நேரடியாக விவாதித்து வந்திருந்தும், நேற்று திடீரென்று இது பொதுவெளிக்கு வந்ததற்கான provocation ( தூண்டுதல்
நிகழ்வு) என்று சொல்லப்படுவது குறித்து –
முதலில் – ஜஸ்டிஸ் லோயா மரணம் குறித்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தால் எத்தகைய சூழ்நிலையில் முடித்து வைக்கப்பட்டது என்பதை குறித்து – முந்தைய இடுகையின் ( மங்களம்… சுப மங்களம்…. ஜஸ்டிஸ் லோயா இறப்பு கதை முடித்து வைக்கப்பட்டது….! ( நவம்பர் 29, 2017 )
– மூன்றாவது பகுதியில் காணலாம்….
ஜஸ்டிஸ் லோயா அவர்களின் மகனிடமிருந்து இவ்வாறு ஒரு கடிதம் பெறப்பட்டதும், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அந்த மகன் தன்னிச்சையாக இந்த கடிதத்தை கொடுத்தாரா –
அல்லது யாருடைய வற்புறுத்தல் அல்லது பயமுறுத்தலுக்கு
உட்பட்டு இப்படிச் செய்தாரா என்கிற சந்தேகம் இயற்கையாகவே
எழுந்தது.
அந்த குடும்பம் பயமுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருதி, மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் ( advocates association ), மும்பை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் ஒரு மனுவை கொடுத்தது. ஜஸ்டிஸ் லோயா அவர்களின் இறப்பை குறித்த சந்தேகங்களையொட்டி, ஒரு SIT (Special Investigation Team ) அமைக்கப்பட்டு, அவரது இறப்பு குறித்த பின்னணி
முழுவதுமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று…கோரி.
இந்த இடத்தில் – மிக தந்திரமாக ஒரு குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கை தான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பின்வரும் விவரங்களை கவனமாக படித்தால் அது புரிய வரும்.
அந்த மனுவை மும்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு உத்திரவிட்டால் – சாதகமோ, பாதகமோ – எது வேண்டுமானாலும் விளையலாம்; மற்றொரு முக்கிய விஷயம், அதில் வரக்கூடிய தீர்ப்பை எதிர்த்து – மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு போக விண்ணப்பதாரர்களுக்கு ஒரு
வாய்ப்பு கிடைக்கும்.
மாறாக, இந்த மனு, நேரடியாக உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் – மேற்கொண்டு ஒரு அப்பீல் செய்வதற்கான வாய்ப்பை இழப்பார்கள்.
அந்த வாய்ப்பை மறுக்கும் விதமாகவும், உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலும் இன்னொரு குழு – உச்சநீதிமன்றத்தில் இதே கோரிக்கையை முன்வைத்து ஒரு மனுவை தந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில், அது முதல்கட்ட விசாரணக்கு வந்தபோது, மும்பை வழக்கறிஞர்கள் சங்க சார்பில் – தாங்கள் ஏற்கெனவே இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், தற்போதைக்கு உச்சநீதிமன்றம் இதை விசாரணைக்கு அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டதையும் மீறி, மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த விசாரணை. தலைமை நீதிபதியால் – ஜஸ்டிஸ் அருண் மிஸ்ரா என்கிற ஒரு இளைய நீதிபதியின் அமர்வில் விசாரணைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
4 மூத்த நீதிபதிகளின் நேற்றைய புரட்சிக்கு முக்கிய காரணமே, அவர்கள் – நேற்று காலை, தலைமை நீதிபதியை சந்தித்து – உச்சநீதிமன்றத்தின் மாண்பையும், மக்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் உறுதி செய்ய வேண்டுமானால், (இது போன்ற) பொது முக்கியத்துவம் வாய்ந்த
வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை மீறி, இந்த வழக்கு ஒரு ஜூனியர் நீதிபதியின் அமர்வுக்கு அனுப்பப்பட்டதோடு, அவர், வெள்ளியன்று காலை, இந்த வழக்கை விசாரணைக்கும் எடுத்துக்கொண்டு விட்டார்.
இந்த விஷயம் குறித்து, பொதுவெளியில் நிறைய விவாதங்கள்
உருவாகும்… தேவைப்படும்போது நாமும் அதில் சேர்ந்து கொள்ளலாம் என்பதோடு இப்போதைக்கு இந்த இடுகை முடிவு பெறுகிறது.



How these judges explain how many cases were pending in the high courts and how despite them SC entertained appeals and enabled the accused prolong the case which finally end in acquittal.e.g2G.Dhinakaransvarious cases and a host of cases in which hearing dates are postponed for months,What prevents the SC to refuse to entertain midterm appeals instead of directing the m to await decision of the lower court and come up on appeal,Even in this case how they could decide the judge may not direct them to go to the lower court.It appears more than meets the eye in the whole episode and this only proves the judiciary is also afflicted by politics.AT.Thiruvengadam