திரு.(சுஜாதா) ரங்கராஜன் அவர்கள் வாழ்ந்த விதம் குறித்து திருமதி சுஜாதா ரங்கராஜன் பேட்டி …

sujatha-cover-001a

சுஜாதா அவர்களின் எழுத்து என்றாலே –
எப்போதும் அதனூடே ஒரு மெல்லிய நகைச்சுவையும்,
குறும்பும் இழையோடிக் கொண்டே இருக்கும்….

ஆனால், 45 வயதிலிருந்து 75 வயது வரை
அவர் கடுமையான உடல்பாதிப்புகளால் அவதிப்பட்டு
வந்ததாக அவரது மனைவி சொல்கிறார்.
மறைவதற்கு முந்திய நாள் வரை எழுதிக் கொண்டே
இருந்திருக்கிறார்…

அப்பாடா – கதை, கட்டுரை, கவிதை, நாவல், நாடகம்,
திரைப்படம் என்று எவ்வளவு எழுதினார்….!!
( இவ்வளவும் 58 வயதுவரை ஒரு மூத்த அரசு
அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டே…! )
எப்படி முடிந்தது அவரால் என்று நினைத்துப் பார்த்தால்
பிரமிப்பாகவே இருக்கிறது…

திரு.(சுஜாதா) ரங்கராஜன் அவர்களுடன் வாழ்ந்த
நாட்களைப்பற்றி திருமதி சுஜாதா ரங்கராஜன் அவர்கள்
அண்மையில் ஒரு வார இதழுக்கு (குமுதம்-லைஃப்)
அளித்த பேட்டி நமது வலைத்தள நண்பர்கள்
அவசியம் படிக்க வேண்டிய ஒன்று……கீழே –

sujatha-1a

sujatha-2a

sujatha-3a

sujatha-4a

sujatha-5a

sujatha-6a

sujatha-7a

sujatha-8a

sujatha-9a

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to திரு.(சுஜாதா) ரங்கராஜன் அவர்கள் வாழ்ந்த விதம் குறித்து திருமதி சுஜாதா ரங்கராஜன் பேட்டி …

  1. Srini சொல்கிறார்:

    Dear KM sir,
    Thanks for sharing. He was a great man, but very simple. He did get the right recognition which is given for few others who are not that competent enough.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப ஸ்ரீநி,

      வெளிநாடுகளில் வாழும் பல நண்பர்கள் இந்த வலைத்தளத்தை
      விரும்பிப் படிக்கிறார்கள்… அவர்களில் பலருக்கும் இத்தகைய
      விஷயங்களை படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

      அவர்கள் இந்த மாதிரி நல்ல செய்திகள்/ கட்டுரைகளை
      படிக்கத் தவறி விடக்கூடாதே என்று தான் நான் இங்கு
      மறுபதிவு செய்கிறேன்.
      உங்களைப் போலவே நிறைய நண்பர்கள் இதை விரும்புகிறார்கள்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Mr.KM I am very lucky to get a medal, certificate and a book for my meritorious service, and a hand shake in my
    organization from him. He was the chief guest of that function.He was struggling to claim the steps to come to the stage I can never forget that event. I am preserving those things with his photograph. I read only Sujatha’s books be it is a fiction or otherwise. I bought all of Sujatha’s books. Mrs. Sujatha’s interview is superb though philosophical. Probably due to her advanced age maturity and unfulfilled dreams in her younger age. That may be due to the family practice and custom. Anyway, I am glad she is leading a healthy life without any illnes..I wish her a long life.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப கோபாலகிருஷ்ணன்,

      பேட்டியில் ஒரு வெகுளித்தனம், வெளிப்படைத்தன்மை
      காணப்படுகிறது. உள்ளத்தில் இருந்து வெளிவரும்,
      ஒப்பனை இல்லாத வார்த்தைகள்.
      நம்மால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

      சுஜாதா அவர்களைப் பற்றி எழுத வேண்டுமானால்
      எழுதிக்கொண்டே இருக்கலாம்……
      இந்த மாதிரி ரசிகர்களை பெற்ற அவரும் சரி,
      அவரை மாதிரி ஒரு எழுத்தாளரை கிடைக்கப்பெற்ற நாமும் சரி-
      கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்ல வேண்டும்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. badrinath சொல்கிறார்:

    படித்துவிட்டு சற்று அழுதேன்.. ஏன் என்று தெரியவில்லை…

  4. kaarikan சொல்கிறார்:

    காவிரி மைந்தன் அவர்களே,

    என்னதான் எனக்கு உங்களிடம் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் சுஜாதா பற்றி தற்போது நீங்கள் வெளியிட்டிருக்கும் பதிவு மிகவும் சிறப்பானது. சுஜாதா உண்மையிலேயே ஒரு அபூர்வ மனிதர். தனது பெருமை என்ற உண்மை தெரியாமலே அவர் மறைந்துவிட்டார். அவர் அளவுக்கு மற்றவர்களாக இருந்தால் பெரிய ஆட்டமே போட்டிருப்பார்கள்.

    நன்றி.

  5. Izzath Dubai UAE சொல்கிறார்:

    Thank you Sir for Sharing this.
    I like Sujathas Writings.
    I feel sad after reading his last days.

    Regards
    Izzath

  6. ravi சொல்கிறார்:

    பாவம் இவருக்கு வர வேண்டிய ராயல்டியை ஒரு “பிரபலம்” ஆட்டையை போட்டார்

  7. LVISS சொல்கிறார்:

    Thanks for the article —
    She sounds very philosophical about life – —

  8. venkat lakshmi சொல்கிறார்:

    அமர கவி பாரதியாரின் மனைவி பேசியது போல் இருந்தது கடவுள் நல்ல ஆரோக்கியம் தரட்டும்

  9. D. Chandramouli சொல்கிறார்:

    Dear KM, I was really moved when Ms Sujatha says about Sujatha’s thanking her for every little help that she rendered to him apparently during his last stages of life. To think of it, many of us in advancing age lead our lives the way Ms Sujatha describes. What have we achieved, what we expect during the rest of our lives, what we are now – nothing really matters. We just count our blessings for our day to day existence, hoping fervently that we wouldn’t become a burden to anyone, even to our close near and dear ones in the future.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சந்திரமௌலி,

      சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்…

      சிலருக்கு வயதாகி, தள்ளாமை வந்த பிறகாவது
      இது புரியும். சிலருக்கு எத்தனை வயதானாலும்
      இது புரியாது… கடைசி வரை மிரட்டிக் கொண்டே இருப்பார்கள் – கூட இருப்பவர்களை
      வதைத்துக் கொண்டே இருப்பார்கள்.

      இரண்டு ரகத்தினரையும் நான் பார்த்திருக்கிறேன் –
      முடிந்தவரை கவுன்சலிங் கூட பண்ணி இருக்கிறேன்.

      அதிருஷ்டவசமாக சின்ன வயதிலேயே என்னிடம்
      இந்த குணம் தொற்றிக் கொண்டு விட்டது.
      சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட –
      என் மனைவி, மகள்கள், உறவினர்கள் –
      அலுவலகத்தில் கூடப்பணிபுரிபவர்கள் (பியூன் உட்பட…) –

      – எல்லாருக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட
      thank you சொல்லிக்கொண்டே இருப்பேன்.

      திருமதி சுஜாதாவின் பேட்டியைப் படித்து விட்டு,
      என் மனைவி இது என்ன பெரிய அதிசயம் – நீங்கள்
      எப்போதும் சொல்வது தானே என்று கேட்டார்….!!!
      ( என் இடுகைகளை நான் அவருக்கு காட்டுவதில்லை …
      புத்தகத்தில் வந்த ஒரிஜினலைப் படித்தபோது தான் கேட்டார்…)

      நான் எப்போதும் சொல்லிக் கொண்டே இருந்ததால்,
      அது அவருக்கு அதிசயமாகத் தோன்றவில்லை… 🙂 🙂

      இருக்கும் வரை – முடிந்தால் பிறருக்கு உதவியாக இருப்போம்…
      முடியவில்லையென்றால் – குறைந்தபட்சம் உபத்திரவமாக
      இல்லாமலாவது இருப்போம்.

      டக்கென்று முடிவு வந்தால் – நாம் கொடுத்து வைத்தவர்கள்…!
      ( நம்முடன் கூட இருப்பவர்களும் கூட….. 🙂 🙂 )

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  10. D. Chandramouli சொல்கிறார்:

    Btw, during the interview, Ms Sujatha mentioned about a Kalki’s novel while writing which he passed away, and the novel was completed by his daughter. If I recall correctly, the said novel was ‘Amarathara’ and it was completed by Kalki’s daughter Anandhi with the help of father’s left over scribblings.

  11. janakiraman சொல்கிறார்:

    Excellent piece of article .Hats off to Madam Sujatha for such an honest and innocent outpouring coming from her heart

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.