7 பேர் விடுதலை – நீதிபதி சந்துரு அவர்களின் கருத்து …

வடக்கில் உள்ளவர்களுக்கு –

ஒன்று – இந்த வழக்கின் பின்னணியோ, உள்விவரங்களோ
ஒன்றுமே புரியவில்லை.

இரண்டு – ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை
தமிழகம் தண்டனையின்றி தப்ப விடுகிறது என்கிற
தவறான கருத்து தொலைக்காட்சிகளின் மூலம் தொடர்ந்து
வெளியிடப்படுகிறது.

மூன்று – காங்கிரசின் அத்தனை தலைவர்களும்,
ம.மோ.சிங்கிலிருந்து நம்ம ஊர் ப.சி. வரை
அத்தனை பேரும் – இந்த 7 பேரும் டெர்ரரிஸ்டுகள்
என்று வேண்டுமென்றே தொடர்ந்து தவறாகப் பிரச்சாரம்
பண்ணுகிறார்கள். பிரதமரே தீவிரவாதிகளை தமிழக
அரசு ஆதரிப்பது சட்ட விரோதமானது என்று கூறுகிறார்.

தெரியாமல் சொல்பவர்கள், வேண்டுமென்றே சொல்பவர்கள்
ஆகிய இரண்டு தரப்பினரையும் நம்மால் மாற்ற முடியாது.
ஆனால் இவர்களை விட மோசமாக நடந்து கொள்ளும்
கருணாநிதி கும்பலை மக்கள் தான் கவனித்துக் கொள்ள
வேண்டும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்காக மீண்டும் காத்திருப்பதைத் தவிர
நமக்கு வேறு வழி இல்லை. சட்டம் நிச்சயம் நம் பக்கம் தான்
இருக்கிறது. ஒரு சில சடங்குகள் தவறி இருக்கலாம்.
ஆனால், இவர்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு
அதிகாரம் இருக்கிறது என்பதை மீண்டும் இடைக்காலத்
தடை உத்தரவை போடும்போதும் உச்சநீதி மன்றம் உறுதி
செய்திருக்கிறது. சம்பிரதாயத்திற்காக மத்திய அரசின்
அனுமதியைக் கோரி அனுப்பி வைத்திருந்தால் அதற்கும்
மறுப்பு தான் கிடைத்திருக்கும். உச்சநீதிமன்றம் இந்த
பின்னணியில் உள்ள காரணங்களை சுலபமாகப் புரிந்து
கொள்ளும்.

ஒன்று மட்டும் நிச்சயம்.
இவர்கள் விடுதலை செய்யப்படுவது தாமதமாகக் கூடுமே
தவிர, விடுதலையாகி வெளிவருவது உறுதி. அந்த
நாளுக்காகக் காத்திருப்போம்.

இடையில், நமது நிலையை முற்றிலுமாக ஆதரிப்பது
போல், ஓய்வு பெற்ற நீதிபதி திரு சந்துரு அவர்கள்
கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ள
கருத்துக்கள் கீழே –

justice k.chandru

“இந்த விவகாரத்தில் மீண்டும் யார் வழக்கு தொடர்ந்தாலும்,
ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்சுக்கு
தான் வழக்கு விசாரணைக்கு செல்லும். அவர்கள் அளித்த
தீர்ப்பை அவர்களே எப்படி தவறு என்று சொல்ல முடியும் ?
அதற்கான சாத்தியமே இல்லை.

குற்ற விசாரணை முறைச்சட்டம் 435ன்படி தமிழக
அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுடன் கலந்து
ஆலோசிக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
அதற்காக, மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்க வேண்டும்
என்று இல்லை. ஒருவேளை மத்திய அரசு, தமிழக அரசு
எடுத்த முடிவுக்கு எதிராக கருத்து கூறினாலும், அதனை
நிராகரிக்க மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது.

ஆயுள் தண்டனை என்பது குறைந்த பட்சம் 14 ஆண்டுகள்
சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள்
அந்த குறைந்தபட்ச தண்டனையை விட அதிக காலம்
சிறையில் இருந்திருக்கிறார்கள். எனவே, சிறையில்
அவர்களின் நன்னடத்தையைக் கணக்கிட்டு, சீர்திருத்த
அடிப்படையில் அவர்களை மாநில அரசு விடுவிக்கலாம்.

தண்டனை என்பது திருந்தி வாழத்தான் .
உயிரை எடுத்தால், உயிரை எடுக்க வேண்டும் என்றோ,
மாறுகால் மாறுகை வாங்க வேண்டும் என்றோ இல்லை.
சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சட்டப்படி மாநில அரசு எடுத்த முடிவை மத்திய அரசு
கட்டுப்படுத்த முடியாது”.

சரியான சமயத்தில், சரியான விளக்கங்களைக்
கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி –
திரு சந்துரு அவர்களே.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to 7 பேர் விடுதலை – நீதிபதி சந்துரு அவர்களின் கருத்து …

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    சரியான விளக்கம். நன்றி.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பர் கா.மை
    தேவையில்லாத மேற்கண்ட இரண்டு பின்கசிவுகளை எடுத்து விடலாமே!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.

      நண்பர்களுக்கு –

      commonsense என்று சொல்லிக்கொண்டு
      normal decency கூட இல்லாமல்
      இங்கு பின்னூட்டம் போட்டவரின்
      இரண்டு மறுமொழிகளை எடுத்து விட்டேன்.
      சில பேர், சில சமயம், இப்படித்தான்
      வேண்டுமென்றே செய்கிறார்கள்.
      என்ன செய்வது…?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        மிக்க நன்றி. அதை “பின்னூட்டம்” என்று சொல்லக்கூட விருப்பம் இல்லாமல்தான் “பின்கசிவு” என்று சொன்னேன்..:-)

  3. sella's avatar sella சொல்கிறார்:

    Thanks a lot for providing a clarification and feel better now. I have been following you for a while and happy to see the anger on perverted minds.

  4. Genes's avatar Genes சொல்கிறார்:

    ஒன்று மட்டும் நிச்சயம். இவர்கள் விடுதலை செய்யப்படுவது தாமதமாகக் கூடுமே தவிர, விடுதலையாகி வெளிவருவது உறுதி.

    அந்த நாளுக்காகக் காத்திருப்போம். Well said!

  5. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    today there is one article in “savukku” with caption ” seven people release; law and politics”.
    (ezhuvarin vidudalai; sattmum arasiyalum). i request to go through also.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கோபால்சாமி.

      மிக விளக்கமான,
      மிகத் தெளிவான இடுகை.
      நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும்
      செய்யத்தவறுவதை இங்கு
      வலைத்தளங்கள் தான் சரி செய்கின்றன.
      நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டுகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. M Nithil's avatar M Nithil சொல்கிறார்:

    All these 7 people will be released without any iota of doubt. But my concern is what about the future of these people especially Perarivalan who spent all his youth behind bars.

  7. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Good to read quite a few significant news items that main stream media fail to cover. Significant in the sense that an interpretation of the law is put forth by none other than Justice Chandru.

  8. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    //காங்கிரசின் அத்தனை தலைவர்களும், ம.மோ.சிங்கிலிருந்து நம்ம ஊர் ப.சி. வரை அத்தனை பேரும் – இந்த 7 பேரும் டெர்ரரிஸ்டுகள் என்று வேண்டுமென்றே தொடர்ந்து தவறாகப் பிரச்சாரம் பண்ணுகிறார்கள். //

    மிக சரியாக சொன்னீர்கள். இதை பாருங்கள்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.