நேற்று சென்னையில் சந்தித்த 2 பேரும் கோமாளிகள் அல்ல….


திரு.பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன் மற்றும் திரு.அர்விந்த்
கெஜ்ரிவால் என்கிற டெல்லி முதலமைச்சர் ஆகிய இரண்டு
பேரும் நேற்று சென்னையில் சந்தித்ததை இரண்டு
கோமாளிகளின் சந்திப்பு என்று ஒரு நாளிதழ் செய்தியாக்கி
இருக்கிறது….
இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..


இரண்டு “வடிகட்டிய சுயநலவாதிகளின்” சந்திப்பு,
இரண்டு “போலி” மனிதர்களின் சந்திப்பு,
“மக்களை ஏமாற்றும்” இரண்டு “மாமேதைகளின்”சந்திப்பு

-என்று தலைப்பிட்டிருந்தால் ஓரளவு பொருத்தமாக
இருந்திருக்கக்கூடும்..

தமிழக மக்கள் கட்டாய திருமணத்தில் மாட்டிக் கொண்டு
விழிக்கிறார்களாம்… விவாகரத்து எக்ஸ்பர்ட் வருகிறாராம்…
அவர்களை அதிலிருந்து விடுவிக்க…

இவர் இறங்கப்போவது
அகில இந்திய அரசியலில் அல்ல…
தமிழக அரசியலில் தான்…

ஆனால், தமிழகத்தில் உள்ள
அத்தனை செய்தியாளர்களையும்,
அத்தனை தொலைக்காட்சிகளையும் ஒதுக்கி விட்டு –
டெல்லி தொலைக்காட்சியில் மட்டும் தனது முக்கியமான
முடிவுகளை அறிவிப்பதும், பேட்டி கொடுப்பதும் ஏன்…?

நேற்று பகல் அவர் இல்லத்தில் கூடிய அத்தனை
தொலைக்காட்சி செய்தியாளர்களும் முட்டாள்கள் –
தன் பேட்டியை எடுக்கும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர்கள்
அல்ல என்பது அவர் நினைப்பா….?
பின், தனியாக டெல்லி ஆங்கில தொலைக்காட்சிக்கு
மட்டும் தன் செய்தியை தெரிவிப்பானேன்…?

விளம்பரம்…?
இதையே தான் திருவாளர் கெஜ்ரிவாலும் செய்து வந்தார்…!
அந்த குல்லா, இந்த குல்லா என்று தமிழக அரசியல்வாதிகளை
விமரிசித்தது எல்லாம், கடைசியில் இந்த(கெஜ்ரிவால்) குல்லா
போடுவதற்காகத்தானா…?
( இந்த இடுகை திருவாளர் பார்த்தசாரதிக்கானது
என்பதால், கெஜ்ரிவால் அவர்களைப்பற்றி இங்கு
அதிகம் எழுத விரும்பவில்லை…)

நான் அறிந்த வரையில் திரு.கமல்ஹாசன் என்கிற
பார்த்தசாரதி இதுவரை எடுத்த முடிவுகள் அத்தனையும் 100
சதவீதம் சுயநலமான முடிவுகள் தான்…

தனது 6-வது வயதில் பகுதி நேர நடிகராக ஆரம்பித்தவர்,
இந்த 62 வயதில் முழுநேர நடிகராகவே மாறி இருக்கிறார்.
இந்த 62 வயதில், எத்தனை படங்களில், எத்தனை கோடிகள்
சம்பாதித்திருப்பார்…? தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களுக்காக –
ஒரு ஐந்து ரூபாய் செலவழித்திருப்பாரா…?

நேரடியாக ரெடிமேட் முதலமைச்சராக விரும்பும் இந்த மனிதர்,
தேர்தலில் போட்டியிட நேர்ந்தால்,

தேர்தல் கமிஷனிடம், தனது முழு – அசையும்,
மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை
கொடுத்தாக வேண்டும் என்கிற விதியை ஒருவேளை
மறந்து விட்டாரோ ?

அப்படி தெரிவிக்கின்ற நிலை ஏற்படும்போது –
இருக்கின்ற ஒரே வீட்டையும் விற்கவேண்டிய சூழ்நிலையை
“விஸ்வரூபம்” படத்திற்கான தடை உருவாக்கி விட்டது
என்று “அன்று” சொன்ன “உண்மை” என்னவாகும்…?

நேற்று, ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் பேசும்போது
சொன்னார் – 37 வருடங்களாக என் இயக்கத்தினர் தமிழகத்தில்
பொதுப்பணி – மக்கள் பணி – ஆற்றி வருகின்றனர் என்று…

ஆனால், அதைத்தொடர்ந்து நற்பணி இயக்கத்தின் சார்பாக
வக்காலத்து வாங்கிய ரசிகர் 40 வயதிற்கும் குறைவாகவே
தெரிந்தார்…( அவரும், தன் தலைவரை பின்பற்றி
3 வயதிலேயே தொண்டாற்ற வந்து விட்டார் போலும்…)

.
கடந்த 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டளித்தவர்கள்
எண்ணிக்கையில் –

2,16,28,807 பேர் பெண்கள் என்பதும்
2,12,44,129 பேர் ஆண்கள் என்பதும்

அரசியல்வாதிகள் மனதில் வைக்க வேண்டிய ஒரு செய்தி….

திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும் கீழ்க்கண்ட பெண்மணிகளின்
வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம் பெரும்பாலான தமிழக பெண்
வாக்காளர்களுக்கு தெரியும் என்றே நம்புகிறேன்….

தெரியாதவர்களுக்கும் – தேர்தல் வரும்போது எதிர்க்கட்சிகள்
தெரியப்படுத்தி விடும்….

திருமதி ஸ்ரீவித்யா
திருமதி வாணி கணபதி
திருமதி சரிகா தாகூர்
திருமதி சிம்ரன்
திருமதி கௌதமி தடிமல்லா

இந்த நிலையில், தமிழக மொத்த பெண் வாக்காளர்களின்
ஒரு சதவீத ஓட்டையாவது திரு.கமல்ஹாசன் அவர்களால்
பெற்று விட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறதா…?

2010-ஆம் ஆண்டிலேயே திரு.கமல்ஹாசன் அவர்கள் –
தான் பொதுவாக விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்றும்
ஒருவேளை எதிர்காலத்தில் நடிக்க நேர்ந்தால், அதன் மூலம்
வரும் வருமானம் முழுவதையும், எய்ட்ஸ் நோயினால்
பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்காக செலவழிப்பேன்
என்றும் சொன்னார்….

அண்மைக்காலங்களில், நமக்கு தெரிந்து அவர் போதீஸ்
விளம்பரங்களிலும், பிக்-பாஸ் நிகழ்ச்சியிலும் நடித்து
வருகிறார்…. இவற்றில் இனாமாக நடித்திருப்பார் என்று
நாம் எதிர்பார்க்க முடியாது….சில, பல கோடி ரூபாய்கள்
வருமானம் வந்திருக்கும்….

தான் அடுத்து, தமிழக செய்தியாளர்களிடையே பேசும்போது
இதில் எவ்வளவு கோடிகளை எய்ட்ஸ் பாதித்த
குழந்தைகளுக்காக செலவழித்தார் என்கிற விவரங்களையும்
அவசியம் சொல்ல வேண்டும்….

அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த விவரங்கள் மிகவும் உதவியாக இருக்கும்…..

( ஒரு அவசர தொலைபேசி அழைப்பு காரணமாக வெளியே
செல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்… எனவே,
இந்த இடுகையை இத்துடன் முடிக்கிறேன்…
எங்கே போகப்போகிறோம்.. மீண்டும் அடுத்த சந்தர்ப்பத்தில்
இன்னும் விவரமாக பேசலாம்…..

– தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய திருப்பம்
குறித்து நண்பர்கள் தங்கள் கருத்துகளை பின்னூட்டம்
மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். )

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to நேற்று சென்னையில் சந்தித்த 2 பேரும் கோமாளிகள் அல்ல….

  1. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    பார்த்தசாரதி அவர்திகள் திரை உலகில்
    7Th சானல் நாரயணனுக்கும்,தாணுவுக்ககும் செய்த சாதனைகளையும் குறிப்பிடலாம்.
    தன்னை அதிபுத்திசாலி என்று காட்டிக்கொள்வதில் தனிக்கவனம் கொள்பவர்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப கொச்சின் தேவதாஸ்,

      கலைப்புலி தாணுவுக்கு இவர் செய்தது குறித்து தெரியும்.

      7th சானல் நாராயணன் விஷயம் தெரியாது… சுருக்கமாக
      இங்கே சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்…?

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. chandramouly.venkatasubramanian's avatar chandramouly.venkatasubramanian சொல்கிறார்:

    when his name was changed from Parthasarathy to kamalahassan?.In the film kalathur kannamma , itself he was known as Kamal?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      thiru.chandramouly.venkatasubramanian,

      During a 2013 appearance on an episode of
      “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”,
      he said that his parents originally named him
      “Parthasarathy” and his mother always used to call him by that name only…!!!

      -with all best wishes,
      Kavirimainthan

  3. Kamal's avatar Kamal சொல்கிறார்:

    //அந்த குல்லா இந்த குல்லா என்றெல்லாம் சொல்லி விட்டு
    கடைசியில் கெஜ்ரிவால் குல்லா போட்டு விட்டார்.//
    Mandi Mela iruntha kondaiya
    maranthudeenkale mr. KM alias Rajasekar

  4. Woraiyur Pugal's avatar Woraiyur Pugal சொல்கிறார்:

    ரஜினியை முந்தி கொண்ட அரசியல் ஆசையோ….கமல் காணமல் போவார் நிச்சயம்,.

  5. MANI's avatar MANI சொல்கிறார்:

    one thing is sure that kamal will not become chief minister of tamilnadu anytime.
    there is no tatkal chief minister or any readymade cheif minister for that matter.

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… கமலைப் பற்றி எழுத எத்தனையோ எதிர்மறை விஷயங்கள் இருக்கும்போது, ஸ்ரீவித்யா (அதிலும் இறந்தவர், கமலின் மனைவி என்று அறியப்படாதவர்), வாணி, சரிகா…. போன்றோரைப் பற்றி எழுதியதை ரசிக்க இயலவில்லை. கருணானிதி …..நம்பர் 1 அல்லவா? ….அவரைப் போன்ற …. பெண்கள் வாக்குகளைக் கவரும்போது, கமலஹாசன் ஏன் கவரமாட்டார்? உங்கள் அனுமானம் தவறாகும். ஸ்டாலின் …..என்ன என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியாதா? ……… அல்லது அவரது மகன் உதயனிதி எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவர்கள் செய்யாத எந்தத் தவறை கமலஹாசன் செய்தார்? அவர் நீங்கள் குறிப்பிட்ட யாரையாவது, அவர்கள் எண்ணத்துக்கு எதிராக ஏதேனும் செய்தாரா?

    உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஒருவர் இப்போதைய அரசியலில் தலைமை தாங்கவேண்டும் என்றால், பிறந்த குழந்தை மட்டும்தான் அதற்குத் தகுதியானது, ஏனென்றால் ஒரு தவறும் செய்யாதது அதுதான்.

    நிற்க,
    கமலஹாசன் அரசியல் தளத்துக்கு வந்தால் என்ன நடக்கும்? திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரியும். ரஜினியும் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும்?………..ஸ்டாலின் முதல்வராவதில் கொண்டுபோய்விடும். …………. 20% ஓனர் சகோதரி கனிமொழி திகார் வாசம் செய்தவர், கேடி பிரதர்ஸ் அடிக்காத கொள்ளைகளா? அல்லது வெறும் கையில் முழம் போட்டு ……….. ….. உதயனிதி உருப்படியானவரா? அல்லது, படிப்பு வாசனை இல்லாத சகோதரர் குடும்பம், பொறியியற் கல்லூரிகளுக்கும் குவாரிகளுக்கும் சொந்தக் காரரானது எப்படி? அல்லது தன்னை மணந்துகொண்டதனாலேயே பல பள்ளிகளுக்குச் சொந்தக்காரராக மனைவி ஆனது எப்படி?

    நியாயமான ஒருவர்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பது கொஞ்சம்கூட நியாயமற்ற எதிர்பார்ப்பு. கொள்ளைக் கூட்டத்துக்கு (பெரும்பான்மை மக்கள்), கொள்ளையர்கள்தான் தலைவராக இருக்க இயலும். நான் நியாயமாக நடந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தால், ஆட்சிக்கு வந்த நிமிடம், லஞ்சம் வாங்கினார் என்று கம்பிளெயின்ட் வரும் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்வேன், பள்ளிக்கு வரவில்லை, ஓபி அடிக்கிறார் என்று கம்பிளெயின்ட் வரும் ஆசிரியர்களையும், பேப்பர் ஒழுங்காகத் திருத்தாதவர்களையும், ரிசல்ட் காண்பிக்காதவர்களையும் டிஸ்மிஸ் செய்வேன். கோவிலைச் சரியாக பராமரிக்காத ஆபீசர்களை வீட்டுக்கு அனுப்புவேன். கள்ளத்தனம் செய்யும் ஐஏஎஸ் ஆபீசர்களையும், ஐபிஎஸ் ஆபீசர்களையும் வெளியேற்றும் வழியைப் பார்ப்பேன் (ஏனென்றால் அதற்குத் தனித் துறை உள்ளது), கமிஷன் வாங்கும் மின்சார மற்றும் எல்லா அரசு ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வேன். 1 மாதத்துக்குள் தீர்ப்பு சொல்லாத அல்லது தேவையில்லாத வாய்தா வழங்கும் வழக்கத்தை நிறுத்துவேன். பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாத மக்களை ஜெயிலில் போடுவேன். லஞ்சம் கொடுத்தால் அவர்களை 20 வருடம் சிறையில் தள்ளுவேன். வாக்களிக்க லஞ்சம் வாங்கினால் 50 வருடம் சிறையில் தள்ளுவேன். கொடுப்பவரை 500 வருடம் சிறையில் தள்ளுவேன். அப்புறம் நான் மட்டும்தான் அனேகமாக தமிழ்னாட்டில் இருப்பேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      எத்தகைய கருத்தையும் சொல்லலாம்….ஆனால், வார்த்தைகளை பயன்படுத்துவதில்
      கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

      திரு.கமல்ஹாசன் உங்களுக்கு பிடித்தமானவராக இருக்கலாம். ஆனாலும் கூட – உங்களிடமிருந்து இத்தகைய ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை. சார்… நன்றி. I appreciate your editing. உங்கள் பாயின்டைப் புரிந்துகொண்டேன்.

        கமல் எனக்குப் பிடித்தவர் கிடையாது. அவர் அரசியலுக்கு வந்து நிச்சயம் தோல்வியடைவார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அவர் பேச்சை, அவரைத் தவிர யாராலும் புரிந்துகொள்ளமுடியாது. நேற்றுவரை அவர் திமுகவின் ஜால்ராவாக இருந்தவர். ரஜினி நிச்சயமாக மக்களைக் கவரும் வகையில் பேசக்கூடியவர், உண்மையைத் தெளிவாகச் சொல்லக்கூடியவர், ஆனால் அவருக்கு வயது இல்லை. கமலஹாசன், ராயப்பேட்டை பெனெஃபிட் பண்ட் திவால் ஆனதற்கு காரணமா என்பதை நீங்கள் விசாரிக்கலாம் (மருதனாயகம் படம்).

        இருந்தபோதிலும், நீங்கள் குறிப்பிட்ட குறைகள் (மனைவி போன்ற தனிப்பட்ட குணாதிசயங்கள்), கருணானிதியிடமும் அதிகமாக உண்டு. அது ஒரு பெரிய விஷயமாக மக்களால் நினைக்கப்படாது. அவருடைய துறையில் மிகவும் நேர்மையாக இருப்பது கடினமான ஒன்று. இந்த வரிசையில் ஸ்ரீவித்யா மற்றும் சிம்ரனைச் சேர்த்ததை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. Gossip கூடாதல்லவா?

        தமிழ்னாட்டுக்கு இப்போது ஒரு நல்ல தலைமை (அல்லது இருவர்-எதிர்க்கட்சியாக) தேவை. அதற்கு யாரேனும் வரமாட்டார்களா என்பதே என் எண்ணம். ஆரம்பத்தில் அவர்கள் பாஜகவைப் பற்றிப் பேசாவிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. மக்களின் எண்ணம், பிறகு அவர்களை அந்த நிலையை எடுக்கவைத்துவிடும். அதனால்தான் ஜெ. பாஜகவுடன் கூட்டு வைக்கவில்லை, கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தார், என்னதான் மனதளவில் பாஜக அவருக்கு காங்கிரசைவிட நெருக்கம் என்றபோதும்.

        கெஜ்ரிவாலைச் சந்தித்தார் என்பதெல்லாம் ஒரு நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும். அதனால், கமலஹாசன் மிக நேர்மையானவர் என்றெல்லாம் யாரும் சொல்லிவிடமாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அரசியலில் இருப்பவர்களில் (கம்யூனிஸ்ட் தலைவர்கள் தவிர) கமலையோ ரஜினியையோவிட நேர்மையானவர்கள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும் (ஏதேனும் ஓரிருவர் விட்டுப்போயிருந்தாலொழிய)

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    திரு.ஸ்டாலின், திரு.திருமாவளவன், திரு.வீரமணி ஆகியோர்
    திரு.கமல்ஹாசனின் முதலமைச்சராகும் விருப்பம் பற்றி இதுவரை
    கருத்து ஏதும் தெரிவிக்கவில்லையே … ஏன்..?

    திரு.ஸ்டாலின் – இவருக்கு மேடையில் இடம் வேறு கொடுத்தோமே என்று
    அவர் கடுப்பில் இருப்பார்; ஆனாலும் கருத்து எதாகினும் சொல்லியாக வேண்டுமே…!

    திரு.திருமாவளவன் – கமல், ரஜினி – யார் கூட்டணி பெஸ்ட் என்று
    யோசித்துக் கொண்டிருக்கிறாரா..? ஒருவேளை ரஜினி வராமல் இருந்து விட்டால்…?

    பாமக கருத்து ஏற்கெனவே தெரிந்தது தான்.
    பாஜக கருத்தும் தெரிந்தது தான்…

    ஆனால் காங்கிரஸ்….?

    காத்திருப்போம்…!!!

  8. சூர்யா's avatar சூர்யா சொல்கிறார்:

    வீரமணி அய்யா என்ன சொல்லுவார்?” தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும். கருப்பு சட்டை போட்டாலும் பார்ப்பனரை நம்பக் கூடாது” என்பார். திருமாவளவன் “எங்கே போனார் கமல் ஈழத்து இறுதிப் போரின் போது? இப்போது மட்டும் எப்படி அவர் முதல்வர் ஆசையில் அரசியலுக்கு வரலாம்?” என்று பாய்ண்டைப் பிடிப்பார்.

    ஸ்டாலின் பாடு சற்றே திண்டாட்டம்தான். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கமல் எங்கே இருந்தார் என்று கேட்கலாம்..ஆனால் கமல் “நான் அந்தக் காலத்திலேயே தார் சட்டியுடன் திரிந்தவன்தான்” என்று ஏற்கனவே சொல்லிவிட்டார் (த்ராவிடத் திருநாட்டில் தார் சட்டியுடன் திரிந்தது, பெரியார் சிலைக்கு மாலை போடுவதும்தானே அரசியலில் புக முதல் தகுதி!). இஞ்சி தின்ன குரங்கு போல்தான் ஸ்டாலின் நிலை இருக்கும்.

  9. Kamal குல்லா's avatar Kamal குல்லா சொல்கிறார்:

    கமலஹாசன் மாதிரியே தமிழர்கள் எல்லாம் பெண் பொறுக்கிகள் என்று அவரின் தீவிரமான இரசிகரான புதியவன் நம்புவது மாபெரும் தவறு.

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      கமலஹாசனும் பெண் பொறுக்கி இல்லை. தமிழர்களும் இல்லை. இருந்தாலும், நடிகைகளுக்கு கோவில் கட்டிக் கும்பிடும் இனம் நம் தமிழினம் அல்லவா. நான் கமலின் தீவிர ரசிகனும் இல்லவே இல்லை. மற்ற இன்டெரெஸ்டிங் படங்களைப் போலவே கமல் படங்களையும் (சமீப காலத்தையது, அதாவது மை.ம.கா.ரா படத்தின் காலத்திற்குப் பிந்தையது) பார்ப்பேன்.

      நாம, வெளியில் தெரிவதை வைத்துப் பேசக் கூடாது. திரையுலகில், நம்பியார், சிவகுமார், சூர்யா, நாடகக் காவலர் மனோகரன், டி.ஆர்.ராஜேந்தர் (?) போன்ற வெகு சிலர்தான் (சிலரின் பெயர்கள் சட் என்று ஞாபகம் வரவில்லை) ஒருவனுக்கு ஒருத்தி என்ற கான்செப்டில் வாழ்பவர்கள். மற்றவர்கள் அனேகமாக அப்படி இல்லை. உங்களுக்கே தெரியும், நான் பல பெரிய ஸ்டார்கள் என்று அறியப்பட்டவர்களை இதில் சேர்க்கவில்லை என்று. அது ஒரு இன்டஸ்டிரி. அதற்குரிய வாய்ப்புகளும் ஒழுக்கங்களும் அப்படித்தான் இருக்கிறது. அந்த இன்டஸ்டிரியில் பெரும்பாலும் பெண்கள் எக்ஸ்பிளாய்ட் செய்யப்படுகிறார்கள்.

      நாம் பெண்களை எப்படிப் பார்க்கிறோம், நடிகைகளை நடிப்புக்காக ரசிக்கிறோமா அல்லது வேறு எதற்காவதா என்றெல்லாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம்.

  10. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    புதியவன்,

    மன்னிக்கவும்… உங்கள் logic ஏற்கத்தக்கதாக இல்லை.

    A சரி இல்லை என்று கூறினால், B யோக்கியரா, C யோக்கியரா, D யோக்கியரா
    என்றெல்லாம் கேட்பதை விதண்டாவாதம் என்று தானே
    சொல்ல வேண்டும்…?

    இவர் யோக்கியர் தான் என்று உங்களால் நியாயப்படுத்த
    இயலாமையே காரணம் என்று கொள்ளலாமா…?

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • Antony's avatar Antony சொல்கிறார்:

      I think he is arguing that people don’t care much about the personal life of the politician/actors based on history. Clearly note he did not have mentioned neither JJ nor MGR in his list.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார், அந்தோனி – இருவருக்குமான பதில்.

        ஒருவரின் சொந்த வாழ்க்கை அவரது அரசியல் பயணத்தில் மக்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெண்கள் விஷயத்தில், இப்போவும் சொல்கிறேன், கமலஹாசன் கெட்டவர் என்று சொல்ல ஆதாரம் இல்லை. அவருக்குப் பிடித்த வாழ்க்கை அவர் வாழ்கிறார். இதைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன். எனக்கு அவர் செய்வது தவறு என்று சொல்லமுடியவில்லை. கமலஹாசன் நிச்சயமாக அயோக்கியர் இல்லை (பெண்கள் விஷயத்தில்). குறித்துக்கொள்ளுங்கள்-எனக்கு அவர் வாழ்க்கைக் கொள்கை பிடிக்கவே பிடிக்காது, அதை நான் நம்புபவனல்ல, எனக்கு நம் பாரம்பர்யக் கொள்கையே பிடிக்கும்.

        அந்தோனி-உங்கள் அனுமானம் சரிதான். ரஜினி, எம்ஜியார், சிவாஜி, பிரபு, விக்ரம், விஜய், சத்யராஜ்…….. போன்ற எவரையுமே என் லிஸ்டில் குறிப்பிடவில்லை. நான் உதாரணத்துக்குத்தான் குறிப்பிடுகிறேன். எம்ஜியார், அவரது மனைவி சதானந்தவதி இருக்கும்போதே, ஜானகி அம்மையாரிடம் காதலில் விழுந்து குடும்பம் நடத்தினார். ஜானகி அம்மையாருக்கு அப்போது ஒரு கார்டியன் (கணவர்?) உண்டு. ஜானகி அம்மா (இவையெல்லாம் தெரிந்துகொள்வதற்காகத்தான் குறிப்பிடுகிறேன், சாதிக்காகவோ மதத்துக்காகவோ அல்ல) நாயர், அவர் அம்மா நாராயணி, இரண்டாவது திருமணமாக ராஜகோபாலய்யர் என்பவரை மணந்தார். இந்த ராஜகோபாலய்யர், பாபனாசம் சிவன் அவர்களுடைய சொந்த சகோதரர். சதானந்தவதி அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஜானகி அவர்களும் சேர்ந்து ஒரே குடும்பமாக வசித்தனர். கருணானிதி அவர்களும் தயாளு அம்மையாருக்கு பிள்ளைகள் இருக்கும்போதே, தர்மாவதி என்ற ராஜாத்தி அம்மையாரையும் இணைவியாகக் கொண்டார்.

        அடுத்து கா.மை சார் கேள்வி. கமலஹாசன் யோக்கியரா? இதுக்கு நேரிடையான பதில், இ ல் லை. அடுத்த கேள்வி-அரசியலில் யோக்கியர் உண்டா? இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. திருடனும், திருட்டைக் கண்டுகொள்ளாதவனும், திருடர்களோடு உறவாடுபவனும், திருட்டு நடந்ததை நடக்காததுபோல் ஆதரிப்பவனும் கொண்டதுதான் கடந்த 40-50 வருட அரசியல். இதில் யார் ‘யோக்கியர்’? அரசியலில், ரிலேடிவ்லி என்றுதான் பார்க்கவேண்டும், பார்க்கமுடியும். முழுவதும் ஒழுக்கமானவர்கள் மட்டும்தான் கருத்துக்கூறவேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் என்றால், நல்ல வெளி நாட்டில்தான் அதற்குரிய ஆட்களைத் தேடவேண்டும். இந்தியாவில் அப்படிப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு, அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக மக்களின் ஆதரவு (டெபாசிட் வாங்கும் அளவுகூட) கிடையாது.

        பட்டவர்த்தனமாக சொல்லிவிட்டேனா கா.மை சார்?

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          புதியவன்,

          // முழுவதும் ஒழுக்கமானவர்கள் மட்டும்தான் கருத்துக்கூறவேண்டும், அரசியலுக்கு வரவேண்டும் என்றால்,
          நல்ல வெளி நாட்டில்தான் அதற்குரிய ஆட்களைத் தேடவேண்டும். //

          இது எஸ்கேபிசம்… நல்லவர்கள் யாரும் கிடைக்க மாட்டார்கள்.
          ஆகையால் ரெடியாக இருக்கிற யோக்கியர் அல்லாதவரையே ஆதரிப்போம்..
          என்று துவக்கத்திலேயே முடிவு செய்து கொள்வது எனக்கு ஏற்புடையதில்லை.

          உங்கள் கருத்து உங்களுக்கு….!

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

  11. Lala's avatar Lala சொல்கிறார்:

    கா.மை அவர்களே தாங்கள் கமலைப்பற்றி தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் மறைந்த ஜெயலலிதாவுக்கும் பொருத்தமானவைதானே.
    அப்படிபட்ட ஒருவருக்கு அவரது ஆட்சிக்கு ஜால்ரா போட்டு விட்டு இப்போது கமலுக்கு மட்டும் அவர் புனிதரல்ல எனும் பிம்பத்தை ஏற்படுத்த படாத பாடு படுகிறீர்கள்.
    அதனாலோ என்னவோ தாங்கள் சொல்லும் கருத்துக்கள் எடுபடவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.