ஆதர்ஷ், காமன்வெல்த் கேம்ஸ், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று
கடந்த 2 வருடங்களாக வரிசையாக வெளிவந்த
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல் பூதங்கள்
மக்களை மிரள வைத்தன.
அண்மையில் வெடித்த ராபர்ட் வாத்ரா, சல்மான் குர்ஷித்
விவகாரங்கள் மேலும் மேலும் எரிச்சலைக் கிளப்பின.
ஜனநாயகத்தில் – மக்கள் தாம் விரும்பும் ஒரு ஆட்சியை,
தாம் விரும்பும் தலைவர்களை –
தேர்ந்தெடுத்து அதிகாரத்தை கொடுக்க வழி இல்லை.
எனவே, இருப்பதற்குள் எது தேவலை,
எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி தேவலை
என்கிற ரீதியில் தான்
ஒரு ஆட்சிக்கு மாற்றாக அடுத்த ஆட்சியைத் தேர்ந்தெடுக்க
வேண்டி இருக்கிறது.
இந்த அடிப்படையில், காங்கிரஸ் ஆட்சி சகிக்க முடியாத
உச்சத்திற்கு போனதால் – அடுத்து இருக்கும் கட்சிகளில்,
எது தேவலையோ, எதற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு
இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுப்பதை தவிர வேறு
வழி இல்லை. இந்த அடிப்படையில், மனதளவில்
மக்கள் அடுத்து பாஜக தலைமையிலான ஒரு கூட்டணி
ஆட்சிக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு -ஊழலைப் பொறுத்த வரையில் –
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக்
காட்டாமல் பாஜக தலைமை விடாது போலிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கர்னாடகாவில் எடியூரப்பா
போட்ட ஆட்டங்களை எல்லாம் சகித்துக் கொண்டு
அவர் தாடையைப் பிடித்து கொஞ்சிக்கொண்டிருந்தது
பாஜக தலைமை. வந்தது வரட்டும் என்று அப்போதே
அவரைத் தூக்கி எறிந்திருந்தால் பாஜகவுக்கு கர்னாடகாவில்
லிங்காயத்து ஓட்டுக்கள் போனாலும், மரியாதையாவது
மிஞ்சி இருக்கும். அவர் சொன்னதற்கெல்லாம் ஆட்டம்
போட்டது போக இப்போது அவர் தனிக்கட்சி துவங்குவதாக
வேறு அறிவித்து விட்டார்.
இப்போது லிங்காயத்து ஓட்டும் போச்சு –
மக்களிடையே மரியாதையும் போயிற்று !
அடுத்து -இப்போது நிதின் கட்காரி. பாஜக கட்சியின்
தேசியத் தலைவர் மீதே அடுக்கடுக்கான புகார்கள்.
அவரது டிரைவரும், அக்கவுண்டண்டும்
ஆளுக்கு 6 கம்பெனிகளில் டைரெக்டர்கள்
ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறபோது,
கொடுத்திருக்கிற அட்ரஸ் எல்லாம் போலி என்கிறபோது,
அரசாங்க காண்டிராக்டர்கள் மறைமுகமாக
அவர் நிறுவனத்தில் முதல் போட்டிருக்கிறார்கள்
என்கிறபோது –
முதல் நிலையில் – prima facie –
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் ?
ஒன்று புகார்கள் வெளிவந்தவுடனேயே நிதின் கட்காரி
தானாகவே தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி இருக்க
வேண்டும்.
அல்லது பாஜக வின் உயர் மட்டத் தலைமையாவது
அவரை ராஜினாமா செய்யச் சொல்லி இருக்க வேண்டும்.
இரண்டையும் செய்யாமல், கட்காரி தான் விசாரணைக்கு
ஒத்துக் கொண்டிருக்கிறாரே – விசாரண நடந்து முடிவுகள்
வெளிவரும் வரை அவரை குற்றவாளி என்று சொல்ல
முடியாது என்று சப்பைக்கட்டு சொல்லிக் கொண்டிருப்பதை
விட கேவலமான நிலை எதுவும் இல்லை.
கட்காரி என்ன ஒத்துக் கொள்வது ?
– மத்திய காங்கிரஸ் அரசு
தான் துடித்துக் கொண்டிருக்கிறதே –
கட்காரி கேட்டாலும், கேட்காவிட்டாலும்
விசாரணை நடக்கப் போவது உறுதி.
பாஜக மவுனம் சாதிப்பதற்கு ஆர் எஸ் எஸ் தலைமையை
காரணம் காட்டுகிறார்கள். காலத்திற்கு ஒவ்வாத பல
கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், பொதுவாக
ஆர் எஸ் எஸ் நிறுவனம் அடிப்படையில் ஒழுக்கத்தையும்,
நேர்மையையும்,கட்டுப்பாட்டையும் வலியுறுத்தும்
ஒரு ஸ்தாபனம். கட்காரியின் ஊழல் சரித்திரத்தின்
காரணமாக பாஜக வுக்கு ஏற்பட்டுள்ள அவமானகரமான
நிலைக்கு ஆர் எஸ் எஸ் தலைமை காரணமாக
இருக்கக் கூடாது. ஆர் எஸ் எஸ் தலைமையை எதிர்பார்த்து
பாஜக இந்த விஷயத்தில் மவுனமாக இருக்கவும் கூடாது.
இதே நிதின் கட்காரியை தலைவராக வைத்துக் கொண்டு,
பாஜக வினர் எந்த முகத்தோடு மக்களை சந்திக்க முடியும் ?
எப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, மக்களிடம்
ஓட்டுக் கேட்க முடியும் ?
காங்கிரஸை விட தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை
பாஜக எப்படி நிரூபிக்கப் போகிறது ?
காலம் தாழ்த்தாமல், எந்தவித சாக்கு போக்கும்
சொல்லாமல் – பாஜக உடனடியாக கட்காரியை
தலைமைப் பதவியில் இருந்து விலக்க வேண்டும்.
இல்லையேல் மக்களிடம் ஓட்டுக்கேட்க பாஜகவுக்கு
எந்த அருகதையும் இல்லை.



அன்புள்ள கா.மை,
எதையும் கூர்ந்து நோக்கி விவரங்களை விளக்கித் தருகிறீர்கள். நன்றாக இருக்கிறது. ஆனால் தங்களுக்க்கு அடிப்படையில் சரியான பொருளாதார புரிதல் இல்லையோ என்கிற எண்ணத்தை தங்கள் பதிவு தோற்றுவிக்கிறது.
கட்கரி விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். தேசிய தலைவராக ஒருவர் முன்னேறி வரவேண்டுமானால் பணி யுசெய்தால் மட்டும் பத்தாது.. பணமும் செய்து தர வேண்டும். இது தங்களுக்குத் தெரியாததல்ல. பல்வேறு தரப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள் மூலமாய் கட்சிக்கு பொருள் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கட்சித்தலைவருக்கு இதைவிட மக்கள் பணியே முதன்மையானது என்று நீங்கள் நினைத்தால் அதைவிட நகைப்புக்குரியது வேறு அல்ல. கட்சி அமைப்பு என்ற முறை பாஜக காங்கிரஸ் என்றல்ல.. எல்லாக் கட்சியுமே அப்படித்தான். ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸுக்கு 2000 கோடி நன்கொடை வருகிறதென்றால், ஆட்சியில் இல்லாத பாஜகவிற்கு ஏன் 900 கோடி நன்கொடை வருகிறது? ஆச்சரியமாக இல்லையா? எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான். இப்போதுதான் கொடுத்துவைத்துவிட்டு பின்னால் வேறு வகைகளில் எடுத்து கொள்வது.
அப்படி கிடைக்கின்ற பணக்குவியலில் கட்கரி தனக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கிக்கொண்டு கம்பெனி நடத்தி டிரைவரையும் கணக்காளரையும் பெயருக்கு டைரக்டராகப் போட்டுக்கொண்டு வியாபாரம் செய்கிறார். இவரது வியாபாரம் மூலமாயும் பாஜகவுக்கு மாமூல் செல்லும். பின் எந்த வகையில் பாஜக இவரை டிஸ்மிஸ் செய்யும் என்று எதிர்பார்க்க முடியும்?
இன்றைய நிலையில் மக்கள் யாரையும் நம்பி இருக்க்கவில்லை. தங்களை தாங்களே காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு என்ற முடிவுக்கு அவர்கள் வந்து எவ்வளவோ வருடங்களாயிற்று. இல்லையேல் இப்பேர்ப்பட்ட கொள்ளைகளுக்கு என்றைக்கோ புரட்சி வந்திருக்கும். தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கு கூட வழியின்றி மக்கள் என்றைக்கு கூட்டங்கூட்டமாய் பிதுங்குகிறார்களோ அன்றுதான் புரட்சி வெடித்து எல்லாமே துண்டாடப்படும். அப்போதுதான் சிறந்த கொள்கைகளுடன் கூடிய மக்கள் தலைமை தேவைப்படும். கண்ணுக்கெட்டிய வகையில் அப்படி யாரும் உருவாவதற்கான அறிகுறி தெரியவில்லை. நீங்களுடன் நானும் வேண்டுமானால் முயற்சி எடுக்கலாம்!!!
ஆனால் அதற்குள் சில சீர்திருத்தவாதிகள் புகுந்து நிகழ்வுகளை ஏதோ ஒருவகையில் சரிசெய்து முட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பதால் இதுபோன்றவற்றை இன்னும் 30 வருடங்கழித்துக்கூட நாம் பேப்பரில் படித்துக்கொண்டே இருக்கலாம்.
அன்புள்ள ரிஷி,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நீங்கள் சொல்வது சரி –
எனக்கும் புரியாமல் இல்லை.
ஆனால் இப்போதைய சங்கடங்களுக்கு
இரண்டு வகைத் தீர்வுகள் தேவைப்படுகின்றன.
ஒன்று -உடனடித் தீர்வு
மற்றொன்று -நீண்ட காலத் தீர்வு.
நான் கட்காரியையும், எடியூரப்பாவையும் பாஜக
தூக்கியெறிந்திருக்க வேண்டும் என்று சொல்வது
தற்காலிக, உடனடித் தீர்வு.
எக்காரணத்தை முன்னிட்டும்,
அடுத்த தேர்தலில் நாம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர
இடம் கொடுக்க முடியாதே ! எனவே அடுத்த வாய்ப்பில்
இருப்பவர்களை உங்கள் இடத்தை சுத்தம் செய்யுங்கள் என்கிறேன்.
நீண்ட காலத் தீர்வு – மக்கள் அதற்குத் தயாராக வேண்டும்.
அது இப்போதைக்கு நடப்பதாகத் தெரியவில்லை.
முடிந்தவரை இதில் ஆர்வம் உள்ளவர்கள் அதற்கான
முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்க
வேண்டும். வேறு வழி இல்லை !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஐயா,
தங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். உண்மைதான்.
Functional behaviour of politics and corporates பற்றி புரிந்து விட்டபடியால் இனி உலகத்தில் Corporate ஆட்சிதான் என்பதும் ஐயம் திரிபற உணர்ந்து விட்டபடியால் இதுபோன்ற உடனடி தீர்வு எனும் சிந்தனையை எல்லாம் மனம் ஒதுக்கி வைத்துவிட்டது. ஒட்டுமொத்த பாரிய மாற்றம் நிகழும் கணத்தினை நோக்கிக் காத்திருக்கிறேன்.
Time and again i recall the famous saying “Politics is the last r esort of a scoundral”.
பீ.ஜே.பி தலைவர் கட்காரி இரண்டாவது முறையாக தலைவராக வந்திருக்கக் கூடாது. ஊழல் புகார் வந்த நிலையில்
அவர் நீக்கப்பட வேண்டும். அல்லது எமர்ஜென்சி காலத்தில் இன்ற காந்தியை ஆட்சியிலிருந்து நீக்கியது போல்
இரண்டு கட்சியையும் மூன்றாவது அணி உருவாகி தூக்கி எறிந்து விடும்.
காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு
எடியூரப்பா புதிய கட்சி துவங்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்துவிட்டார். ஆனால் தன்னுடைய “எம் எல் ஏ” பதவியை டிசம்பர் 10ஆம் தேதி வரை ராஜினாமா செய்யமாட்டார் என்றும் உறுதியாக கூறிவிட்டார். ஆனாலும் பாஜாக தலைமையால் ஒன்றும் செய்துவிடமுடியவில்லை அவரை. இப்படி நான் உன் கட்சியில் இல்லை வேறு கட்சி தொடங்கிவிட்டேன் என்றவர் மீதே நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு நிலையில் அகில இந்திய பாஜக இருக்கிறது.
அண்ணா கூறியது போல “எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”.
Kuttaiyil ooriya mattaigal said by KAMARAJ not by ANNADURAI
விவாதங்கள் மிக சுவையாக உள்ளன.அனைத்து நபர்களுக்கும் நன்றி.
ஒரு வலைதளத்தில் படித்தேன்.”கேஜ்ரிவால் செய்தது ஒரு சிறுவன் ஆர்வ மிகுதியால் தொடர்ந்து வெடிகளை கொளுத்தி போடுவதைப்போல உள்ளது” என்று!
இதைவிட சிறப்பாக இதை விவரிக்க முடியாது.
நாட்டின் முதல் எதிரி சோனியா காங்.மற்றும் அதன் கொள்ளைக்கூட்டம்.
அன்று ஒரிஜினல் காந்தி ஒருவரிடம் மூன்று குரங்கு பொம்மைகள் இருந்தன “தீயதை பார்க்காதே,பேசாதே,கேட்காதே” என போதித்துக்கொண்டு..
இன்றோ duplicate காந்தி மூவரிடம் (சோனியா,ராகுல்,பிரியங்கா)ஒரு மனித பொம்மை உள்ளது(மன்மோகன்).”உன்னை சுற்றி என்ன தீமை நடப்பினும் கண்டுகொள்ளாதே” என சொல்லிக்கொண்டு.
நல்ல மனிதர்களுக்காக நேர்மையான மனிதர்களால் எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்டம்,குற்றவியல் சட்டம் இன்று உளுத்துப்போய் விட்டன இதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியாது.
என்று சோனியா காந்திக்கும் மகாத்மா காந்திக்கும் உள்ள ஒற்றுமை,
கரண்டிக்கும் பாதாள கரண்டிக்கும் உள்ள ஒற்றுமையை விட குறைவு என கடைசி இந்தியனுக்குப்புரிகிறதோ அன்றுதான் நமக்கு விடிமோட்சம்.
அதற்கு இன்னும் ஆண்டுகள் பல ஆகும்.அதுவரை நாம் கும்மி அடித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
பி.கு: 2014 தேர்தலில் என் ஒட்டு நிச்சயமாக BJP க்குத்தான்.அது எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ “distribution of wealth” க்காவது உதவும்.குடிமக்களை
பணக்காரர்கள் ஆக்கத்தான் அரசியல் கட்சிகளால் முடியவில்லை.நாமாவது ஒவ்வொரு அரசியல் கட்சியையும் பணக்காரர்கள் ஆக்கி மகிழ்வோமே!
“கழுதைக்குப்போட்டாலும் காங்கிரசிற்கு போடாதீர்கள்!”
மன்னிக்கவும்.முதல் வரி ..அனைத்து நண்பர்களுக்கும் நன்றி என இருக்கவேண்டும்.
Khur-shit ,மக்கள் பணத்தை கையாண்டார் எனும் குற்றசாட்டிற்கு தண்டனையாக அவருக்குப்பதவி உயர்வு..
ஜெயபால் ரெட்டி, முகேஷ் அம்பானிக்கு எதிராக நடந்து தன் கடமையை செய்ததற்கு, அவருக்குப்பதவி இறக்கம்…
ராகுல் திறமை மேல் உள்ள “நம்பிக்கை” மாறவில்லை..அவருக்கு பதவி எதுவும் கிடையாது.
புதிய மந்தி சபை முழுக்க கிழம் கட்டைகள்.பெருச்சாளிகள்
வாழ்க ஜனநாயகம்.
எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்