SBI ரிப்போர்ட்- இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மை தான்….


……………..

இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மை தான் என்று
ஸ்டேட் பேங்க், கவலையோடு ஒரு அறிக்கை
வெளியிட்டிருக்கிறது….

—————————————-

செப்டம்பர் 20-ந்தேதியிட்ட தினமணி செய்தித்தளத்திலிருந்து –

———————————–

இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மைதான்: எஸ்பிஐ
ஆய்வறிக்கையில் தகவல்
Published on : 20th September 2017

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துவிட்டது
உண்மைதான் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஆய்வு
தெரிவித்துள்ளது.

முன்னதாக, வளர்ச்சியைக் கணக்கிடப் பயன்படுத்தும் சில
‘தொழில்நுட்பக் காரணங்களால்’ இந்தியப் பொருளாதாரத்தில்
சுணக்கம் ஏற்பட்டுள்ளது –

என்று பாஜக தேசியத் தலைவர்
அமித் ஷா கூறியிருந்தார்.

அதற்கு அடுத்தநாளிலேயே இந்தியப் பொருளாதாரம்
சரிந்துள்ளது உண்மைதான் என்று எஸ்பிஐ கூறியுள்ளது.

இது தொடர்பான ஆய்வறிக்கையில் மேலும்
கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதத்தில் இருந்தே இந்தியப் பொருளாதாரத்தில் சுணக்கம்
நிலவி வருகிறது. அதுதான் இந்த நிதியாண்டில் முதல்
காலாண்டிலும் எதிரொலித்தது. இப்போதும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது. அரசு தனது செலவினங்களை
அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை சரிவில் இருந்து
மீட்க முடியும். இப்போதைய சூழ்நிலையில் அரசிடம் உள்ள
ஒரே வழியும் அதுதான்.

இந்தியப் பொருளாதாரம் இப்போதைய நிலையில் இருந்து
மீள்வதற்கு சிறிய உத்வேகம் தேவைப்படுகிறது. அதனை அரசு
அளிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக
இருக்கும் செலவுகளைக் கண்டறிந்து அதில் அரசு கவனமாக
பணத்தை செலவிட வேண்டும். இதேபோன்ற வழிமுறைகளை
முந்தைய அரசுகளும் கையாண்டுள்ளன என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து
6-ஆவது காலாண்டாக குறைந்துள்ளது குறித்தும், கடந்த 3
ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக 5.7 சதவீதம்
என்ற அளவுக்கு வளர்ச்சி குறைந்துவிட்டது தொடர்பாக –

திங்கள்கிழமை கருத்து தெரிவித்த அமித் ஷா, ‘சில
தொழில்நுட்பக் காரணங்களால்தான் இப்போது பொருளாதார
வளர்ச்சி குறைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கடந்த
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-14-ஆம்
ஆண்டில் 4.7 சதவீதமாகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி
பின்னர் 7.1 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்தது’ என்று
கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது கருத்துக்கு மாறாக எஸ்பிஐ
ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. மேலும், இந்தியப்
பொருளாதாரம் சரிந்து வருவது –

தாற்காலிகமானதுதான் என்றும் உறுதியாகக் கூற முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


——————————————————————-

பின் குறிப்பு –

SBI Chairman எப்படி இவ்வளவு தைரியமாக ஒரு
அறிக்கையை வெளியிட்டார்…? அதன் விளைவுகளை
சந்திக்கும் தைரியம் அவருக்கு இருக்கிறதா என்கிற
கேள்வி எழும்…..

அதற்கான ஒரே விளக்கம் –
இப்போதைய SBI Chairman (திருமதி அருந்ததி பட்டாசார்யா)
இன்னும் 15 நாட்களில் (6/10/2017) ரிடையர் ஆகிறார் …!!!
இனியும் அவர் அரசுக்கு பயப்படத் தேவையில்லை…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to SBI ரிப்போர்ட்- இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளது உண்மை தான்….

  1. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    // பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை: அருண் ஜெட்லி //
    m.dinamalar.com/detail.php?id=1859941 ….. அதான் பிரதமரை பார்த்து பேசிய பின்பு ” தூக்கி நிறுத்தி ” விட மாட்டாரா …? அப்பவும் திரு . காமை . அய்யா கூறிய “அந்த ஜி.எஸ் .டி ” அதாங்க எரி பாெருட்கள் விலையில் மட்டும் கை வைக்க மாட்டாேம் என்று ஆணித்தரமா கூறிவிட்டார் … நம்ம நிதியமைச்சர் … !அப்புறம் என்ன வீழ்ந்த பாெருளாதாரம் நிமிர்ந்துடும் .. அல்லவா …?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.