…
…
“குஜராத்” சட்டமன்ற தேர்தல் மோடிஜிக்கு பெரும் பதட்டத்தையும்,
பதைபதைப்பையும், உண்டு பண்ணி இருக்கிறது.
அவர், மிக அதிகமான தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்வதையும்,
தெருத்தெருவாக அலைவதையும் பார்க்கும்போது, ரிசல்ட்’பற்றி
அவருக்கு ஏற்பட்டிருக்கும் கலக்கமும், சந்தேகமும் – தெரிகிறது….
(ஆனால், நமக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை… 🙂 🙂 )
தெருத்தெருவாக ஊர்வலம் போவதுடன்( road show …),
சில சமயங்களில் சிவாஜி போல வீர வசனங்களையும்,
சில சமயங்களில் திருவிளையாடல் “தருமி” போல் பதட்டமான
வார்த்தைகளையும் உதிர்ப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார்….
இத்தனை அவஸ்தையும் எதற்கு….?
ஒரு “நாணய”மான நபரை மீண்டும் குஜராத் அரியணையில்
அமர்த்துவதற்கு தான்…!!!
அந்த நபர் எந்த அளவிற்கு “நாணய”மானவர்….?
மோடிஜியின் புகழ்பெற்ற வசனம்
“நா காவூங்கா – நா கானே தூங்கா” – நினைவிற்கு வருகிறது…!!!
அதை, கீழே வெளிவந்திருக்கும் பத்திரிகை செய்தி சொல்லும்…..
————————–
குஜராத் முதல்வருக்கு ரூ.15 லட்சம் அபராதம்..
————-

…
பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலத்தின் முதல்வரான
விஜய் ரூபானி பங்குச்சந்தையில் முறைகேடான வர்த்தகம் செய்து ஒரு
நிறுவனத்தின் பங்கு மதிப்பைச் செயற்கையாக உயர்த்தி அதிகளவிலான
லாபத்தைப் பெற்றுள்ளார்.
இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்டுள்ள
அறிக்கையில் – குஜராத் முதல்வர் விஜய் ருபானி-யின் இந்து
இணைப்புக் குடும்பம் (HUF) உட்பட 22 பேர் சாரங் கெமிக்கல்ஸ் என்ற
நிறுவனத்தில் முறைகேடான வர்த்தகத்தைச் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முறைகேடான வர்த்தகம்
சாரங் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் செய்த இந்த முறைகேடான வர்த்தகம் விஜய் ரூபானி மற்றும் 22 பேர் 2011ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் செய்யப்பட்டுள்ளது எனச் செபி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
லாபம்
விஜய் ருபானி மற்றும் 17 பேர் இந்நிறுவனத்தில் செய்யப்பட்ட முறைகேடான வர்த்தகத்தின் மூலம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் லாபம் அடைந்துள்ளனர். இது தண்டனைக்குறியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அபராதம் மற்றும் காலக்கெடு :
இதற்காக ரூபானி மற்றும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் 15 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனச் செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தத் தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில்
செபியின் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் குறித்து எவ்விதமான மறுப்பும் குஜராத் முதல்வர் விஜய் ருபானி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ருபானி முறைகேடான வர்த்தகம் செய்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
குஜராத்
பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் மாநிலங்களில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. வர்த்தகச் சந்தையில் அதிகம் முதலீடு செய்வோரும் இம்மாநிலத்தவர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



நாணயம் … நம்பிக்கை எல்லாம் …? நீங்களாவது இது பற்றி எழுதுகிறிர்கள் … மற்றவர்கள் … மீடியாக்கள் வாய் திறக்கவே பயப்படுகின்றன …
இதுவும் ஒரு சூடான செய்திதான் … அன்று அலைக்கற்றை பற்றி ஆயிரம் குறைகளை கூறியவர்கள் … இன்று என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய ஓரு எடுத்துக்காட்டு …. // வீ அலைக்கற்றை மற்றும் ஒரு 2G…. ? //
Telecom Department Mulls Allocating Valuable V-Band Spectrum Without Auctions …. திரு காமராஜர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது …!!!
நாணயம் … நம்பிக்கை எல்லாம் …? நீங்களாவது இது பற்றி எழுதுகிறிர்கள் … மற்றவர்கள் … மீடியாக்கள் வாய் திறக்கவே பயப்படுகின்றன …
இதுவும் ஒரு சூடான செய்திதான் … அன்று அலைக்கற்றை பற்றி ஆயிரம் குறைகளை கூறியவர்கள் … இன்று என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய ஓரு எடுத்துக்காட்டு …. // வீ அலைக்கற்றை மற்றும் ஒரு 2G…. ? //
Telecom Department Mulls Allocating Valuable V-Band Spectrum Without Auctions …. திரு காமராஜர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது …!!!
https://thewire.in/199035/telecom-department-mulls-allocating-valuable-v-band-spectrum-without-auctions/
இது தெரிய வந்தது, வெளிவராதது இன்னும் எவ்வளவோ?
வாய்மூடி மெளனியாகிருக்கும் ஊடகங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்பட, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஒழிய வாய் திறக்கப்போவதில்லை.
காங்கிரஸூம் ஏன் இப்படி இருக்கிறது என்று தான் ஆச்சரியமாக இருக்கு.
கூட்டு கலவாணிகள்.
குஜராத் தேர்தலில் பாஜக தோல்வியடையும் என நான் கணிக்கிறேன். Obvious Result மக்களுக்குச் சென்றடையவில்லை. இந்தத் தேர்தல் தில்லி தேர்தலை நினைவுபடுத்துகிறது. ரிசல்டும் அப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராகுல் அவர்களுக்கு இது பெரிய வாய்ப்பு. காங்கிரஸ் strongஆக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு நல்லது. தேசிய அளவில் மாநிலக் கட்சிகள் மதிப்பிழந்து காங்கிரஸ், பாஜக இருக்கவேண்டும். அப்போதுதான் on their merit they would get a chance to rule.
இது பாஜகவுக்கு பெரிய Wake Up Call ஆக இருக்கவேண்டும்.
முதல்வர் வேட்பாளர் தகுதி பற்றி நீங்கள் எழுதியுள்ளது பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை. நான் நிச்சயம், “நேர்மை” என்ற மதிப்பீட்டில் ஆர்கே நகரில் யாருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற உங்கள் பரிந்துரையையும், “நேர்மை” என்ற மதிப்பீட்டில் தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
புதியவன்,
//முதல்வர் வேட்பாளர் தகுதி பற்றி நீங்கள் எழுதியுள்ளது பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தவில்லை..//
அது ஏன் என்றும் சொல்லி இருந்தீர்களானால் புரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். நான் வேட்பாளரை மையப்படுத்தி இந்த இடுகையை எழுதவில்லை…….
தலைப்பை பாருங்கள்…” …..(இவருக்காகவா)… மோடிஜி “இவ்வளவு” அலைகிறார்…???”
நானும் சாப்பிட மாட்டேன்.. மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேனென்று
தேசத்திற்கு வாக்கு கொடுத்தாரே … அந்த பெரிய மனிதர் தான் சப்ஜெக்ட்…, முதல்வர் வேட்பாளர் அல்ல…!!!
——————-
// நான் நிச்சயம், “நேர்மை” என்ற மதிப்பீட்டில் ஆர்கே நகரில் யாருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற உங்கள் பரிந்துரையையும், “நேர்மை” என்ற மதிப்பீட்டில் தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//
நான் இதற்கு பதிலளிக்க முடியாமல் விழிக்கப்போகிறேனென்று நினைத்தீர்களா…?
இல்லை திசை திருப்பி வேறு எங்காவது இட்டுச்செல்வேன் என்று நினைக்கிறீர்களா..? 🙂 🙂
1) ஆர்.கே.நகரில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களுக்கும் – அவர்களின்
தலைவர்களுக்கும் – “நேர்மை” என்கிற வார்த்தையை உச்சரிக்கவே தகுதி இருப்பதாக எனக்கு தோன்றவில்லை…
2) தமிழக முதல்வராக யார் வரவேண்டும் என்பதை –
அடுத்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, யார் யார் களத்தில் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டு, பிறகு தானே தீர்மானிக்க முடியும்…?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
// ஆர்.கே.நகரில் விஷால் போட்டி?- அதிரடி திட்டத்தின் பின்னணியில் யார் தெரியுமா? //
https://tamil.oneindia.com/news/tamilnadu/a-famous-actor-is-behind-the-vishal-decision-contest-rk-nagar-by-poll-303584.html ஆழம் …. ஆழம் …. ஆழம் ….? ஜனநாயக நாடு ….!