…
…

தமிழகத்தை உலுக்கிய ரெய்டு…
சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான பத்திரங்கள்,
5 கிலோ தங்கம்,
7 கோடி ரூபாய் ரொக்கம்….
இது வரை தெரிந்தது இது. இன்னும் 20 வங்கி லாக்கர்களை
திறந்தால் என்னென்ன கிடைக்குமோ…!!!
சரி – முக்கிய தமிழக –
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களிடையே,
அரசியல் கட்சிகளிடையே –
இதற்கான எதிர் வினை (re-action) என்ன…?
சொல்லி வைத்தாற்போல், அத்தனை பேரும் சொல்வது –
” மத்திய பாஜக அரசு தன் அரசியல் லாபத்திற்காக
இந்த குடும்பத்தை மட்டும் குறி வைத்து பிடித்தது … ”
” தவறு செய்தவர்கள் அத்தனை பேர் மீதும் ஏன் நடவடிக்கை
எடுக்கவில்லை…? ”
“மத்திய அரசு, வருமான வரித்துறையை தனது சுயலாபத்திற்காக
பயன்படுத்திக் கொள்கிறது…”
உண்மை தான். இந்த விஷயத்தில் நமக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.
பாஜக அரசு வருமான வரித்துறையை, தனது சொந்த லாபத்திற்காக
பயன்படுத்திக் கொள்வது இது முதல் முறையல்ல…
தொடர்ச்சியாக இது நடந்துகொண்டே தான் இருக்கிறது – என்பதை
பல தடவை, நாமே இந்த வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறோம்…
விவாதித்திருக்கிறோம்.
ஆனால், வளைக்கப்பட்டவர்கள் யாரும் அப்பாவிகள் அல்லவே…?
திட்டமிட்டு, தமிழ்நாட்டையே சூறையாடிய கும்பல் தானே
வளைக்கப்பட்டிருக்கிறது. இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள்
இவர்களுக்கு நேர்வழியிலா கிடைத்தன…?
ஆனால், கிட்டத்தட்ட, எதிர்க்கட்சிகள் எதுவுமே,
எதிர்க்கட்சித்தலைவர்கள் யாருமே –
(டாக்டர் ராமதாஸ் அவர்களைத் தவிர…)
” கொள்ளை அடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் உடனடியாக பறிமுதல்
செய்யப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்…”
-என்று சொல்லத்தவறியது ஏன்…?
திரும்ப திரும்ப பாஜக அரசு இவர்களை மட்டும் குறி வைக்கிறது
என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே தவிர,
கொள்ளை கும்பலைப்பற்றி வாயே திறக்கவில்லையே … ஏன்…?
இவர்கள் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனமாக இருப்பதை
பார்த்தால், அடுத்த தேர்தலில், இதே மாஃபியா கும்பலுடன்
கூட்டு சேரக்கூடிய வாய்ப்பு உருவாகக்கூடும்… அதை வீணாக
கெடுத்துக் கொள்வானேன்… என்று நினைப்பது போல இல்லை…?
———————————————————————————-
பின் குறிப்பு –
தமிழகத்தில் இத்தனை நாளிதழ்கள்,
அரசியல் இதழ்கள்,
செய்தி தொலைக்காட்சி சானல்கள் இருக்கின்றன.
இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி
எதாவது ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒருவர் முகத்திலாவது ஒரு அவமான உணர்ச்சி தென்படுகிறதா…?
ஏதோ போர்க்களத்தில் இறங்கி இருக்கும் வீரர்களைப்போல் பேசுகின்றனர்…
இந்த வெட்கங்கெட்ட ஊடகங்களுக்கு பொது நலன் என்று எதுவுமே
கருத்தில் இல்லையா…? வீரமாக சிரித்துக் கொண்டே பேட்டி கொடுக்கும்
திருட்டுக் கூட்டத்தை சேர்ந்தவர்களிடம், ” ஏன் சார், என்ன தொழில் செய்து நீங்கள் 1400 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கினீர்கள்…? என்று கேட்க
ஏன் ஒரு ஊடகத்திற்கும் துப்பில்லாமல் போய் விட்டது….?



ungallakku central govt mei kutram solvathe velai..
நீங்கள் கூறுவது மிகவும் சரி.
முக்கியமாக ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆகியவை
இவர்களிடம் பெரிய அளவில் பங்கு வாங்கி இருக்குமோ என்று
தோன்றுகிற அளவிற்கு, இவர்களை வீராதி வீரர்களாக சித்தரிக்கின்றன.
//இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி
எதாவது ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒருவர் முகத்திலாவது ஒரு அவமான உணர்ச்சி தென்படுகிறதா…?
ஏதோ போர்க்களத்தில் இறங்கி இருக்கும் வீரர்களைப்போல் பேசுகின்றனர்…//
இன்னும் பிடிபடாதது ஏராளம் இருக்கோ…! அதான் இந்த தெனாவட்டோ…?
இல்ல…. பேரம் படிந்துவிட்டதா…?
என்னமோ நடக்குது, போங்க.
இந்த வெட்கங்கெட்ட ஊடகங்களுக்கு பொது நலன் என்று எதுவுமே
கருத்தில் இல்லையா…? ஏன் ஒரு ஊடகத்திற்கும் துப்பில்லாமல் போய் விட்டது….?
answer is simple.
Sir,
how can you expect the following tv media will ask the deligate poomarung questions.
Sun TV – Maran brothers
Kalainar TV – Kalainar family
Puthiya thalaimurai – Parivendar younger son
Vendar TV – Parivendar elder son
News 7 – vaikundanathan and family – mining king
News 18 -Reliance Industries
jaya tv – mannargudi mofia.
seshan
All of them would have been bought
” ஏன் சார், என்ன தொழில் செய்து நீங்கள் 1400 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கினீர்கள்…?” என்று கேட்க ஏன் ஒரு ஊடகத்திற்கும் துப்பில்லாமல் போய் விட்டது….?
கேட்டு என்ன பிரயோஜனம்? “அதை உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எங்கே சொல்ல வேண்டுமோ அங்கே சொல்லுவோம்” என்று முடித்துவிடுவார்கள்.
” கொள்ளை அடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…
சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துகள் உடனடியாக பறிமுதல்
செய்யப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்…”
-என்று சொல்லத்தவறியது ஏன்…?…..நாளை அவர்களும் இந்த நிலைக்கு வளரக்கூடும் அல்லவா…. அதனால் தான் தயங்குகிறார்கள்.யாரும் (திரு.ராமதாஸ் அவர்கள் உள்பட) இங்கு யோக்கிய்ர்கள் கிடையாது.
In short, disgusting. Never before TN politics degenerated to this shabby level. Massive clean-up is called for..
ஆண்டாண்டு காலமாக ஊழல்கள் — ஊழல்கள் … அடுத்து ரெய்டுகள் — ரெய்டுகள் … அப்புறம் நம்முடைய வழக்கமான புலம்பல்கள் — புலம்பல்கள் மற்றும் ஆதங்க கருத்துக்கள் — ஆதங்க கருத்துக்கள் …. அரசுகளின் பெப்பேக்கள் — பெப்பேக்கள் … கடைசியில் கிணற்றில் போட்ட கல்லாக என்ன தொடர் நடவடிக்கை — அரசுக்கு எவ்வளவு திருப்பப்பட்டது இதுவே வெளியே தெரியாமல் — அமுக்கல் — அமுக்கல் …. அவ்வளவே … நம்நாடு ….?
What can we expect from “hands in gloves” tainted persons?
மக்களை முட்டாள்கள் என்று அரசியல்வாதிகள் நினைத்துக்கொண்டு தேர்தலில் கோட்டை விடுவதை போல உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் கவர் வாங்கி பொய் செய்திகளை போடும் ஊடகம் விரைவில் மூட்டை கட்டுவது உறுதி ..
ஊடகம் என்பதில் உங்களுடைய blogum வருகிறது. ஜெயா சசிகலா கூட்டு கொள்ளை பதினைந்து வருடங்களுக்கு மேல் நடக்கிறது. ஆனால் இது பற்றி நீங்கள் எழுதியதாக நான் அறிய வில்லை. ஏன்? எதற்காக நீங்கள் தயங்கி வீட்டீர்களோ அதே காரணத்திற்காக மற்ற ஊடகங்கள் விட்டிருக்கலாம். இதில் குறிபபிடத்தக்க ஒன்று.பிஜேபி இதற்கு முன்னர் இதே நடவடிக்கை எடுக்க thamadithathu ஏன்?
ரவிக்குமார் – இடுகையையும் எல்லோரது பின்னூட்டங்களையும் பார்த்தபின்பு இதனை எழுதுகிறேன்.
ஊடகங்கள் எல்லாமும் (தொலைக்காட்சி, பத்திரிகைகள்), பின்னணியில் அதனைக் கையாளுபவர்களும் ஊழல்களில் மலிந்தவர்கள் என்பதால்தான் இத்தகைய செய்திகள் பிரதான இடத்தைப் பிடிப்பதில்லை, திசை திருப்பப்படுகின்றன..
இந்தத் தளத்தில் எதனையும் எழுதத் தயங்கியதாக எனக்குத் தெரியவில்லை. அன்றைய பிரதான செய்திகள் எல்லா தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதிக்கப்படும்போது சொந்த லாபம் கருதி முக்கியச் செய்திகளை தொலைக்காட்சி ஊடகங்கள் விட்டுவிடுவதைக் காண்கிறோம். இங்கு ஓரளவு அன்றைய முக்கியச் செய்திகள் விமரிசிக்கப்படுகின்றன.
“இதற்கு முன்னர் இதே நடவடிக்கை” – இத்தகைய கேள்விகள் அர்த்தமில்லாதவை. நடவடிக்கை இப்போது எடுத்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன என்பது நமக்கு இரண்டு மாதங்களிலாவது தெரிந்துவிடும். அதுவும் ரெட்டி ரெய்டு போன்றது என்றால், எப்போதும்போல் இது அரசியல் நடவடிக்கை என்றுதான் நம்மால் கருதமுடியும்.