குற்றத்திற்கு துணை போனவர்கள் –
தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?
ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் –
இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம்
ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த்
ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா
இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு தண்டனைவழங்கிடுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ராஜபக்சேவை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றக்கோரி கி.வீரமணிஆர்ப்பாட்டம்
இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்கநாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும்: திருமா
ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த காங்கிரஸ் துணைபுரியவேண்டும்: கிருஷ்ணசாமி
————————————————–
– இலங்கையில் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு
எதிராக நிகழ்த்திய ராட்சச வெறியாட்டங்கள் இப்போது தான்
அங்கீகாரம் பெற்ற நிலையில் வெளிவருகின்றன. ஐக்கிய
நாடுகள் சபை நியமித்த குழு கொடுத்த அறிக்கை
அதிகாரபூர்வமாக வெளியான பிறகு உலகம் இப்போது தான்
மிகவும் தாமதமாக இந்தக் கொடுமையின்
ஆழத்தை, தீவிரத்தை உணர ஆரம்பிக்கிறது.
இதில் முதல் குற்றவாளி ராஜபக்சேயின் ராட்சச இலங்கை
அரசு என்றால், அதற்கு முழு அளவில் துணை போன
வகையில் இந்தியாவும் ஒரு குற்றவாளி தான்.
அதே கட்சியும், அதே தலைமையும்
நீடிக்கின்ற நிலையில்,
இன்றைய காங்கிரஸ் மத்திய அரசு எப்படி
இலங்கையை கூண்டிலேற்றும் முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் ?
இங்கே தமிழ்நாட்டில் ஆளாளுக்கு அறிக்கை விடுவதால்
நடக்கப்போவது என்ன ? குண்டு சட்டியில் குதிரை
ஓட்டுவதில் இவர்கள் எல்லாருமே கெட்டிக்காரர்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஈழத்தமிழர் விஷயத்தில்
எந்த அளவு அக்கரை அக்கரை காட்டினார்கள் என்பதை
தான் நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோமே !
இந்த சமயத்தில் உருப்படியாக என்ன செய்ய முடியும்,
என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.
மத்திய அரசை வழிக்கு கொண்டு வர வேண்டுமானால் –
பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட பாராளுமன்றத்தில் இடம்
பெற்றுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து
காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ராஜபக்சே அரசுக்கு எதிராக ஐ.நா.சபை நடவடிக்கை
எடுக்க தற்போதைய இந்திய அரசு நிச்சயம் துணை போகாது.
ஆனால் – இந்திய மக்கள், அரசியல் கட்சிகள் அனைத்தும்
ஒருசேர குரல் கொடுத்தால் – குறைந்த பட்சம் -மத்திய அரசுமீண்டும் உலக அரங்கில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதைதடுத்து நிறுத்த முடியும்.
ஐ.நா. சபையில்
ராஜபக்சே நம்பி இருப்பது, இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய
நாடுகளைத்தான். மற்ற உலக நாடுகள் அனைத்தும்
இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தயாராகஇருக்கின்றன.
இரு துருவங்களாக உள்ள பாஜக வையும் கம்யூனிஸ்ட்
கட்சிகளையும் இது விஷயத்தில் மட்டுமாவது ஒரே அணியில்கொண்டு வர, வைகோ முயற்சித்தால் இயலும்.
ஈழத் தமிழர்களின் நலனுக்காகவும், ராஜபக்சே அரசின் மீது
விசாரணை துவங்கவும், தமிழ் நாடு மட்டும்
குரல் கொடுத்தால் போதாது. அனைத்திந்திய அளவில்
அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டி உரக்க குரல்
கொடுக்க வேண்டும்.
தண்டனை பெற்றுத் தருவது ஒரு புறம் இருக்க –
உடனடித்தேவை அங்கே உள்ள மக்களுக்கு முழு அளவிலான
நிவாரண உதவி. போர் முடிந்து இரண்டு ஆண்டுகள்
ஆகியும் இன்னும் மக்கள் அங்கே நிராதவாக,
வாழ்வே சுமையாகி, தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஐ.நா. சபையின் நேரடி கண்காணிப்பில் – இலங்கை
அரசின் சம்மதத்தைப் பற்றி கவலைப்படாமல்,
உடனடியாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் –
இதற்காக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து மத்திய அரசின்
மீது அழுத்தம் கொண்டு வர வேண்டும்.



தி.மு க மீண்டும் ஆட்சிக்கு வந்தால்:
எனக்கு நீ 2G விசாரணை என்று சங்கடம் கொடுத்தால், உனக்கு நான் ஈழம், ராஜபக்சே என்று சங்கடம் தருவேன்.,என்று தி.மு க காங்கிரசுக்கு நெருக்கடி தரும்.ஒரு ஒப்பந்தம் ஏற்படும்
அ.தி.மு க ஆட்சிக்கு வந்தால்:
மு.க ஈழத்தமிழருக்காக உருக ஆரம்பித்து விடுவார்.ஆனால் எல்லா போராட்டங்களையும் மாநில அரசை எதிர்த்தே நிகழ்த்துவார்.மத்திய அரசை குற்றம் சொல்ல மாட்டார்.
உண்மை என்ன:
இந்தியாவில் உள்ள மொத்தம் 28 மாநிலங்களில் 27க்கு இலங்கை தமிழர்கள் மீது உண்மையாக எந்த அக்கறையும் கிடையாது.மீதி உள்ள ஒரு மாநிலத்திற்கு அவர்கள் மீது பொய்யாக நிறைய அக்கறை உண்டு.
இலங்கை தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.
நீங்கள் சொல்வது போல் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி இலங்கை அரசின் மீது ஐ நா நடவடிக்கை எடுக்க முயலலாம் தான். வைகோ முயற்சியும் செய்யலாம்.
ஆனால், இது போன்ற உருப்படியான முயற்சி ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்த வேளையிலே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மேலும் ஒன்று: “புலிகள் செய்தது போர் அல்ல; கலகம்; அதை ஒடுக்க வேண்டியது அரசின் கடமை” என்ற அணுகுமுறையை இலங்கை சொல்லி வந்திருக்கிறது; இந்திய அரசும் அதே கோணத்தில் அதை நோக்கியதால் தான் ஆதரவு; உதவி, etc. அந்த நேரத்தில் தமிழகத்தில் கூட்டங்கள் போடுவதை விட மைய அரசுடன் பேசுவது அவசியம் என்று வைகோ, மருத்துவர், திருமா உள்பட எவரும் முயவில்லை; அனைத்துக் கட்சி குழு என்று கலைஞரின் நாடகத்தில் பாத்திரமாக இருந்து விட்டார்கள். இன்னமும் இந்திய அரசின் நிலையில் மாற்றம் இல்லை என்றே நினைக்கிறேன்.