கவிஞருக்கு இன்று பிறந்த நாள்….


நான் நிரந்தரமானவன் – எனக்கு என்றும் அழிவில்லை
என்று அவரே சொல்லி இருக்கிறார்…

உண்மை தானே…
காலம் உள்ள வரையிலும்
கவிஞரின் நினைவு இருக்கும்….!!!

——————————
கவிஞரின் கனவு நிறைவேற வேண்டும் –

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கவிஞருக்கு இன்று பிறந்த நாள்….

  1. selvarajan's avatar selvarajan சொல்கிறார்:

    கவிஞர் அவர்களின் பாடல்களை நன்கு அறிந்தவர்கள் நாம் … அவரின் ” அனுபவ மொழிகள் ” மேலும் சிறப்பானவை — அதில் சட்டத்தைப் பற்றி : குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான் … குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான் …. யாருக்கு அதை வழங்குவது என்பதை ” பணம் ” முடிவு செய்கிறது — என்றும் …

    அழும்போது தனிமையில் — அழு … சிரிக்கும் போது நண்பர்களோடு — சிரி ….. கூட்டத்தில் அழுதால் ” நடிப்பு ” என்பார்கள் — தனிமையில் சிரித்தால் ” பைத்தியம் ” என்பார்கள் … என்றும் …

    நான் சாகும் போது தமிழ் படித்து சாகவேண்டும் …. என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று விரும்பிய கவிஞர் ….

    மனிதர்கள் பெரும் புகழ் இரண்டு வகைப்படும் — ஒன்று ” பெற்று சாவது — இன்னொன்று செத்து பெறுவது ” —- சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பெற்று செத்தவர்கள் — கோடிக் கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள் ….. என்று அற்புத மொழிகளை ஆயிரக் கணக்கில் அள்ளித் தெளித்தவர் …

    எமக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று : — ” யாருக்காகவும் உன்னை மாற்றி — கொள்ளாதே … ஒரு வேலை மாற நினைத்தால் — ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும் ” — என்ற வார்த்தைகள் மனதில் பதிந்து விட்டால் பச்சோந்தி வாழ்க்கை தேவையில்லாதது என்பது தானே புரியும் — !!!

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கவிஞர் கண்ணதாசனை எப்போது நினைத்தாலும்,
    தென்றல் தவழ்வது போன்ற ஒரு உணர்வு வருகிறது.
    லட்சக்கணக்கான தமிழர்களின்
    உயிரோடும், உணர்வோடும் கலந்து விட்ட ஒரு
    அற்புத மனிதர். எத்தனையோ சாதனைகள் புரிந்த பின்பும்,
    எந்தவித கர்வமும் இன்றி, ஒரு குழந்தையை போல் பழகியவர்.
    எம்.எஸ்.வி.க்கும் கண்ணதாசனுக்கும் இருந்த நட்பு ஒப்புவமை
    இல்லாத ஒன்று. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தமிழிசைக்கு தந்தது
    பெரும் கொடை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.