கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !!
ஒரு காலத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த
திரைப்படம் என்று விளம்பரங்கள் வருவதுண்டு.
இது ஒரு வித்தியாசமான படம் –
இதுவும் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது தான் –
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் – இந்த திடுக்கிடும்
திருப்பங்கள் திரைப்படத்தில் அல்ல – அதற்கு வெளியே –
அதைச்சுற்றிலும் !
முதலில் சில காட்சிகள் –
அனைத்தும் இன்றைய செய்திகளிலிருந்து
திரட்டியவை தான் –
———————-
ஷாக்-1
கமல் பேட்டி – எனக்கு பெரிய சொத்துக்கள் கிடையாது
என்பது ஊர் அறிந்த விஷயம். ஆனால் சென்னையில்
எனக்கு இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இந்தப்
படத்திற்காக எழுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரிலீஸ் தேதி தள்ளிப்
போக போக எனக்கு பணம்
கொடுத்தவர் இதை எழுதி அவர் பெயருக்கு
மாற்றிக்கொண்டுவிட்டார்.
(திரைப்படங்கள் தொடர்பாக செய்தி வெளியிடும்
இதழ் ஒன்றில் வந்திருக்கும் தகவல் –
இந்தப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை முதலில்
PVR நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
படத்தயாரிப்பு செலவு, முதலில் பட்ஜெட்டில் கமல்
சொல்லியிருந்த 50 கோடி ரூபாயைத் தாண்டி விடவே
அந்த நிறுவனம் தயாரிப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டு,
மேற்கொண்டு கமலே படத்தை தொடர்வது என்றும்,
திரைப்படம் ரிலீஸ் ஆகும்போது, கமல் பணத்தை
திரும்பக் கொடுக்கலாம்
என்று ஒப்புக்கொண்டு விட்டது என்றும்,
அதன் பின்னர் 10 கோடி செலவில் படம் முடிந்து
விட்டது என்றும்,
கமலின் சம்பளம் 25 கோடியும்
சேர்த்து மொத்தம் சுமார் 85 கோடி செலவில் –
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்
படம் தயார் ஆனது என்றும் கூறி இருக்கிறது )
ஷாக்-2
கமல் பேட்டி – ஒரு வேளை இன்றைய தீர்ப்பு
எனக்கு சாதமாக வரவில்லை என்றால், இனிமேல் பிரஸ் மீட்
இங்க நடத்த முடியுமா என்று தெரியவில்லை. அதனால்
சந்தோஷமாக ஒரு பிரஸ் மீட் நடத்திவிடலாம் என்று உங்களை
அனைவரையும்
அழைத்தேன்.
ஷாக் -3
கமல் பேட்டி -எனக்கு இந்த நாட்டின் ஒற்றுமைதான்
முக்கியம். நான் சொத்தை இழக்க தயார். மாண்புமிகு
நீதிதேவன் அவர்களுக்கு சொல்ல விரும்புவது இதுதான்.
அவர் விருப்பப்பட்டதுபோல் நாடு ஒற்றுமையாக இருக்கட்டும்.
அதற்காக நான் விழுந்தாலும் பரவாயில்லை.
(ஒற்றுமை தான் முக்கியம் என்றால் – துவக்கத்தில்
இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடனேயே –
சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி இருக்கலாமே !
இத்தனை அவதிகளும் தவிர்க்கப்பட்டிருக்குமே !)
ஷாக் – 4
எனக்கு “மதம்” கிடையாது. “மனிதம்” தான் என்பது உங்களில்
பலருக்கு தெரியும்.
(இவருக்கு மதம் இல்லை -சரி.
ஆனால் நம்புகிறவர்களை அவமதிக்க இவருக்கு
எங்கிருந்து வந்தது உரிமை ?
“மனிதம்”பற்றி இப்போது பேசுபவர்
3 லட்சம் ஈழத்தமிழர் வதைபட்டபோது,
80,000 தமிழ்ப்பெண்கள் விதவைகளானபோது,
3 நாட்களில் 40,000 தமிழ் சகோதரர்கள்
கொல்லப்பட்டபோது – ஏன் பேசவில்லை ?)
ஷாக் -5
எனக்கு மதசார்ப்பற்ற ஒரு இடம் வேண்டும்.
அது தமிழகமாக இல்லாமல் போய்விட்டால்,
மதசார்ப்பற்ற மாநிலம் இந்தியாவில் உள்ளதா என்று தேடி
குடியமர்வேன்.
ஷாக்-6
எனக்கு இடம் கிடைக்கவில்லை என்றால்,
மதசார்ப்பற்ற ஒரு நாடு தேடி போவேன்.
(தாய் நாட்டின் மீது அவ்வளவு பற்றுதல் !)
ஆனால், யாருக்கும் கடன் வைக்க மாட்டேன்.
என் பழக்கம் அதுவல்ல. (படத்தை பாதியில்
கை விட்டோ, இழுத்தடித்தோ தான் பழக்கம் !)
ஷாக்-7
கமல் பேட்டி –நீதி தர மறுப்பதும், தாமதிப்பதும் ஒன்றுதான்
என்கிறது ஒரு ஆங்கில பழமொழி.
எனக்கு கிடைக்க வேண்டிய நீதி தாமதப்பட்டுவிட்டதாக
நான் நினைக்கிறேன்.
(தனக்கு 4 நாட்கள் வழக்கு நடந்தாலே நீதி தாமதப்பட்டு
விட்டது என்கிறாரே –
தமிழ் நாட்டு சிறைகளிலேயே, தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு கருணை மனு
அனுப்பி விட்டு,
முடிவு தெரியாமல் –
18 வருடங்களாக தினந்தோறும் செத்துப் பிழைத்து
வருகிறார்களே – சில தமிழர்கள் – அவர்களுக்கு
நீதி தாமதிப்பது இவர் பார்வைக்கு வரவே இல்லையா ?
அதைப்பற்றி என்றாவது பேசி இருக்கிறாரா ?)
கமல் கொடுத்த அதிர்ச்சிகள் பற்றாது என்று
கலைஞர் கருணாநிதி வேறு கொடுக்கும்
ஷாக் திருப்பங்கள் –
ஷாக்-1 –
அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு
தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு
விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் திரைப்படத்தை
100 கோடிக்கு மேல் செலவு
செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த
விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு
வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான்
காரணம் என்றும் கூறூகிறார்கள்.
(இதில் என்ன கூறுகிறார்கள் வேண்டிக் கிடக்கிறது ?
முதலில் 12 கோடிக்கு விற்றபோது, DTH விவரம்
சொல்லாமல் மறைக்கப்பட்டு விட்டதால், விவரம்
தெரிய வந்ததும், அந்த டீல் ரத்து செய்யப்பட்டு,
அதன் பின்னர் விஜய் க்கு கொடுக்கப்பட்டுவிட்டது
என்று தான் செய்தியே வெளிவந்து விட்டதே !)
ஷாக்-2
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில்
கமல் பேசும்போது,வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக
வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும்
கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு
உண்மை என்பது தெரியவில்லை !!!
(உண்மையான காரணம் கலைஞருக்கு தெரியாதா ?)
கடைசியாக கொடுத்த மிக பயங்கர ஷாக் -3 –
முதலமைச்சருக்கு ஏற்கெனவே கமல்ஹாசனை பிடிக்காது.
கமல் “விக்ரம்” படத்தை தயாரிக்கும்போதே
(25 ஆண்டுகளுக்கு முன்னர் !) எம்ஜிஆர் அதன் துவக்க
விழாவில் கலந்துகொண்டதற்கு கூட அவரை கோபித்துக்
கொண்டு கடிதம் (?) எழுதினார்.
யாரும் எதிர்பார்க்காத ஷாக் !!!
சம்மன் இல்லாமலே ஆஜர் –
வழக்கு பாதி நடந்துகொண்டிருக்கும் போது சம்மன்
இல்லாமலே திடீரென்று ஆஜரான
மத்திய அரசு வழக்கறிஞர் – பல புள்ளி விவரங்களை
ரெடியாக அள்ளி வீசுகிறார். இந்தப்படம்
அக்டோபர் 4 2012 அன்று தணிக்கைக்கு
விண்ணப்பிக்கப்பட்டு, அக்டோபர் 8ந்தேதி
“முறைப்படி”யே படம் பார்க்கப்பட்டு –
சென்சார் செய்யப்பட்டு –
ஒரு நிமிடம் எட்டு செகண்டு
அளவிற்கு “கட்” செய்யப்பட்டு அக்டோபர் 10ந்தேதி
UA சர்டிபிகேட்கொடுக்கப்பட்டது என்று
புள்ளி விவரங்களோடு பேசுகிறார்.
கோர்ட்டில் இப்படி ஒரு கேள்வி வரும் என்றும்
அவரிடம் இத்தனை புள்ளி விவரங்கள்
பாக்கெட்டிலேயே தயாராக இருக்கும் என்பதும்
உண்மையிலேயே யாரும் எதிர்பார்க்க முடியாத ஷாக் தான்!
(அவர் சொல்ல மறந்த அல்லது
வேண்டுமென்றே சொல்லாமல் விட்ட ஒருஉண்மை –
அந்த சென்சார் கமிட்டியில் இருந்த ஒரே ஒரு
முஸ்லிம் உறுப்பினர் – கடந்த தேர்தலில்
ஆயிரம் விளக்கு தொகுதியில்
(ஸ்டாலின் வில்லிவாக்கம் போய்விட்டதால்)
போட்டியிட்டு தோற்ற திமுக வேட்பாளர்
ஜின்னா மட்டுமே என்பதை )
இந்த படத்தில் இது தான் இறுதியான க்ளைமாக்ஸ்
என்று சொல்ல முடியாதபடி பல க்ளைமாக்ஸ் சீன்கள்
தயாராகி விட்டன .
எது தான் இறுதியான க்ளைமாக்ஸ்… ?
1) உயர்நீதிமன்ற தீர்ப்பு திருப்தியாக இல்லாததால்,
உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது.(முதலில்
வந்த செய்தி)
2) வேட்டி கட்டியதால் பிரதமர் ஆகவிருக்கும் மத்திய
அமைச்சர் தன் பிரதிநிதியாக தமிழக காங்கிரஸ்
எம்.பி.யை அனுப்பி முயற்சி எடுத்ததன் பேரில்,
அவருக்கு நெருக்கமான ஒரு பிரிவினருடன்
ஏற்பட்டுள்ள சமரச காட்சிகள்.
3) படத்தில் ஆட்சேபணைக்கு முக்கிய காரணமாக
இருந்த குரான் சம்மந்தப்பட்ட காட்சிகளை
நீக்கிவிட்டு ரிலீஸ் செய்வது.
4) மக்களுக்கு எச்சரிக்கை விடுவது!
இனி முஸ்லிம் சகோதரர்களுக்கும், விஸ்வரூபம் படத்திற்கும்
எந்த பிரச்னையும் வராது.
“அதாவது என் இஸ்லாமிய சகோதரர்களுக்கும்
எனக்கும் இடையே இனி எந்த வித பிரச்சினையும் இல்லை.
அதேசமயம் வேறு விதமான பிரச்னைகள் வந்து கொண்டு
இருக்கிறது. இது எனக்கும், நாட்டுக்கும் பதற்றம் தரக்கூடியாக
செய்தியாக இருக்கிறது”.
பின்குறிப்பு – இன்று தமிழில் பேட்டி கொடுத்ததுபோலவே
வட இந்திய ஊடகங்களுக்கு தனியே ஆங்கிலத்தில்
பேட்டி கொடுத்து,(இந்தி படத்திற்கும் விளம்பரம்
வேண்டுமே !) இன்று அனைத்து வட இந்திய
தொலைக்காட்சிகளிலும் தலைப்புக் காட்சியாக இடம்
பெற்றாகி விட்டது.
பிற்போக்கு தீவிரவாத முஸ்லிம்களை ஆதரித்து
தன்னை தொல்லைப் படுத்தும் ஒரு கொடுங்கோல்
அரசின் பிடியில் சிக்கித் தவிப்பதாக ஒரு இமேஜை
உண்டு பண்ணிக் கொண்டு விட்டார்.
நாளை மறுநாள் -பிப்ரவரி 1, வட மாநிலங்களில்
இந்தி மொழியில் விஸ்வரூபம் வெளியாகிறது.
வட மாநில பாஜக தொண்டர்கள் படத்தைப் பார்க்கத்
துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.எனவே தமிழில் விட்ட
100 கோடியை அங்கே சுலபமாகப் பிடித்து விடலாம் !
சும்மா சொல்லக்கூடாது –
வியாபாரம் என்றால் எவ்வளவு தொழில் நுணுக்கங்கள்
தெரிந்து வைத்திருக்க வேண்டி இருக்கிறது !!
(“அம்பு” என்று முதலில் நினைத்தேன் -அதெல்லாம்
இல்லை “அன்பு” என்று இப்போது புரிந்து விட்டது !)




great article sir. deivam nindru kollum. we cannot play smart with GOD. let us wait and watch. one more article related to this which read from non-random thoughts.
http://jayasreesaranathan.blogspot.com/2013/01/kamal-hassans-vishwaroopam-as-bhasmasura.html
Dear Friend Srini,
Thank you very much for introducing a very good blog
at appropriate time.
It defenitely deserves wider reading.
With all best wishes,
Kavirimainthan
காவிரிமைந்தன்,
அத்தனை டிவிக்களும்
பத்திரிகைகளும் தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஆதரவாக
வெறியுடன் குரல் கொடுத்து வரும்வேளையில் நீங்கள்
அவரது போலி வேடங்களை கலைத்து வருகிறீர்கள்.
கமள்ஹாசன் ஒரு போலி வேடதாரி. பெண்களை
போகத்துக்காக மட்டும் பயன்படுத்த விரும்புபவர். பணம் இருப்பதால் இஷ்டம் போல் வாழலாம் என்று நினைத்து
அப்படியே வாழ்பவர்.
இவர் தமிழ் நாட்டுக்கே ஒரு கேடு.
சமூகத்தைக் கெடுக்கும் கொடரி.
தமிழ்நாடு என்ன இந்தியாவை விட்டே தொலைந்து
போகட்டும். சொன்னதை செய்து காட்டினால் நல்லது.
இந்த ஆள் கொடுத்த இன்டர்வியூ ஒன்று வலையில்
வந்திருக்கிறது பார்த்தேன். இவனெல்லாம் ஒரு மனிதனா ?
http://www.inneram.com/news/cinema-news/i-ve-never-believed-in-marriage-kamal-hassan-7503.html
தான் திருமணமே செய்திருந்திருக்கக் கூடாது என்று இரண்டு முறை திருமணம் புரிந்து மணமுறிவும் கண்ட நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபல ஊடகமொன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் “திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை;
நான் திருமணமே செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னோடு வாழ்ந்த வாணி, சரிகா ஆகியோரின் வசதிக்காக திருமணம் செய்யவேண்டிவந்தது” என்று கூறியுள்ளார். “சேர்ந்துவாழ்தல் (லிவிங் டுகெதர்) முறைக்கு வாணி ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்; அச்சமயம் அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் நிலையிலும் நான் ஆயத்தமாக இல்லை” என்றும் கமல் கூறியுள்ளார்.
மேலும் “சரிகாவுடனான வாழ்க்கை 17 ஆண்டுகள் நீடித்தது ஆச்சரியம் தான். 12 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்று கருதியிருந்தேன். பிள்ளைகள் பெரிதாகும் வரை, அவர்களை எங்கள் முடிவு பாதிக்கக்கூடாது என்பதால் பிரிவைத் தள்ளிப் போட்டோம்” என்றும் கூறியிருக்கிறார்.
கவுதமி பற்றி கூறும்போது “கவுதமி தான் மிகவும் வித்தியாசமானவர். தன்னை மணந்து கொள்ளும்படி ஒருநாளும் அவர் கோரியதில்லை” என்று தெரிவித்துள்ளார் கமல்.
நீங்கள் தொடர்ந்து இந்த தலைப்பில் இன்னும்
வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றியுடன்,
ரேவதி ரகுநாதன்
நன்றி சகோதரி ரேவதி.
நம் உணர்வுக்கு – இந்த ஆள் வேடம் போடுகிறார்
என்பது தெரிகிறபோது சும்மா இருக்க முடிவதில்லை.
இவர்களைப் போன்றவர்களை –
சமூகம் நாசமாய்ப்
போனாலும் கவலை இல்லை –
என் சுகம், என் வருமானம் தான் எனக்கு முக்கியம்
என்று நினைக்கும் சுயநலவாதிகளின் வேடத்தை –
நமது சமூகம் அடையாளம்
கண்டு கொள்ளாமல் ஏமாந்து விடுகிறதே என்பது தான்
என் ஆதங்கம்.
நீங்கள் நினைப்பது போல் எல்லாம் இவர்
எங்கும் போய் விட மாட்டார். இதெல்லாம் — சும்மா.
கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள
இவர் தமிழ் நாட்டிற்கு இது வரை என்ன பண்ணி இருக்கிறார் ?
4 பள்ளிக்கூடங்கள் ?
இரண்டு ஆஸ்பத்திரிகள் ?
10-20 ஏழைகளுக்கு படிக்க உதவி ?
ஊஹூம். அஞ்சு காசுக்கு பிரயோஜனமில்லை.
சமுதாயத்திற்கு பயன் இல்லாமல் வாழும்
“பிரபலங்களை” – எனக்கு மதிக்கத் தோன்றுவதில்லை.
உங்கள் மடலுக்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
An atheist can not be a good human being
Venkatasubramanian,
Are you very sure of this?
certainly YES-YES
U r absolutely correct
ஐயா, அமெரிக்காவுக்கு சொம்பு தூக்கி படம் எடுத்தால்…
– ‘மத சார்பற்ற’ நாடான அமெரிக்காவில் குடி ஏறலாம்.
– ‘ஹசன்’ என்று பேர் வைத்தாலும் அமெரிக்க விமான நிலையங்களில் சிறப்பு சோதனையின்றி வெளியேறலாம்.
– கலாசார தூதுவராகலாம்
– ஹலிவூடில் படம் எடுக்கலாம் ஏன் ஆஸ்கர் கூட கிடைக்கலாம்
– மன்மோகன் சிங், சிதம்பரம், கபில் சிபல் முதலாய வரிசையில் அமெரிக்காவுக்கு மிக வேண்டப்பட்டவர் ஆகலாம்.
ஆனால் ஒன்று முக்கியம், அமெரிக்கா எதிரி என்று கைகாட்டியத்தை கடைசிவரை எதிரியாக தான் காட்ட வேண்டும். மறந்தும் அவர்கள் வரலாறு என்ன! அவர்களை உருவாகியது யார்!! வளர்த்து விட்டது யார்!! என்பதை காட்ட கூடாது. (நமக்கு வியாபாரம் ‘மட்டும்’ தான் முக்கியம் என்று நீங்கள் கருத கூடாது)
சபாஷ் எழில்.
அமெரிக்காவுக்கு அடிவருடிகளாக இருந்த சதம் ஹுசைன், உசாமா பின்லாதின் போன்றவர்களின் இறுதிநிலை என்ன என்று இந்த உலகத்துக்கே தெரியும்.
அமெரிகவுக்காக நம் இந்திய நாட்டை அடகு வைக்கும் குறிப்பிட்ட அரசியல் வாந்திகளும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்க ‘விஸ்வரூபம்’ எடுத்த கம ஹாசன் போன்றவர்களின் நயவஞ்சக தனத்தை என்றுதான் நம் இந்திய மக்கள் உணர்வார்களோ?
This is your Blog, you can write anything. Thanks.
excellent article. keep it up. u have stripped out
🙂
திருமதி ரேவதி ரகுநாதன் சரியாக கூறியுள்ளார் . அவருடைய கருத்து வரவேற்க தக்கது .
சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளில் 90 சதவீதம் பேர்களின் குடும்ப வாழ்கை நாறி போனதாகும் .தங்களது தனிப்பட்ட வாழ்கையை விமர்சிக்க கூடாது என கூறுவதை ஏற்க இயலாது. எப்போது நீ சினிமாவுக்கு வந்து விட்டாயோ படம் பார்ப்பவர்களுக்கு பதில்
சொல்லியே ஆகவேண்டும். குடும்ப வாழ்கையில் யோக்கியனாக இருந்தால் உன்னை நாடு மதிக்கும். இல்லையேல் தூக்கி எறிந்து விடுவார்கள் . விஸ்வரூபம் தற்போது
அஸ்வ ரூபம் ஆகிவிட்டது. இதை ஒருவர் பேசியே அரசியலாக்கி விட்டார் ஒருவர்
பேசாமலேயே அரசியலாக்கி விட்டார் யாரானாலும் சரி. தனது மனசாட்சிக்கு
பதில் சொல்லியே ஆகவேண்டும். .
படத்தை பொறுத்தமட்டில் கேரளா . ஆந்திரா .மற்றும் இந்தி பேசும் வடநாட்டிலும்
எதிர்ப்பு ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ளது என செய்திகள் கூறுகின்றது . ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
ஆச்சரியமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கும் சமுதாய மக்கள்
இல்லையோ ?
Hindus r silent for the title VISWAROOPAM.Many hindus,youngsters r not knowing the content of
viswaroopm.
//certainly YES-YES//
Then, you are certainly sure that theists are very good human beings.. right?
Pulli vivara puli ivaru…stop the non sennse if u do not know anything….