தேர்தல் கமிஷனின் அபத்தமான அறிவிப்பு !
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த
தேர்தல் கமிஷனின் அறிவிப்பு இன்று மாலை
வெளியிடப்பட்டு விட்டது.
ஆனால், இந்த அறிவிப்பு –
நிலைமையை அலசி ஆராயாமல்,
நடைமுறை உண்மைகளை கருத்தில் கொள்ளாமல்,
இயந்திரத்தனமாக, முடிவெடுத்தது
போன்ற ஒரு உணர்வையே தோற்றுவிக்கிறது.
தமிழ் நாட்டில் ஏப்ரல் 13ஆம் தேதி ஓட்டுப்பதிவு
என்று அறிவித்து விட்டு, ஓட்டு எண்ணிக்கையும்,
முடிவு அறிவிப்பும் ஒரு மாதம் கழித்து,
மே 13ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று
அறிவித்திருப்பது அபத்தமாக இருக்கிறது.
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கும்,
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம் ? ஒன்றின் முடிவு மற்றதை
எந்த விதத்தில் பாதிக்கும் ?
இரண்டு மாநிலங்களிலும் மக்கள் முன்
உள்ள பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று
சற்றும் தொடர்பில்லாதவை.
முற்றிலும் மாறானவை.
போட்டியிடும் முன்னணி கட்சிகளும்
வெவ்வேறு.
பாராளுமன்ற தேர்தல் என்றால் –
ஒரு மாநிலத்தின் முடிவுகள் மற்ற மாநில
முடிவுகளை பாதிக்கும் என்பது –
ஓரளவிற்கு சரியே.
ஆனால் – இயந்திரத்தனமாக அதே
பார்முலாவை சட்டமன்ற தேர்தலுக்கும்
கடைபிடிப்பது அபத்தம் அல்லவா ?
ஓட்டளிக்கும் நாளுக்கும், எண்ணிக்கை
நடைபெறும் நாளுக்கு இடையே உள்ள
இடைவெளியை இயன்ற அளவு குறைப்பதே
புத்திசாலித்தனம்.
நீண்ட இடைவெளி – தேவையே இல்லாமல்
பதட்டத்தை தொடர்வதோடு,
அநாவசியமான பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும்.
தவிர -முடிவின் நம்பகத்தன்மையையும்
கேள்விக்குரியதாக்கி விடும்.
தேர்தல் கமிஷன் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை
செய்ய வேண்டும்.
ஒன்று – தமிழ் நாட்டில் நடைபெறும்
தேர்தலின் முடிவை, அநாவசியமாக
மேற்கு வங்க தேர்தலுடன் சம்பந்தப்படுத்தாமல்
வாக்களிப்பு முடிவடைந்து 2 நாட்களுக்குள்
முடிவை அறிவிக்க வேண்டும்.
அல்லது – முடிவுகள் ஒன்றாகத் தான்
அறிவிக்கப்பட வேண்டும் என்பதில்
தேர்தல் கமிஷன் உறுதியாக இருந்தால்,
தமிழ் நாட்டில் தேர்தலை –
மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட வாக்களிப்பு
நாளான, மே 11க்கு தள்ளி வைத்து விட்டு,
மே 13ந்தேதி அனைத்து முடிவுகளையும்
அறிவிக்கலாம்.
இது மிகவும் முக்கியமான விஷயம்.
தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளுக்கிடையில்
இதில் எந்தவித மாறுபட்ட கருத்துக்களும்
இருக்க வாய்ப்பில்லை.
தேர்தல் முடிந்த பிறகும்
பதட்டத்தைத் தொடர்வதில் யாருக்கும்
விருப்பம் இருக்க முடியாது.
எனவே தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து
அரசியல் கட்சிகளும், மீடியாவும்
தங்கள் ஒருமித்த கருத்தை
தேர்தல் கமிஷனுக்கு உடனடியாகத்
தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷனும், வறட்டு கௌரவம்
பார்க்காமல், தேதியை மாற்ற
ஒப்புக்கொள்ள வேண்டும்.



unmaiyaanathu ……… mudivu thethai yai maarri arivikka vendum
ஆந்திராவில் செய்தது போல ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டத் தொகுதிகளில் உள்ள மெஷின்களில் ஏற்கனவே பதியப் பட்ட வாக்குகளை அறிந்து அதை தி மு க காங்கிரஸுக்கு ஏற்ற வண்ணம் அல்லது காங்கிரஸ் தே தி மு க கட்சி கூட்டணி அமையும் வண்ணம் மாற்றும் ஏற்பாட்டுடனேயே இந்த நீண்ட கால அவகாசம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கால இடைவெளி தி மு க வுக்கே கூட ஆபத்து விளைவிக்கலாம் என்று தெரிகிறது. ஆகவே இதை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து கடுமையாக எதிர்க்க வேண்டும். இல்லாவிடில் ஜனநாயகம் கடத்தப் பட்டு விடும். இந்த கால இடைவெளி உடனடியாக எதிர்க்கப் பட வேண்டும். காங்கிரசின் சதித் திட்டத்தின் ஒரு அங்கமே இந்த கால அவகாசம். அரசியல் கட்சிகள் விழித்துக் கொள்ள வேண்டும் பின்னால் கூக்குரலிட்டுப் பயனில்லை. முதலில் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களைப் பயன் படுத்துவதே ஆபத்தானது. இது குறித்த சுவாமி போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ்கத் தேர்ந்தலின் முடிவுகள் மக்களின் ஓட்டுக்களால் நிர்ணயிக்கப் படப் போவதை விட இந்த ஒரு மாத இடைவெளியிலேயே தீர்மாணிக்கப் படப் போகின்றது. ஜெயலலிதா உடனடியாக இதை தடுக்க வேண்டும். என்னால் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும் நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜெ மட்டுமே
விஸ்வாமித்ரா
//தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கும்,
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம் ? ஒன்றின் முடிவு மற்றதை
எந்த விதத்தில் பாதிக்கும் ?//
//பாராளுமன்ற தேர்தல் என்றால் –
ஒரு மாநிலத்தின் முடிவுகள் மற்ற மாநில
முடிவுகளை பாதிக்கும் என்பது –
ஓரளவிற்கு சரியே.//
தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தாகவே உள்ளது உங்களது மேற்காணும் கருத்துக்கள்.
அரவரசன்.
இந்தமாதிரியான முடிவுகள்
ஜனநாயகத்தை
குழிதொண்டிபுதைக்க
நினைக்கும்
எண்ணத்திற்கு
முன்மாதிரிகளகிவிடும்…..
எனவே –
தமிழகமே ….இல்லை இல்லை
பாரதமே
ஒருமித்த குரலில்
போராடவேண்டும்…
கருணாநிதியே தேர்தலை முன் கூடியே வைத்து விட்டார்கள் என்று புலம்புவதை பார்க்கும் போது தேர்தல் அறிவித்தது சரி போல தோன்றுகிறது. என்ன… வாக்கு எண்ணுவதை ஒரு மாதம் தள்ளி போட்டிருக்க வேண்டாம்.
kashmir ponra manelangal nala velai elaction erunteruthal elaction resalt varuvatarku 4 month vendumm