…
…
கீழே இருப்பது இன்று மாலை வெளிவந்திருக்கும் ஒரு செய்தி(மட்டுமே..)!!!
இதில் என் பங்கு ஒன்றும் இல்லை ( தலைப்பு, புகைப்படம் தவிர…!!! )
———————————————————————-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சின்னமான பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பல்வேறு விதமான அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. இவையெல்லாம் ஒருபுறமிருக்க, ரஜினியின் அந்தச் செயல் பாரதிய ஜனதா கட்சியினரை அதிலும் குறிப்பாக, தமிழிசை சௌந்தரராஜனைக் கடுப்பேற்றியிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன. அதை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை பத்திரிகையாளர்கள் மத்தியில், ரஜினியை மிகக் கடுமையாகத் தமிழிசை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
இது குறித்த பின்னணித் தகவல்களுக்குச் செல்வதற்கு முன்பாக, திருச்சி விமான நிலையத்திலும் புதுக்கோட்டை பாலன் நகரிலும் அட்சரம் பிசகாமல் தமிழிசை பேசியதை முதலில் பார்த்துவிடுவோம்.
“ரஜினியின் ஆன்மிக அரசியல் புதிய விஷயமில்லை. ஆண்டாண்டு
காலமாகத் தமிழ்நாட்டில் இருக்கிற விஷயம்தான். அது தமிழ்மொழியில் இருக்கிறது. அது ஆன்மிகத் தமிழாக இருக்கிறது.
நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிவனடியார்களும் பாடல்கள் மூலமாகவும் பாமாலைகள் மூலமாகவும் ஆன்மிகத்தைத் தமிழ்மொழி மூலம் வளர்த்தார்கள்.
ஆகவே, ரஜினி சொல்கிற விஷயம் புதுதில்லை. அவர் இன்னும் நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கவில்லை. முதலில் குதிக்கட்டும்.
மக்கள் பிரச்னைகளை முன்னெடுத்து அரசியல் நடத்தட்டும். தமிழ்நாட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அதேபோலதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் பா.ஜ.க இருப்பதாக ஒரு கும்பல் சொல்லிக்கொண்டுத் திரிகிறது. அதில் கொஞ்சமும் உண்மை இல்லை” என்ற தனது காட்டமான கருத்துகளை வழக்கம்போலவே சிரித்தமுகத்துடன் சொன்னார் தமிழிசை.
இத்தனைக்கும் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததுமே, முதல் நபராக, முதல் தலைவராக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து சொன்னவர் தமிழிசை.
அப்படிப்பட்டவர், இன்றைக்கு ரஜினிக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க என்ன காரணம். “ரஜினி தனது சின்னமாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலரை
நீக்கியிருப்பதுதான் காரணம்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

முன்பு இருந்த சின்னம் – கீழே
தாமரையுடன்…
…

மாற்றப்பட்ட சின்னம் ..
(தாமரை இல்லாமல்…)
…
“ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் மோடியும் அமித்ஷாவும் இருக்கிறார்கள் என்று தமிழக பி.ஜே.பி-யினரே பரப்பிவருகிறார்கள்.
அது உண்மையோ இல்லையோ. விஷயம் அதுவல்ல. என்னமோ ரஜினிக்கு அரசியல் தெரியாது என்பது போலவும் பி.ஜே.பி.யினர்தான் கற்றுத் தருகிறார்கள் என்பது போலவும் அவர்கள் பேசி வருவதும் அதற்கு ஆதாரமாக, ரஜினியின் கொடியில் தாமரை இருப்பதையும் பி.ஜே.பி.யினர் சுட்டிக் காட்டினார்கள்.
இந்தத் தகவலை அறிந்த ரஜினி, தேவையில்லாத சலசலப்புகளுக்கு இடம்கொடுக்காமல் ஆரம்பத்திலேயே அதைக் கிள்ளிவிட்டார்” என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
மேலும் அவர்களே தொடர்ந்து, “தாமரையை ரஜினி நீக்கியத் தகவல் இன்று காலை சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் பயணம் செய்த தமிழிசையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவரது சின்னத்தில் ரஜினி மாறுதல் செய்வது அவரது விருப்பம் என்றாலும் இந்தச் செயல் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியைப் பாதிக்கும் என்பதால், ரஜினியை எதிர்ப்பதுபோல் பேட்டி அளித்து, ஒரு தற்காப்பு ஆட்டத்தை ஆரம்பத்திலேயே தமிழிசை ஆடிவிட்டார்” என்கிறார்கள்.
(https://www.vikatan.com/news/tamilnadu/112570-tamilisai-soundararajan-
criticise-rajini-entering-politics.html )



கொச்சியில் கொசு மிக அதிகமாக இருக்கின்றது.
இதற்கு பா.ஜ.கட்சிதான் காரணம் என சொல்லப்படுகிறது.
அமொிக்காவில் விசா கட்டுப்பாட்டுக்கு பா.ஜ.கட்சிதான் காரணம்.
மதுரை விளக்குதுாண் ஜவுளிக்கடை தீப்பிடித்ததற்கு காரணம் பா.ஜ.கட்சிதான் காரணம்.
எதையும் பொருமையாக இருந்து நடந்த விசயங்களின் ஆரம்ப புள்ளியின் கரு என்ன?என்பதைத் தெரிந்து யாரும் எழுதுவதுமில்லை,பேசுவதுமில்லை.
அனைவருமே ஊகங்களின் அடிப்படையிலும்,அவரவரது விருப்பு,வெறுப்க்கேற்ப
செயல்படுகிறார்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
இப்படி சில உதாரணங்களை கொடுத்து விட்டால் உண்மை இல்லை என்றாகிவிடுமா?
அஇஅதிமுக-வை இயக்குவது மோடி கூட்டம் என்று எல்லோரும் குற்றப்படுத்தி வந்த போது அதை இரு சாராரும் மறுத்து வந்தார்கள். ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் வெளியான உடன் நாறிப்போனதே நினைவில்லையா?
ஆர்எஸ்எஸ் / பாஜக ஆட்களுக்கு பொய் தானே மூலதனம்.
ஆக, தீயது நடந்தால் பாஜக தான் காரணமாக இருக்க முடியும் என்று ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.
lets make MODI more popular by using his name always and bring success on subsequent elections for BJP..
Thanks
நல்லவர்கள் மட்டும் பாப்புலர் ஆவதில்லை. தீயவர்களும் ஆவது உண்டு தான்.
ஒருவர் எதற்காக நினைவு கூறப் படுகிறார் என்பது முக்கியம்.
வெற்றி ஒருவரின் தரத்தை வெளிப்படுத்துவனவல்ல. அதை எப்படியும் பெற்றுவிடலாம்.
அது நிரந்தரம் அல்ல.
Morale is high qualified.
அது இப்போது இருக்கின்ற எந்த தலைவர்களுக்கும் இல்லை. உம்ம தலைவர் உட்பட.
இந்தச் செய்தியை இரண்டு நாட்கள் முன்பே படித்தேனே. என் கருத்து ‘தமிழகத்தை’ மட்டும் கருத்தில் கொண்டது.
ரஜினி முன்வைக்க நினைப்பது ஓரளவு நேர்மையான மனசாட்சிக்கு விரோதமில்லாத அரசியல். அதனைத்தான் ‘ஆன்மீக’ என்று குறிப்பிடுகிறார். அவர் ‘தாமரை’யை நீக்கியதும் சரியே. (தாமரை என்பது ஆன்மீகத்தைக் குறிக்கும், ஆனால் அது பாஜக லிங்க் என்ற பேச்சு வந்ததைக் கவனித்தவுடன் அதனை நீக்கியிருக்கிறார். முன்னம் இருந்த LOGOவில் தாமரை இருந்தது. இது தற்செயலாக-அதாவது பாஜகவின் சின்னம் தாமரை என்பதைக் கவனிக்காமல்-நிகழ்ந்ததாகத்தான் எனக்குப் படுகிறது ). இன்னொன்று, யாரிடமும் வாக்கு இருக்கிறதா, எப்படி அவர்களைத் தன்னுடன் இழுத்துக்கொண்டு, பாஜக வாக்குகளை உயரவைக்கலாம் என்று தமிழக பாஜக அலைவது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. தமிழகத்துக்கு நன்மை எதுவும் செய்யாமல், வாக்குகளை மட்டும் பெறவேண்டும் என்று நினைப்பதிலிருந்து, தமிழக பாஜக, கள நிலவரத்தையோ அல்லது பொதுமக்கள் எண்ணத்தையோ சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பது தெரிகிறது.
தமிழகத்துக்கு நன்மை செய்ய பாஜக தேவையில்லை. ஆனால் தமிழக ஆளும் கட்சி, மத்திய அரசுடன் நிர்வாக ரீதியிலான நட்புணர்வைப் பேணுவது ஓரளவு நன்மை பயக்கும்.