“விஸ்வரூபம் தமிழ் பிரிண்டை தமிழக அரசு அலுவலகம்
முன்பு எரிப்பேன்” -சொல்லி இருப்பது கமல்ஹாசன்
தான்…!!!
“எல்லாவற்றையும் இந்த உலகமே பார்த்துக் கொண்டுதான்
இருக்கிறது. எனது திரைப்படத்தையும் தாண்டி பிரச்சினை
வெகு தூரம் போய் விட்டது என்றே நான் நினைக்கிறேன்.
விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
விஸ்வரூபம் படத்தின் தமிழ் பிரிண்டை எடுத்துக்கொண்டு
போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப்
போகிறேன்.
(The world is watching. I think the issue
has gone far beyond my film. I am ready to
face the consequences. I am going to take
the print of the Tamil version of
Vishwaroop and burn it in front of the
relevant government office.)
அவர்கள் கருவிலேயே என் குழந்தையை சிதைக்கிறார்கள்.
நானே அந்தக் குழந்தைக்கு ஒரு முறையான தகனத்தைச்
செய்து விட்டுப் போகிறேன். நான் பாசிசத்துக்கு அடிபணிய
மாட்டேன். இது என்னை பொருளாதார ரீதியாக
தீர்த்துக் கட்டும் சதி. என்னை பணமற்றவனாக
கொன்று போடும் சதி. நான் மீண்டும் ஒரு படத்தை
எடுக்கவே முடியாது என்ற நிலையை உறுதிப்படுத்த
நிகழ்த்தப்படும் ஒரு சதி. அத்தகைய நிலை எனக்கு
சாவு போன்றதே.
(They are aborting my baby. I might as well
give it a proper cremation. I won’t
bow down to fascism. This is a conspiracy
to finish me off financially.To kill me.
To make sure I am never able to make another
film. And that is as good as death for me.)
நான் மிகவும் கர்வம் மிகுந்தவன்.
லாஸ் ஏஞ்சலீசில் என் திரைப்படத்தின் வெற்றிகரமான
உலக வெளியீட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறேன்.
இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுப்
படங்களிலேயே அதிக வசூல் ஈட்டும் படமாக
இது இருக்கிறது என்று எனக்கு சொல்லப்படுகிறது.
(I am a very arrogant man. I have just
returned from a very successful world
premiere of my film in Los Angeles. From what
I’ve been told it’s probably the biggest
average grosser among all foreign films
released in the U.S.)
என் திரைப்பட வெளியீடு பெண்களால்
பாழாகிப் போவது எனக்கு பழகிப் போன ஒன்றுதான்.
(I have a track record of women spoiling my
premiere plans.)
என்னுடைய டி.டி.எச். திட்டத்தை எதிர்த்தன் மூலம்
மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கலைத் திருடர்களுடன்
சேர்ந்திருக்கிறார்கள்
( by opposing my DTH proposal the
multiplex chains are actually one with the
pirates.)
நான் கைது செய்யப்படலாம். அது ஒன்றும்
பெரியபிரச்சினையில்லை. அவர்கள் காந்திஜியை கூடத்தான்
கைது செய்தார்கள்.
(I might get arrested. But that’s okay. They
arrested Gandhiji too.)
அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கலைக்க
விரும்புகிறார்கள். கிறிஸ்துவர்களுடனும்,
முஸ்லீம்களுடனும், அரசியல்வாதிகளுடனும்
பேச்சு வார்த்தை நடத்தி என் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள
வேண்டுமாம்.
என் படைப்புத் திறனை நான் ஏன் பாசிசத்துக்கு அடி பணிய வைக்க
வேண்டும்?
(They want to abort my child. I am supposed
to talk to Christians, Muslims
and politicians to save my child.
Why would I address my creativity to
fascism?)
—————-
கமல்ஹாசன் இப்படி எல்லாம் சொல்லி இருப்பார் என்று
நம்ப முடியவில்லையா ?
01/02/2013 – விஸ்வரூபம் இந்தி மொழியில்
வட மாநிலங்களில் ரிலீஸ் ஆகிறது. அதையொட்டி,
அதற்கு முதல் நாள் இரவு அதாவது 31/01/2013
அன்றிரவு மும்பையில் பத்திரிகையாளர்களுக்கான
விசேஷ காட்சி (ப்ரிமியர் ஷோ )ஒன்றை கமல்ஹாசன்
ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ப்ரிமியர் ஷோவின் போது, மிகப்பெரிய
அதிர்வலைகளை உண்டாக்க வேண்டும் என்கிற
எண்ணமோ என்னவோ –
அதே நாள் மாலை மும்பையிலிருந்து வெளிவரும்
ஏடுகளில் தலைப்புச் செய்தியாக வர ஒரு அடித்தளமாக
அன்று காலை இந்தப் பேட்டி கொடுக்கக்ப்பட்டிருக்கிறது.
(முதலமைச்சரின் பேட்டிக்கு முன்னதாக ! )
துரதிருஷ்டவசமாக (?) அதே
31/01/2013 அன்று- முன்பகல் சென்னை கோட்டையில்
முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததும்
இஸ்லாமிய குழுக்களும், விஸ்வரூபம் தயாரிப்பாளர்களும்
ஒத்துப்போனால், திரைப்படம் வெளிவர தமிழக அரசு
அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியதும்
இந்தப் பேட்டியை முக்கியத்துவம் இல்லாமல் போகச்செய்து
விட்டது.
எல்லா தொலைக்காட்சிகளிலும், முதலமைச்சர் பேட்டியும்
செய்தியும் மதியமே வெளிவந்து விட்டதால், இரவு
ப்ரிமியர் ஷோ வின் போது நிலைமை முற்றிலும்
மாறி விட்டது. எனவே, கமல்ஹாசனின் இந்த பேட்டி
அநேகமாக எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை.
(வராமல் இருக்கவும் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் !)
இருந்தாலும் தமிழ் பத்திரிகைகளோ, வாசகர்களோ
அதிகம் பார்க்க வாய்ப்பில்லாத ஒரு ஆங்கிலத் தளத்தில்
மட்டும் இந்த பேட்டி அநாதையாகக் கிடக்கிறது.
நம் மக்கள் பார்க்க வேண்டுமே என்று முக்கியமான
பகுதிகளை மட்டும் இங்கு தந்திருக்கிறேன்.
முழு பேட்டியையும் படிக்க விரும்புபவர்கள்
இங்கு போய்ப் பார்க்கலாம் –
http://www.mid-
day.com/entertainment/2013/jan/310113-kamal-
haasan-vishwaroop-ban-tamil-nadu-
interview.htm
விஸ்வரூபம் படம் தெலுங்கில் வெளியாகி ஆந்திராவில்
200 செண்டர்களிலும், தமிழ்ப் பதிப்பு கேரளாவில்
80 செண்டர்களிலும், அமெரிக்காவிலும்,
வெளிநாடுகள் பலவற்றிலும்,
ஏற்கெனவே வசூலைக் குவித்து வரும் வேளையில் –
01/02/2013 அன்று 800 வட இந்திய
செண்டர்களில் வெளிவரும் இந்தி பதிப்பு
பரபரப்புடன் ஓடுவதற்காக மேற்கண்ட பேட்டி
கொடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால்,
தமிழ் நாட்டில் ஒன்றும் சொல்லாமல் மெனக்கெட்டு
ஒரு மும்பை இதழுக்கு இந்தி பதிப்பு வெளியாகும் நாளில்
இந்த பேட்டியை கொடுப்பானேன்.
ஏற்கெனவே ஏகப்பட்ட இடங்களில் எக்கச்சக்கமாக
பிரசவமாகி விட்ட இவரது குழந்தையை
யார், எங்கே, எப்படி அபார்ஷன் செய்ய முடியும் என்பதை
கமல்ஹாசன் தமிழ் பத்திரிகை/தொலைக்காட்சிகள்
எதன்மூலமாவது இங்குள்ள தமிழர்களுக்காக –
தமிழிலும் கொஞ்சம்
விளக்கினால் தேவலை !




Hi regualr blog readers, please watch Mr. P.J’s talk on vishwaroopam. There are 5 parts. Please watch all the 5 parts and then come to a conclusion.
முழு அளவிலான ஒரு பக்கா நாடகம் விளம்பரத்துக்காக அரங்கேற்ற ப்பட்டுள்ளதாகவே
தெரிகிறது.
100 கோடி ரூபாய் நஷ்டம் என்றெல்லாம் சொல்லி
தான் பழிவாங்கப்பட்டு விட்டதாக பரிதாபத் தோற்றம்
உருவாக்குகிறார். கேரளாவில் 60 பிரிண்ட், ஆந்திராவில் 200 பிரிண்ட், அமெரிக்காவில், மற்ற வெளிநாடுகளில், வட இந்தியாவில் 800 பிரிண்ட் – விஜய் டிவிக்கு டிவி ரைட்ஸ் 13 கோடி, பாடல்கள் ரைட்ஸ் -7 கோடி – இதை எல்லாம்
எந்த கணக்கில் சேர்ப்பது ?
தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும்போதும்
வேண்டுமென்ரே எதாவது ஸ்டண்ட் பண்ணுவது இவர் வேலை.
தன்னம்பிக்கை குறைவு என்றும் சொல்லலாம், அதிக வசூல் ஆசை என்றும் சொல்லலாம்.
தைரியமிருந்தால், இதே பேட்டியை தமிழ்நாட்டில், தமிழில்
கொடுத்திருக்க வேண்டும்.
நீங்கள் கூறும் 100 கோடியில் கமல் தனக்கான (நடிப்பு, கதை, இயக்கம் போன்றவைகளுக்கான) ஊதியமாக 45 கோடியை கணக்கிட்டுள்ளதாக முன்னைய தாயரிப்பாளுக்கு நெருக்கமானவர்கள் கிசுகிசுக்கிறார்கள். எனக்கு என்னவோ படம் தமிழகத்தில் திரையிட முன்னரே அவர் தனது பணத்தை மீட்டு விட்டார் என்றே தோன்றுகிறது.