…
…

…
இரண்டு நாட்களாக நடந்து வரும் மிகப்பெரிய அளவிலான
சோதனைகள்… கிட்டத்தட்ட 2000 அதிகாரிகள் கொண்ட டீம்…
200 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் சோதனைகள்
நடைபெறுகின்றன.
மிக புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, அயராமல், அமைதியாக
செயல்படும் வருமான வரித்துறையினருக்கு உளமார்ந்த
பாராட்டுகள்….! ( பாராட்டுகள் – இந்த ரெய்டுக்கு மட்டும் தான்…)
சம்பந்தப்பட்டவர் சொல்கிறார் “நாங்கள் ஒன்றும் எங்களை காந்தியின்
பேரன், பேத்திகள் என்று சொல்லிக்கொள்ளவில்லை;அதே போல்,
அவர்களும், காந்தியின் பேரனோ – பேத்தியோ அல்ல ”
யாரை, யாருடன், யார் ஒப்பீடு செய்வது…?
வெட்கங்கெட்ட மனிதர்கள்…
ஐம்பது ரூபாய் பிக்-பாக்கெட் அடித்து மாட்டியவன் கூட,
மாட்டிக் கொள்ளும்போது, அவமானத்தால் கூனி-குறுகிப்போகிறான்…
ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்து
மாட்டிக் கொண்டவர், வெட்கம் மானம் இல்லாமல்
கேட்கும் கேள்வி இது..
அதெப்படி ஒரு குடும்பத்தில் அத்தனை பேரும் இந்த கலையில்
வல்லவராக இருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை…
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக, தமிழகத்தையே அள்ளிச் சுருட்டி
வயிற்றுக்குள் போட்டுக்கொண்ட ஒரு கொள்ளை கும்பல்
இறுதியாக இன்று சட்டத்தின் பிடியில் சிக்கி இருப்பது குறித்து
நமக்கு ஒரு திருப்தியும் நிம்மதியும் ஏற்படுகிறது என்பது தான்
உண்மை….
என்றைக்கோ பிடிபட்டிருக்க வேண்டியவர்கள்…
என்றைக்கோ நடந்திருக்க வேண்டிய ரெய்டுகள்…
இதற்கு முன்னால் ஏன் நடக்கவில்லை…?
இதற்கு முன்னால் பிடிபட்டவர்களின் மீது
என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது…?
கொள்ளையடித்த அத்தனை பேர் மீதும் ஏன் ரெய்டு நடத்தவில்லை..?
எங்கள் மீது மட்டும் குறி வைக்கப்பட்டது ஏன்…?
என்று அவர்கள் எவ்வளவோ கேள்விகள் கேட்கலாம்…
அந்த கேள்விகளில் சில சரியானவையாகவும் கூட இருக்கலாம்…
ஆனால், இவர்கள் கேட்கும் எந்த கேள்வியும்,
இவர்கள் முன்வைக்கும் எந்த நியாயமும் –
இவர்களை உத்தமர்களாக்கி விடாது.
காலம் கடந்தாவது, நடவடிக்கை எடுத்தவர்களை பாராட்டுகிறேன்.
பின்னணி, காரணங்கள் எதுவாக இருந்தாலும் சரி –
இப்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள்
மிக மிக அவசியமானவை… சரியானவை….
மத்திய பாஜக அரசை விமரிசிப்பது என்பது தனி…
ஆனால், இப்போது நடக்கும் ரெய்டுகள் நூற்றுக்கு நூறு
அவசியமானவையே…என்பதை மறுக்க முடியாது.
இந்த கொள்ளைக்காரர்களை இன்னமும் ஆதரித்து பேச, செயல்பட –
முற்படுபவர்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகளாகவோ,
அல்லது அரசியல்வாதிகளாகவோ மட்டும் தான் இருக்க முடியும்….
இந்த ரெய்டுகளின் முடிவுகள் – எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக
வெளியிடப்படுகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.



//இந்த ரெய்டுகளின் முடிவுகள் – எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக
வெளியிடப்படுகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.//
தங்களுக்கு சாதகமாக இவர்கள் மாறிவிட்டால் எல்லா கோப்புகளும் க்ளோஸ் ஆகிவிடும் என்பதே உண்மை !
//மிக புத்திசாலித்தனமாக திட்டமிட்டு, அயராமல், அமைதியாக
செயல்படும் வருமான வரித்துறையினருக்கு உளமார்ந்த
பாராட்டுகள்….! ( பாராட்டுகள் – இந்த ரெய்டுக்கு மட்டும் தான்…)//
//பாராட்டுகள் – இந்த ரெய்டுக்கு மட்டும் தான்…//
ஐயோ இப்பவே பயந்து வருதே…
அப்ப வழக்கு எதுவும் வராதா ஐயா…..?
இவர்களை இப்படி வளர்த்து விட்டு வேடிக்கை பார்த்தது யார் என்பதை சொல்லமல் விட்டுவிட்டீர்களே???
// மத்திய பாஜக அரசை விமரிசிப்பது என்பது தனி…
ஆனால், இப்போது நடக்கும் ரெய்டுகள் நூற்றுக்கு நூறு
அவசியமானவையே…என்பதை மறுக்க முடியாது.
இந்த கொள்ளைக்காரர்களை இன்னமும் ஆதரித்து பேச, செயல்பட –
முற்படுபவர்கள் முழுக்க முழுக்க சுயநலவாதிகளாகவோ,
அல்லது அரசியல்வாதிகளாகவோ மட்டும் தான் இருக்க முடியும்….// இவ்வாறு ஒரு வளையத்தைப் போட்டபின் … நோ கமெண்ட் …! பா.ஜ ..க. வின் சுயலமில்லாமல் இந்த ரெய்டுகள் இல்லையென்பதும் — நடக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே — !!
பலவிதமான பார்வைகள் – அதில் இந்த செய்தியும் ஒன்று …. // ரெய்டு குறித்து முன்னாள் சி.பி.ஐ அதிகாரி “ஓபன்டாக்”….! திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சி..! // https://m.dailyhunt.in/news/india/tamil/asianetnews+tamil-epaper-newsftam/reydu+kurithu+munnal+si+bi+ai+athikari+obandak+tidukkidum+takavalal+athircchi-newsid-76142686
If these retd. Officers should think about what they did during their service. Just making half baked comments for publicity will not help.
“நாங்கள் ஒன்றும் எங்களை காந்தியின் பேரன், பேத்திகள் என்று சொல்லிக்கொள்ளவில்லை;” – இந்த ஒரு ஸ்டேட்மென்டுக்காகவே இவர்களை ஆயுள் முழுக்க உள்ளே தள்ளி, எல்லாச் சொத்துக்களையும் பிடுங்கவேண்டும். எப்படி, தனித் தனி நபர்கள் இவ்வளவு சொத்துக்களுக்கும், கல்லூரிகளுக்கும் அதிபதியாக முடிந்தது? எந்த பின்னணி இவர்களுக்கு இருக்கிறது (முதலீட்டுக்கு)
ரெய்டு நடத்தியதற்குப் பாராட்டலாம்தான். ஆனால் ரெய்டின் காரணம் என்ன? இப்போதுதான் 20 வருட நித்திரையிலிருந்து எழுந்துகொண்டார்களா? இதற்கு முன்பு ரெய்டு நடத்தியபின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? (ரெட்டி, ஜெகத்ரட்சகன் போன்ற பலப் பல). ரெய்டு நடத்துவதன் காரணங்கள் என்ன? வெறும் பயமுறுத்தலா அல்லது நிஜமாகவே கணக்கில்வராதவைகளைக் கண்டுபிடித்து அரசிடம் சேர்க்கவா? இத்தகைய கணக்கில் வராதவைகளை நேர்மையான சொத்துக்கள் என்று அட்ஜஸ்ட் செய்த ஆடிட்டர்களுக்கு என்ன மாதிரி தண்டனை வழங்கப்படும்? இவையெல்லாம் சட்டத்தில் இல்லையெனில் சேர்த்துவிட்டு ரெய்டு நடத்துவது சாலப் பொருந்தும். இதைவிட முக்கியமாக, ரெய்டுகளுக்குப் பின்பு, வழக்கு நடந்தால் 30 நாட்களுக்குள் தண்டனை, ஒரு முறை மட்டும் அப்பீல் என்று கொண்டுவந்தால்தான் உபயோகம். இல்லாவிட்டால், வருமான வரிச் சோதனை போன்றவைகள், நியூஸ் சேனல்களுக்கு செய்திப் பஞ்சம் ஏற்படும்போது செய்தி தருவதற்காக அரசால் நியமிக்கப்பட்டவை என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்கமுடியாது.
இதைவிட முக்கியமாக, நான் படித்தது, இந்த மாதிரி ஒருமுறை சோதனை நடத்தி ஆவணப்படுத்திவிட்டால், அப்போது ஆவணப்படுத்தியவைகள் நேர்மையான சொத்துக்கள் என்று பின்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்று.
மேலே உள்ள பின்னூட்டத்தில் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியின் கருத்தில் முக்கியமானது :— // “இதற்கு முன்பு தமிழகத்தில் நடந்த எந்த ரெய்டின் பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே?”
“சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினார்கள். அவர் வீட்டில் இருந்து புத்தம்புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. ஆனால், நீதிமன்றத்தில், ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த மனுவில், சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய நோட்டுகள் எப்படி வந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இப்படி இருக்கும்போது வழக்கின் நிலை என்ன ஆகும்?
அதேபோல், டி.டி.வி.தினகரன்மீது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப் போட்டனர். ஆதாரங்கள் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்கிறார்கள். அந்த ஆதாரத்தைக் கொண்டு ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. விஜய் மல்லையா 1,000 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வங்கிகள் சொல்கின்றன. அவரின் சொத்துகள் இந்தியாவில்தான் இருக்கின்றன. ஆனாலும் வங்கிகளால், அரசாங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், இரண்டு லட்சம் ரூபாய் கடன் தரவில்லை என்பதற்காக விவசாயியின் டிராக்டரைப் பறிமுதல் செய்கின்றனர். சட்டம் எல்லாம் சாமான்யர்கள் மீதுதான் அமல்படுத்தப்படுகிறது ” என்று குறிபிட்டுள்ளார்.
நேற்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த ரெய்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தனின் இந்த கருத்து மக்களால் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது // என்று கூறுவது நடைமுறையில் உள்ளது தானே …. ?
எப்படியெல்லாம் பரபரப்பான ரெய்டுகளின் நிலையும் கைதுகளின் தன்மையும் நம் நாட்டில் உள்ளன என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களில் சமீப காலத்தில் நிகழ்ந்த சிலதை மட்டும் கோடிட்டு காட்டியிருக்கார் …. !!!
A PERSON WHO IS NOT AT ALL PART OF ANY GOVT HAS AMASSED
SO MUCH WEALTH , PEOPLE FEAR AT THE THOUGHT OF HIM GETTING ELECTED
EVEN AS MLA. ALL THE MONEY OF THIS MANNARGUDI GANG SHOULD BE ACCOUNTED AND CONFISCATED AND
BROUGHT TO THE TREASURY OF THE STATE GOVT.
உங்க பாயின்ட் கரெக்ட். ஆனால், எல்லா அரசியல்வாதிகளுடைய சொத்துக்களையும் (அவர்கள் உறவினர்கள் உள்பட) கான்ஃபிஸ்கேட் பண்ணவேண்டும். அதில் ஒருவர்கூட விதிவிலக்காக இருக்கக்கூடாது. இல்லைனா டீக்கடை வச்சிருந்தவங்க, பேசக்கூடத் தெரியாமல் பார்லிமென்டுக்குப் போய் அமைச்சரானவங்க, சாதாரண பட்டப்படிப்புக்கூட படித்து பாஸ் செய்யமுடியாதவர்கள், வேறு எதற்குமே லாயக்கில்லாதவர்களெல்லாம் எப்படி இத்தனை கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கமுடியும்? இதில் திரையுலகைச் சார்ந்தவர்களைமட்டும் விட்டுவிடலாம். இதைச் செய்யாமல், வெறும்ன இந்தமாதிரி ரெய்ட் படம் காண்பிப்பது வேஸ்ட் என்றே நினைக்கிறேன்.
எத்தனை படித்த, அறிவுத் திறமை உள்ளவர்களைப் பார்க்கிறேன். அவங்கள்ல சிலர்மட்டும்தான் (இன்ஃபோசிஸ், விப்ரோ போன்று) பெரிய ஆளாகின்றனர், மற்ற எல்லோரும் ஆயுள் முழுவதும் சம்பாதித்து 2 கோடி சேர்க்கமுடிந்தாலே அதிகம். ஆனால் இந்த அரசியல்வாதிகளின் குழந்தைகள்கூட பல கோடி சம்பாதிக்கிறார்களே.. அது எப்படி?
///இவர்கள் கேட்கும் எந்த கேள்வியும்,
இவர்கள் முன்வைக்கும் எந்த நியாயமும்///
//இவர்களை உத்தமர்களாக்கி விடாது//
உண்மையான வார்த்தை ஐயா திருடன் பிடிபட்டது சந்தோஷமாயினும் பிடிக்கச் சொன்ன திருடனை யார் பிடிப்பது ? எப்போது ?
– கில்லர்ஜி
மக்கள் –
… மயக்கத்திலிருந்து தெளியும்போது…!
….மதம் என்னும் போதையிலிருந்து விடுபட்டு,
மனிதத்திற்கு மாறும்போது…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணமாக இருந்த ஜெயலலிதா கடவுளாக மதிக்கப்படுகிறார்!! இது எப்படி இருக்கு!!!!
//பிடிக்கச் சொன்ன திருடனை யார் பிடிப்பது ? எப்போது ?//
//மக்கள் –
… மயக்கத்திலிருந்து தெளியும்போது…!
….மதம் என்னும் போதையிலிருந்து விடுபட்டு,
மனிதத்திற்கு மாறும்போது…!!!//
//உண்மையான வார்த்தை ஐயா திருடன் //
//திருடன் பிடிபட்டது சந்தோஷமாயினும் பிடிக்கச் சொன்ன திருடனை யார் பிடிப்பது ? எப்போது ?//
கடவுள்.