முன்பெல்லாம் காமெடியாக இருந்த டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியின் ட்வீட்கள் – வர வர விரைவான பலன்களைத் தர
ஆரம்பித்து விட்டன.
பாவம் பொன்.ரா. அவர்கள்..!!
மாதக்கணக்கில் – படாதபாடுபட்டு,
டாக்டர் ராம்தாஸ் பின்னால் –
விஜய்காந்த் பின்னால் எல்லாம்
அலைந்து திரிந்து, துரத்தி துரத்தி ஒருவழியாக – பாராளுமன்ற
தேர்தலுக்கு முன்னர் பாஜகவின் பிரம்மாண்ட கூட்டணியை
உருவாக்கினார்.
சுனாமியாக வந்தார் சுப்ரமண்ய சுவாமி…..
முதலில் வைத்தார் ஒரு விசேஷ ட்வீட் – வைகோவிற்கு –
” வெளியேற்றப்படுவதற்கு முன்னால் நீங்களாகவே
மரியாதையுடன் வெளியேறி விடுங்கள்”
விளைவு – வைகோ வெளியேறி விட்டார்…..
வார்த்தைகளால் பாஜகவை/மோடிஜியை பிளந்து கட்டி விட்டு…!
இப்போது இரண்டாவது ட்வீட் –
இது டாக்டர் ராம்தாசுக்கு –
“PMK (founder Dr S) Ramadoss should also depart from NDA.
He is a LTTE orphan and butcher of Dalits.”
விளைவு – டாக்டர் வெளியே போய்க்கொண்டே இருக்கிறார்.
(வசவு அதிகம் இருக்காது – அன்புமணியின் வழக்கு சிபிஐ
வசம் நிலுவையில் இருக்கிறது….)
அடுத்து மூன்றாவது ட்வீட் –
விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது…
இது விஜய்காந்த்துக்கா அல்லது
திருமதி இசை அம்மையாருக்கா என்பது சஸ்பென்ஸ்
கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்தது…!!
இவை எல்லாவற்றையும் விட கடைசியாக வரப்போகும்
அந்த 4வது ட்வீட் தான் மிக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வரும் அந்த 4வது ட்வீட் ….?
அது யாருக்கு …..?
(ஆரம்ப காலத்தில் – கொஞ்சம் பொறுத்திருங்கள் – டிசம்பரில்
நிச்சயம் அமைச்சர் பதவி உண்டு என்று சொல்லப்பட்டதாம்.
பொறுத்திருந்தார் – பூமியாள ….!!
நிதி கேட்டாராம் – கிடைக்க வாய்ப்பே இல்லை
என்று சொல்லப்பட்டதாம்.
அப்போது உள்துறையாவது வேண்டும் என்று கேட்டாராம்.
இவருக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
near future -ல் கிடைக்கவும் வாய்ப்பில்லை…!!!
( ஆனால் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களுக்கும்
ரகசிய உத்திரவு போய் விட்டதாம் – இந்த ஆசாமியோ,
இவரது ஆட்கள் யாருமோ –
தெரிந்தோ, தெரியாமலோ எந்த அலுவலகத்தின் உள்ளேயும்
வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் – வந்தால் கோப்புகள்
காணாமல் போய் விடக்கூடும் என்று…!!
எனவே எல்லா அலுவலகங்களும் படு எச்சரிக்கையாக
இருக்கின்றனவாம் …)
நாமாக அனுப்ப வேண்டாம் – “சாபம்” கொடுத்து விட்டு,
தானாகவே போய் விடுவார் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு…
இவர் தானாகவே வெளியேறுவாரா அல்லது
பொருத்தமான நேரத்தில் – வெளியேற்றப்படுவாரா…
– என்பதை எதிர் காலம் தான் சொல்ல வேண்டும்….
அப்போது தான் வரும் அந்த 4வது ட்வீட் ……
யாரைப் பற்றி ……???





why not …….Modi ji may be
ஒருவேளை நம்ம பிரதமர் மோடியாக இருக்குமோ ???
Maharaja
தங்களின் முந்தைய இடுக்கைகளில் கூறியதை போல ….சு.சாமியின் திட்டங்களில் ” நிதி அமைச்சர் பதவி — கோவிந்தா ….. உள்துறை அமைச்சர் பதவி —-ஓஹயா ” …. அடுத்து நிலுவையில் உள்ளது தமிழ் நாட்டின் முதல்வர் கனவு ? அதனால் ஆவலோடு எதிர்பார்க்கும் —4 –வது ட்விட் ஏன் ” ராஜபக்சே ” பற்றியதாக இருக்க கூடாது ? அப்போ தானே தமிழர்களிடம் நற் பெயரை பெற முடியும் !
சுப்ரமணியன் சுவாமி அமைச்சர் பதவி கொடுப்பதாகச் சொல்லி
ஆசை காட்டி மோசம் செய்ததற்காக பிரதமர் மோடியைத் திட்டி
ட்வீட் செய்யத்தான் வாய்ப்புகள் அதிகம். எனவே 4வது ட்வீட்
பிரதமருக்கு தான் சமர்ப்பணம் செய்யப்படும்.
அவருக்கு வினை இவர்தான். இவருக்கு அவர்தான். தான் திருடி பிறரை நம்பான் என்பதுபோல இவரைப் பற்றி அவரும் அவரைப் பற்றி இவரும், ஒருவரை ஒருவர் பிளாக்மெய்ல் செய்வதற்காக நிறைய ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில் இவர் கேட்டது கிடைக்காதபோது, சாபத்தைக் கொடுத்துவிட்டு தானாகவே வெளியேறுவிடுவார். அவர்களும் தங்களுக்கு இவர் செய்த உதவிக்கு இத்தோடு போனால் பரவாயில்லை என்று விட்டுவிடுவார்கள்.
எனவே தன்னைத்தானே என்டிஏவிலிருந்து எஜெக்ட் ஆவதாகவும் அதற்கான பலனை என்டிஏ அனுபவிக்கவேண்டும் என்று சபித்தும் சுவாமி விடுவார் ஒரு ட்விட்.
அப்புறம்தான் இருக்கு ட்விஸ்ட்
வெளியே வந்தபிறகு தமிழர்களை
தன்பால் இழுக்க இந்தி மொழி எதிர்ப்பு, மீனவர் படகுகளுக்கு இலங்கையிடம் உத்தரவு, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை நண்பரிடம் பரிந்துபேசி உதவி,
திமுக மற்றும் அதிமுகவிடமிருந்து விலக்க 2ஜி , சொத்துகுவிப்பு,
மதிமுக விடமிருந்து விலக்க புலிகள் எதிர்ப்பு
பாமகவுக்கு ஒரு சிபிஐ வழக்கு
விகாவுக்கு தண்ணிகாட்டியே சமாளிக்கலாம்.
அப்புறம் என்ன, வருங்கால (நிரந்தர !) தமிழகமுதல்வர்தான். அப்போதைக்கு அவர் இவரைத் தேடி தமிழகத்துக்கு வரவேண்டிய நிலை வரும். அதைத்தான் இவரும் எதிர்பார்க்கிறார்.
சில நாட்களுக்கு முன் இவரின் டுவீட்…
இப்படி மோடியின் மேலாண்மையையும், வெளியுறவு அமைச்சரையும் கேவலப்படுத்த இவர் ஒருவரால் மட்டுமே முடியும்.
நானும் இதைப் பார்த்தேன். ட்விட்டரில் வலம்வரும் மோடிபக்தர்களுக்கும் பாஜக ஆட்சி ஆதரவாளர்களுக்கும் இது மிகவும் குளுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் இந்த ட்விட்டர் தமிழக மக்களுக்கும் தமிழக பாஜகவினருக்கும் சுவாமி அளிக்கும் ஷாக்ட்ரீட்மெண்ட் என்று எடுத்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது,
🙂
// Subramanian Swamy retweeted
kppradeepdr @kppradeepdr · 1h 1 hour ago
@narendramodi Sir, Please ban P-Notes, sack RBI Governor working against Country’s PM and fix the Swiss Club http://linkis.com/sunday-guardian.com/VoINI … @Swamy39 ///
அடுத்து ஆர்பிஐ கவர்னர் சாக்கிங்-ஐ எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது. பிரதமருக்கு எதிராக யாரும் (யாருமே என்றால் சுவாமியைத் தவிர யாருமே) வாயைத்திறக்கக் கூடாது என்றால் இது ஜனநாயக ஆட்சியாகத் தெரியவில்லை. மன்னராட்சியும் மன்னர்களை தீர்மானிக்கும் ராஜகுருவின் ஆட்சியாகத்தான் தெரிகிறது.
🙂 🙂
எல்லாம் நேரம்தான்.
கொடுமை … மகா கொடுமை.
அதைவிடக் கொடுமை –
மோடிஜி யின் ஈகோ இதை எல்லாம்
எப்படி அனுமதிக்கிறது என்பது தான்.
மோடிஜி இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள
நிச்சயம் ஏதோ பின்னணி இருக்கிறது…..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்