ஒரு அபூர்வ காட்சி – ரயில், பஸ், லாரி அத்தனையும் ஒரே பாதையில் ….!!!


ஒரு வித்தியாசமான, அபூர்வமான காட்சி.. !

இதுவும் நம்ம இந்தியாவில் தான்…!

தமிழ்நாட்டின் போக்குவரத்து வசதிகளைப்பற்றி நிறைய
குறைப்பட்டுக்கொள்கிறோம்…அவற்றில் நிறைய உண்மைகள்
இருக்கின்றன.

சாலைப் பயணத்திலும், ரயில் பயணத்திலும் – தமிழ்நாட்டில்
செய்ய வேண்டியவை, செய்யக்கூடியவை – நிறைய இருக்கின்றன.

இருந்தாலும் கூட – இதற்கு நேரெதிராக, இந்தியாவின்
வேறு சில மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது,
நாம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறோம்
என்று பெருமைப்பட்டுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
( இதில் நம்மை விட வளர்ச்சியடைந்த சில மாநிலங்களும்
இருக்கின்றன என்பதும் உண்மையே….. )

வெளி மாநிலங்களில் இருப்பவர்களும், அடிக்கடி
பல மாநிலங்களுக்கிடையே பயணிப்பவர்களும் இந்த உண்மையை
நிச்சயம் உணர்வார்கள்.

முக்கியமாக, பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தும்போது
இதை உணர முடியும்.

ரயில் கூரைகளில் அமர்ந்துகொண்டு பயணம் செய்வது என்பது
தமிழகத்தில் இல்லாத ஒரு பழக்கம்… வடக்கே, சில மாநிலங்களில்
இது சர்வ சகஜம்.

அதே போல் தான், ரிசர்வேஷன் செய்த பெட்டிகளில் பயணிப்பதும்.
தமிழ்நாட்டின் எல்லையை தாண்டி விட்டால், ரிசர்வேஷனுக்கு எந்த
மரியாதையும் கிடையாது. ஸ்லீப்பர்களிலும் கூட சகஜமாக பிறர்
ஏறிக்கொண்டு ஆக்கிரமிப்பது சர்வ சகஜம். பாத்ரூம் செல்வதாக
இருந்தால் கூட, திரும்ப வரும்போது நமது இடம் என்ன கதியானதோ
என்று பயந்துகொண்டே தான் வர வேண்டும்.

அதே போலத்தான், இரவு நேரங்களில் சாலைகளில் பயணிப்பதும்…
சில மாநிலங்களில், முக்கியமாக பீஹார், உத்திர பிரதேசம், மத்திய
பிரதேசம், ஜார்கண்ட போன்ற பகுதிகளில் நெடுஞ்சாலைகள் கூட
பாதுகாப்பில்லாதவை.

சரி ……. சீரியசாக யோசிப்பதை விட்டு விட்டு, கிடைக்கின்ற
ஒரு அருமையான காட்சியை கண்டு ரசிப்போம் வாருங்கள் …

பஸ், லாரி, கார், ஸ்கூட்டர், பாதசாரிகள், ரயில் என்று அனைத்தும் ஒரே பாதையில் பயணிக்கும் ஒரு அபூர்வமான காட்சி இங்கே…

ரயிலின் கூரையில் எவ்வளவு சகஜமாகவும், ஆனந்தமாகவும்
பயணிக்கிறார்கள் பாருங்கள். பிரிட்ஜ் தலையில் இடிக்கும் என்பதால்,
கூரையில் தலைசாய்த்து, கிட்டத்தட்ட படுத்த நிலையில் இருக்கும் பயணிகள்-

பிரிட்ஜ் எல்லை முடிந்தவுடன், கூலாக நிமிர்ந்து உட்காருவதையும் காணுங்கள்…. நமக்கு திகில்… அவர்களுக்கு….???

நாம் கீழே காணும் காட்சி மத்திய பிரதேசத்திலிருந்து பீஹாருக்கு
போகும் ஒரு குறுகிய ரயில் (narrow gauge) பாதை…..


ROAD-RAIL BRIDGE –
Gwalior-Sheopur narrow-gauge train
……

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to ஒரு அபூர்வ காட்சி – ரயில், பஸ், லாரி அத்தனையும் ஒரே பாதையில் ….!!!

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    திராவிட கட்சிகள் என்ன தான் ஊழல் செய்து இருந்தாலும் தமிழ் நாட்டை பல விதங்களில் பல மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நல்ல முன்னேறிய மாநிலமாகவே வைத்து இருக்கிறார்கள்.

    அது கல்வியாகட்டும் பொருளாதார மாகட்டும் சமூக நீதியாகட்டும் காவிகட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களை விட பல மடங்கு மெச்ச தகுந்த வகையிலேயே தமிழ் நாடு உள்ளது.

    பல வட மாநிலங்கள் போல் தமிழ் நாட்டையும் ஆக்குவதற்கு தான் இங்கு கால் ஊன்ற போறாங்கலாம்.

    அப்படி ஊன்றினால் அது தமிழகத்தின் அழிவுகாலமாகத் தான் இருக்கும்.

    சகோதரர்களே உஷார்.

  2. vic's avatar vic சொல்கிறார்:

    எலி வீட்டுக்குல்ல பூந்துட்டா என் வீடுன்னு நினைச்சுக்குமாம். அதுமாதிரி மனிதன் அரசியல்வாதி
    யாகிட்டா நாமதான் முதலீடு போட்டுருக்கமே வருமானம் எல்லாம் என் வீட்டுக்குத்தான்னு நினைச்சிகிறான்{ர்} ஆனா தமிழ்நாட்டுல இருக்குறவங்களோடசிந்தனை உசிர குடுத்தாவது புள்ளய நல்லா படிப்பிச்சிரனும். படிச்சவங்கள ஏமாத்துரது கொஞ்சம் கஸ்டம் இல்லியா அதனால கையை நக்க விட்டுர்ரான் அவ். மத்தது உங்க லிங்கு எல்லாமே சுப்பர்.

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    அபூர்வ காட்சி அருமை .. ! அபூர்வ செய்திகளும் வருகிறது .. அதில் ஒன்று பூனா பல்கலையில் “சைவ உணவு ” உண்ணுபவர்களுக்குதான் … தங்கமெடல் என்று அறிவிப்பு .. ஆகா… ஓகாே … சூப்பர் …!! நாடு நல்ல நாடு …!!!

    • பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

      இதெல்லாம் ஒரு முக்கிய செய்தியாக யாருக்கும் தெரியலைப்போல இருக்கு …. தனக்கு என்று வரும்போதுதான் — கருத்துக்கள் எல்லாம் — அப்படித்தானே … ? பிரிவினைவாதத்தின் கொடுமை போகப்போக தெரியும் …!!!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இந்த மக்களையெல்லாம் என்றைக்கு கல்வி அறிவு கொடுத்து இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உதவ வைக்கப்போகிறோமோ. இதைச் செய்யாமல் நமக்கு எதுக்கு புல்லட் டிரெயின்.

    தமிழ்’நாட்டைவிட பெங்களூரு இன்னும் முன்னேறியிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பீகார் போன்றவை மிகவும் பிந்தங்கியிருக்கின்றன. அதற்கு வட மானிலங்களில் ஆட்சி செய்த காங்கிரஸ்தான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். குஜராத்தில் பாஜக 15 வருடங்களாக ஆட்சியில் இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு வளர்ச்சியும் இருக்கிறது. உத்திரப்பிரதேசம், பீகார் போன்றவைகளில் 50+ வருடங்களாக காங்கிரஸ் ஆட்சி, மாயாவதி/முலயாம் ஆட்சி அவைகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட இடங்களாக மாற்றிவிட்டன.

    • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

      ஏன் உங்களுக்கு பிடித்த பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம்,
      ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களை விட்டு விட்டீர்கள் ?
      அதிலும் கூட பாரபட்சமா ? பீஹாரிலும் பல வருடங்கள் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றதே. நடுநிலை போல் துவங்கி ஒரு தலைபட்சமாகவே கருத்து எழுதுவது உங்களுக்கு ஒரு உத்தி என்பது எங்களுக்கு புரிகிறது.

  5. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    இந்தியா டுடேயில் 2016 ஏப்ரலில் வந்த செய்தி.

    “Top 10 states that make India rich”

    Here, we present you a list of top 10 states and union territories that make India rich:

    Ranking
    State/UT
    GDP in 2014-15
    1
    Maharashtra
    Rs 16.8 lakh crore
    2
    Tamil Nadu
    Rs 9.76 lakh crore
    3
    Uttar Pradesh
    Rs 9.76 lakh crore
    4
    West Bengal
    RS 8.00 lakh crore
    5
    Gujarat
    Rs 7.66 lakh crore
    6
    Karnataka
    Rs 7.02 lakh crore
    7
    Rajasthan
    Rs 5.7 lakh crore
    8
    Andhra Pradesh
    Rs 5.20 lakh crore
    9
    Madhya Pradesh
    Rs 5.08 lakh crore
    10
    Delhi
    Rs 4.51 lakh crore

    எனக்கு நேரம் அதிகம் இல்லை. இன்னும் விரிவாக போகலாம்.

    குஜராத்தில் தேவதூதன் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போது தான் குழந்தைகள் அதிகம் போஷாக்கு இல்லாமல் பிறக்கின்றன என்று 2014 லிலேயே அமர்த்தியா சென்று என்பார் அப்போது நடந்த பொய் பிரசாரத்தின் போதே சுட்டிக் காண்பித்தார்.

    இப்போது இன்னொரு தேவதூதன் ஆட்சி காலத்தில் UPயில் குழந்தைகள் கொத்து கொத்தாக இறக்கின்றனர்.

    இவர்கள் ஆட்சி தான் நம் தமிழகத்திற்கும் வேணும். ம்….

    இன்னும் குஜராத் ஒளிர்கிறது, வளர்ச்சி நாயகன் என்ற பொய் பிரச்சாரம் தான் 2014-ல் அமோக வெற்றி கிடைக்க வழிவகுத்தது.

    இப்ப நடக்க இருக்கும் குஜராத் தேர்தலில் அதேவித பொய் கோசத்தை காணோமே ஏன்.

    ஏனென்றால் குஜராத் மக்களிகமே அந்தப் பொய் மூட்டையை அவிழ்த்தால் காரி துப்புவார்கள். அதான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.