…
…
இபிகோ 415, 420 பிரிவுகளின் கீழ் உள்ளே தள்ளப்பட வேண்டிய – சட்டவிரோத, சமூக விரோத – கும்பலை தமிழகத்தில் பல நாளிதழ்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் – விளம்பரம் கொடுத்து வேடிக்கை பார்க்கும் நேரத்தில் –
பத்திரிகையின் பரபரப்புக்காக என்று வைத்துக் கொண்டாலும் கூட, அவர்களின் சமூக விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் வகையில் செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள ஜூனியர் விகடன் இதழுக்கு
இந்த வலைத்தளத்தின் சார்பில், நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (ஜூ.வி.கட்டுரை கீழே…! )
தமிழ் நாட்டில், பெரும்பாலான நாளிதழ்களும் சரி, தொலைக்காட்சிகளும் சரி, தங்களுக்கான கடமை என்று எதுவும் இருப்பதாகவே நினைக்கவில்லை….
டெலிரேட்டிங்குக்காகவும், பத்திரிகை விற்பனைக்காகவும் – பொறுக்கித்தனங்களையும், ரவுடித்தனங்களையும், மோசடி, தில்லுமுல்லு வேலைகளையும், ஹீரோயிசம் போல் சித்தரித்துக் காட்டும் பொறுப்பற்றதனம் இங்கே நிலவுகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரங்களிலும், ஓட்டு சேகரித்த விதத்திலும் நடந்த மோசடி வேலைகளை மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டினவே தவிர, தவறு என்று சுட்டிக் காட்டவே இல்லை… வெளிப்படையாக கண்டிக்கவே இல்லை…
சமூகத்தில் – பொதுவெளியில், வெளிப்படையாக நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதோடு, கடுமையாக கண்டிப்பதும் தங்கள் கடமை தான் என்பதை தமிழக ஊடகங்கள் எப்போது உணரப்போகின்றன…?
ஜூ.வி.கட்டுரை –
…

…

…




காசு வாங்கும் மக்களுக்கு இந்தச் சட்டமெல்லாம் இல்லையா? கஞ்சா விற்றார்கள், அதனால் வாங்கினேன், வாகனத்தில் அழகிகள் வந்தார்கள், அதனால் மயங்கினேன், என்றெல்லாம் நம் குற்றத்தைக் கைகழுவிவிட முடியுமா? இருவரும் (தினகரனும், டோக்கன் வாங்கி வாக்களித்த தொகுதி மக்களும்) குற்றவாளிகள்தான். இதை அரசியல் கட்சிகள் கேள்வி கேட்க முடியாது. பத்திரிகைகளும் ஏன் மக்களைக் குற்றவாளியாக்குவதில்லை?
புதியவன்,
மக்களை குறை சொல்லவில்லை என்று சொல்ல முடியாது. எல்லாருமே தான் ஆர்.கே.நகர் மக்களை கிண்டல், கேலி செய்கிறார்களே.
என்ன – அவர்களை தனிப்பட identify செய்ய முடியாதென்பதால், குறிப்பாக யாரையும் சொல்வதில்லை.
ஆனால், தலைவர்கள் அப்படி அல்லவே. அவர்களை சுலபமாக identify பண்ண முடியும். அதனால் தான் குறிப்பிட்டு சொல்கிறேன்.
இருந்தும் கூட, நீங்கள் இரு தரப்பினரையும் ஒரே நோக்கில் காண்பது சரியல்ல. ஒரு பக்கம், வசதியற்ற, பலவீனமான ஏழை மக்கள். சுலபமாக காசு கிடைக்கும்போது அதை வேண்டாமென்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை அவர்களது சமூக நிலை.
திமிர் பிடித்த, தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ள, பலவீனமான மக்களை பயன்படுத்திக்கொள்ளும் கொள்ளைக்கார அரசியல்வாதிகளுடன் – அவர்களை ஒப்பிடுவது சரி அல்ல…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நன்றி கா.மை சார்.
உங்கள் பார்வையைப் புரிந்துகொள்கிறேன். (ஆனா ‘சிகரெட்’ தயாரிப்பு கம்பெனிகளிடம் கண்டிப்பு காட்டாமல், உபயோகிக்கும் மக்களிடம் கண்டிப்பு காட்டும் அரசு என் மனதில் வந்துபோகிறது. ஊசி இடம் கொடுக்கும்போதுதான் நூல் நுழையமுடியும். தாங்கள் பணம் வாங்கி வாக்களிக்கும் மக்கள், தன் சந்ததியினரின் அழிவுக்குக் காரணமாகின்றனர்)
அரசியல் கொள்ளையர்களை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அதைச் செயலிழக்கச் செய்ய ஒரே மருந்து, நம் வாக்குகள்தான்.
அந்த மருந்தை, உபயோகமில்லாமல் செய்வது ‘காசு வாங்கி வாக்களிக்கும் மக்கள்’. அதனால்தான் எனக்கு மக்களிடம் மட்டும்தான் கோபம். அவர்கள், நேர்மையான மக்களை, எள்ளி நகையாடிவிட்டனர். என் கோபம், ‘அதிகாரிகளிடமும், ஆணையத்திடமும் அல்ல’. They will do, what they have been doing.
உங்களுக்கும் உங்கள் தளத்திற்கு வருகை தரும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் புத்தாண்டு, நமக்கு மகிழ்ச்சி மிக்க ஆண்டாக இருக்கவேண்டும். வாழும் நாடு வளமுடன் இருக்கவேண்டும்.
I like your clarity of thinking sir 🙂
Kaviri mainthan is step child of kaviri thai. Shame on u
John,
உங்களுக்கு எதனால் என் மீது இந்த கோபம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா…?
காரணத்தை சொல்லி விட்டு திட்டினீர்களானால் தேவலை…
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Atleast the media have to advice people like, get the bribe, but vote to the right person.
Rather than criticizing the poor peoples, we can educate them differently.