கௌஹாத்தி வழக்கிற்கு சென்னை லாயர் பெண்மணியை ஆலோசனைக்கு அணுகியதன் பின்னணி என்ன ..? – கொல்கத்தாக்காரர் கேட்கும் கேள்வி ….. !!
கொல்கத்தாவின் சாரதா சிட் பண்டு தொடர்பாக எழும் சர்ச்சைகள்
பல ரகசிய “டீலிங்” குகளை வெளியுலகத்திற்கு கொண்டு வருகின்றன.
விஷயங்கள் தெரிய வரும்போது பகீரென் கிறது. சுமார் 1200 கோடி ரூபாய்
பணம் – இஷ்டத்திற்கு விளையாடப்பட்டிருக்கிறது. அத்தனையும்,
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் சிறுகச்சிறுக சேர்த்த பணம்.
சேர்ந்த முதலீட்டுப் பணத்தை எதில் தான் முதலீடு செய்வது என்றில்லாமல்
அந்தப்படுபாவி -எதிலெதிலோ போட்டிருக்கிறார்.
ஒரு வியாபாரியிடம் பணம் குவிந்திருக்கிறது என்று தெரிந்தால் –
அரசியல்வாதிகள் – ஆளாளுக்கு எப்படி எல்லாம் பணம் பிடுங்குகிறார்கள்..!
ஒரு கொல்கத்தா அமைச்சரும், இரண்டு TMC பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த சிட் பண்டு அதிபரிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பிடுங்கி இருக்கிறார்கள். இதை அவர்கள் protection money அதாவது அந்த வியாபாரியை வரக்கூடிய (அரசிடமிருந்து .. ?) தொல்லைகளிலிருந்து “பாதுகாக்க” என்று கூறி வாங்கி இருக்கிறார்கள் !
சிட் பண்டு முதலாளி சுதிப்தா சென் தலைமறைவானதும், பல விசேஷ போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு, வலைவீசித்தேடி, இறுதியில் அவர் காஷ்மீரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு கொல்கத்தா கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்டவுடன் – அடி, உதைக்கு பயந்து – கொல்கத்தா
போய்ச்சேரும் முன்னரே – போலீஸ் கஸ்டடியில்
இருக்கும்போதே – அவர் பல தகவல்கள் அடங்கிய 18 பக்க வாக்குமூலம் ஒன்றை சொந்தக் கையெழுத்திலேயே
(தப்பும் தவறுமான ஆங்கிலத்தில்) எழுதிக் கொடுத்திருப்பது
பல சர்ச்சைகளைக் கிளப்பி இருக்கிறது. இதுவரை வெளியுலகிற்கு
தெரியாத பல மர்மங்கள் இதன்மூலம் வெளிவருகின்றன.
.
TMC மீது எழும் குற்றச்சாட்டுகளை திசை திருப்ப, அந்தக் கட்சி –
சுதிப்தா சென், அவருடைய வாக்குமூலத்தில் கொடுத்திருக்கும் மற்ற
விஷயங்களை வெளிக்கிளப்புகிறது.
அது என்ன “மற்ற விஷயங்கள் ” …?
சென்னையில் தான் இருக்கிறோம்.
ஆனால் சென்னையைச் சேர்ந்தபிரபலஸ்தர்களின்
பல நடவடிக்கைகளே நமக்குத் தெரிவதில்லை.
நமது சென்னை மீடியாக்கள் – டிவியாகட்டும், பத்திரிக்கைகளாகட்டும் –
இது விஷயத்தில் “கப்சிப்”.
இன்று வரை தமிழ் மீடியாக்கள் எதுவும் இந்த விஷயங்களைப்பற்றி
ஒன்றுமே கூறவில்லை.
கொல்கத்தாவிலிருந்து வெளிவந்திருக்கும்
தகவல்களைப் பாருங்களேன் –
கௌஹாத்தியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரின்
மனைவி அவர்கள் ஊரில் ஒரு டிவி சேனலை நடத்தி வருகின்றார்.
அதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. அவர், சென்னையைச் சேர்ந்த
சீனியர் பெண் லாயர் ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் கண்களில்
சாரதா சிட் பண்டு சுதிப்தா சென் மாட்டுகிறார். சுதிப்தா சென்னிடம்
குவிந்திருக்கும் சிட் பண்டு பணம் பலர் கண்களை உறுத்துகிறது.
கௌஹாத்தி பெண்மணியின் டிவி சேனலை தனக்காக 40 கோடி ரூபாய்
கடனாக முதலீடு செய்து வாங்கும்படி இந்த லாயர், சுதிப்தா சென்னுக்கு
advise செய்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்கள்
குடும்பத்துடன் பிசினஸ் தொடர்பு வைத்திருப்பது ஆபத்து சமயத்தில்
உதவியாக இருக்கும் என்று எனக்கு advise கூறப்பட்டதால் –
இந்த கன்சல்டேஷனுக்காக என்றே ஒரு கோடி ரூபாய்க்கு
மேல் அவர்களுக்கு கொடுத்து விட்டேன். என்று
எழுதப்பட்ட வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார் சுதிப்தா சென்.
சென்னையில் இருப்பவர்களுக்கு –
கௌஹாத்தி டிவியின் மீது
இப்படி ஒரு பற்றுதல் இருந்திருக்கிறது …!! என்பதும் நமக்கு
கொல்கத்தா மூலமாகத்தான் தெரிய வருகிறது.
கன்சல்டேஷனுக்கு – கௌஹாத்தியிலோ, கொல்கத்தாவிலோ, டெல்லியிலோ இல்லாத லாயர்களா ? சென்னை லாயர் இதில் சம்பந்தப்பட்டதன் மர்மம் என்ன ..? அந்த லாயர் பெண்மணி மத்திய அமைச்சரின் மனைவி என்பது
தானே இந்த காஸ்ட்லி கன்சல்டேஷனுக்கான காரணம் ….
என்று கேட்கிறது TMC…. !!!
எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் –
எப்படி கேள்விகள் கேட்டாலும் –
அடிப்படையில் இந்த சரிவின் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதும்
TMC க்கு இந்த மோசடியால் மிகப்பெரிய நெருக்கடி
ஏற்பட்டிருப்பதும் உண்மை.
இந்த விவகாரத்திலிருந்து தமிழ் மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய
விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.
———————————————————————————————————————————-
திரினமூல் காங்கிரஸ் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி –
Page 10 of Sudipta Sen`s letter to the CBI has thrown up piquant and important questions in relation to the role of a lady lawyer from Chennai, the wife of a senior Congress Minister, in the goings-on of the Saradha Group and its bucket-shop operations. These questions need to be clarified by the lady and/or her husband.
1. Senior Advocates are usually barred from meeting clients directly. Why did the lady lawyer make an exception in the case of Sudipta Sen? Who was the solicitor? Why were conventions of the legal profession ignored in this `special` matter?
2. One Congress Minister`s lawyer-wife draws up an agreement to get Rs 42 crore in capital for a former Congress Minister`s wife for a dubious business project. What was the lady lawyer`s interest in the venture? Why was she soliciting capital and investment from Sudipta Sen, almost in the manner of an investment banker?
3. The proposed business venture ` a television channel ` and its promoter both belonged to the Northeast. So many good, senior lawyers are available in New Delhi and Guwahati. Why did the promoter go to a lawyer in faraway Chennai to draft the agreement and act as consultant? Was there a hint of political coercion and protection money?
4. The lady lawyer, wife of a powerful minister, allegedly charged Rs 1 crore to draft an agreement other lawyers could have done for a much smaller sum. Why was she paid such a generous fee? What was the quid pro quo?




எல்லாம் சிதம்பர ரகசியம்!
unable to share.
பரம்பரையாக வந்த கோடிக்கணக்கான பணம்.
40 ஆண்டுகளாக தொழிலிலும், அரசியலிலும்
சம்பாதித்த கோடிகள் வேறு.
மகன் மூலம் ஏகப்பட்ட முதலீடுகள் –
இத்தனையும் பத்தவில்லை –
ஆசைக்கு ஏது அளவு ?
இறைவன் என்று ஒருவன் இருந்தால் …………
ராஜகோபாலன்
what do they do with the huge money?
நம் நண்பர் காவிரி மைந்தனிடமிருந்து,இன்னொரு தங்கமான பதிவு ! மிக்க நன்றி
நம் கோபம் அரசியலவாதிகளிடமிருந்து,பொதுமக்களுக்குப்போய்.இப்போ இறைவனிடம் செல்கிறது.அதற்குப்பிறகு சன்யாசம்தான்!
அட்வகேட் என்பது வழக்கறிஞர், வழக்குரைஞர் என்றெல்லாம் ஆகிய
பிறகு, வழக்குக்கேற்ற “சிறப்பு” தகுதிகளுடன் கூடிய வழக்கறிஞர்களின்
பங்களிப்பு மற்றும் தேவை குறித்தெல்லாம் விவாதிக்க முடியாது.
நியாயமுமில்லை. சில தொழில்களுக்கு ETHICS இல்லை.
இடதுசாரி கம்யூனிஸ்ட்களை ஒரங்கட்டி ஆட்சிக்கு வந்த வலதுசாரி
திரிணாமுல் எம்.பிக்கள் இருவரில் ஒருவருக்கு மாத சம்பளமாக ரூபாய்
பதினைந்து லட்சம் வேறு.
ஊரார் பணம் கொட்டிக் கிடக்கும் நிதி நிறுவனங்களில் அரசியல்வாதிகளின்
குறிப்பாக் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கை இருக்கும் என்பது
ஊரார் அறிந்த ரகசியம்.
நம்மூர் ஆழ்வார்பேட்டை பெனிபிட் பண்டு, ராயப்பேட்டை பெனிபிட் பண்டுகளில்
பணம் வாங்கியவர் யாரும் சாதாரண தள்ளு வண்டி வியாபரிகள் இல்லை.
பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் தான். இவர்களுக்கு விதிகளை
(?!) மீறி கடன் வழங்க சிபாரிசித்தவர்கள் யார்? ஈஸ்வர் பைனான்ஸ், ரமேஷ்
கார்ஸ் என்றெல்லாம் வேறு இருந்தது. அவற்றின் முதலாளிகள் இன்னமும்
இருக்கிறார்கள். (எங்கு என்பதே யாரும் அறியாத ரகசியம்).
சித்திக்கு சித்தப்பா வந்ததின் பின்னணி வேறு இதில் இருக்கிறது.
முதலீட்டாளர்கள் தான் போலீஸ் கமிஷ்னர் வசம் பெட்ஷன் கொடுத்து
விட்டால் பணம் திரும்பி விடும் என்ற நம்பிக்கை பொய்த்த நினைவோடு
இருக்கிறார்கள்.
திருப்பூர் பாசியும், ஈரோடு மாவட்டத்தைச் சுற்றி மேய்ந்த “ஈமு”க்களும்
கூட இந்த வகை தான்.
“சாரதா” உமையின் இன்னொரு பெயர். கொல்கத்தாக்காரர்கள் “காளி”
உபாசனையில் மிகுந்த நம்பிக்கையும், ஈடுபாடும் கொண்டவர்கள். அவள்
பெயரைச் சொல்லி ஏமாற்றியவர்களை அவள் பார்த்துக் கொள்வாள்.