2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !!

2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா
தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் !
நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !!

சில நாட்களுக்கு முன், இந்தியாவின் முன்னணி
கோடீஸ்வரராகிய  ரத்தன் டாட்டா, கலைஞருக்கு
தன் கைப்பட எழுதிய  கடிதம் ஒன்றைப் பற்றி
நிறைய செய்திகள்  உலவின.

2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயமாக ராஜா செய்த
உதவிகளைப் பாராட்டி, நன்றி தெரிவித்து,
கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்படவே
கடிதம் எழுதியதும், அதை நீரா ராடியா மூலமாக
நேரடியாக கலைஞரிடம் தரச்சொல்லி அனுப்பியதும்
பரபரப்பாக பேசப்பட்டது.

அப்படி ஒரு கடிதமும் தனக்கு வரவில்லை
என்று  கலைஞர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் நீரா ராடியா அவரைச் சந்தித்தாரா –
இல்லையா என்பது குறித்து -ஏதும் கூறவில்லை,
மௌனம் சாதித்தார்.

ரத்தன் டாட்டா கலைஞருக்கு எழுதி,
நீரா ராடியா மூலம் நேரடியாக அனுப்பிய,
ஆனால் – தனக்கு வரவில்லை என்று கலைஞரால்
மறுக்கப்பட்ட  கடிதம்  இது தான் –

மத்திய தொலை தொடர்பு துறையைப் பற்றி,
மாநில முதலமைச்சருக்கு, டாட்டா கடிதம்
எழுத வேண்டியதன்
அவசியம் என்ன ?

அதுவும், அவ்வளவு பெரிய தொழிலதிபர்,
முன்னணி கோடீஸ்வரர்,
தன் கைப்பட கடிதம் எழுதுவானேன் ?

அதையும் நீரா ராடியா மூலம்
நேரில் தரச்சொல்லி அனுப்புவானேன் ?
அப்படி என்ன “சேவை”செய்து விட்டார் ராஜா ?

– நமது மறக்க முடியாத தமிழ் நடிகர்
மறைந்த சந்திரபாபுவின் பாடல் ஒன்று
இந்த சமயத்தில் ஏனோ நினைவிற்கு வருகிறது –

“ஒண்ணுமே புரியல்லே – ஒலகத்திலே !
என்னமோ நடக்குது – மர்மமாய் இருக்குது”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 2ஜி தொடர்பாக -கலைஞருக்கு ரத்தன் டாட்டா தன் கைப்பட எழுதிய கடிதம் இது தான் ! நீரா ராடியா நேரடியாக கொண்டு வந்தது !!

  1. மதுரை சரவணன்'s avatar மதுரை சரவணன் சொல்கிறார்:

    பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள். கடைசி வரி ரிப்பீட்டு..

  2. sollasollainukkuthada...'s avatar raja1969 சொல்கிறார்:

    தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்…. மீண்டும் ஒருநாள் தர்மம் வெல்லும் !!

  3. அருண்முல்லை's avatar அருண்முல்லை சொல்கிறார்:

    கடிதம் ஏதும் கொடுக்கவில்லை, வந்தாங்க நீரா ராடியா
    குலுக்கிட்டுப்போனாங்க கையை.
    மஞ்சத் துண்ட போட்டுச் சத்தியம் பண்றேங்க!

  4. sollasollainukkuthada...'s avatar raja1969 சொல்கிறார்:

    பெத்தவங்க உயிரோட இருக்கும்போது தண்ணிகூட ஊத்தமாட்டனுங்க செத்ததுக்கப்புறம் பன்ற அலப்பற இருக்கே ….!????? ராஜபக்க்ஷே கிட்ட பரிசு வாங்க போனாரே திருமாவளவன் ………என்னிக்காவது அந்த அம்மா உயிரோட இருக்கிறப்ப போய் பார்த்தார ? இப்ப உள்ளே அனுப்ப மாட்டங்க தெரிஞ்சும் நம்மள முட்டாள் ஆக்கிரத பாருங்க தமிழன் இழிச்சவயன்னு மொதல்ல தமிழனுக்கு தானே தெரியும்…………….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.