இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் -மன்னிக்கவும் –
சிபிஐ வரலாற்றில் – முதல் முறையாக
ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் துவங்கி …..
தலைப்பை பார்த்ததும் சன் தொலைக்காட்சியில் புதிய
திரைப்படம் காட்டப்படுவதற்கான அறிவிப்பு போல
தோன்றுகிறதா ?
கிட்டத்தட்ட அது போலத் தான் !
சிபிஐ வரலாற்றில்,
அண்மைக் காலங்களில்,
ஊரடங்கிய பிறகு நள்ளிரவில் தொடங்கி,
விடியற்காலையில் – பால் வேன் வரும் முன்னரே,
அவசர அவசரமாக,ரகசியமாக,
மீடியாக்காரர்களுக்கு தகவல் தெரியும் முன்னர் –
ரெய்டை முடித்துக் கொண்டு வெளியேறிய
சம்பவம் அநேகமாக இது மட்டுமாகத் தான் இருக்கும்!
இது என்னவோ – திடீரென்று,
முன்னரே அறியாமல் நடந்ததாகத் தெரியவில்லை.
சம்பவம் தவிர்க்க முடியாதது என்பது
முன்கூட்டியே விளக்கப்பட்டு,
அப்படி தவிர்க்க முடியாதது என்றால்,
குறைந்த பட்சம் விளம்பரம் இல்லாமலாவது
நடக்கட்டுமே என்று இந்தப் பக்கத்திலிருந்து
கேட்டுக் கொண்டிருப்பதும் –
அந்தப் பக்கத்திலிருந்து பெரிய மனதுடன்
யாரோ அதற்கு ஆவன செய்தது போலவும்
தான் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும், விவகாரம்
உச்ச நீதி மன்றத்தின் நேரடி கண்காணிப்பில்
இருப்பதாலும், சிபிஐ யின் மிகச்சிறந்த
அதிகாரிகள் இதில் அசாத்திய துணிச்சலுடன்
செயலாற்றி வருவது கண்கூடாகத் தெரிவதாலும்,
விசாரணை உரிய முறையில் மேற்கொண்டு
செலுத்தப்படும் என்று நம்பலாம்.
கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு
பற்றி நக்கீரன் இதழில் ஒரு செய்தி
வந்திருக்கிறது. நக்கீரன் திமுக வுக்கு
ஆதரவான இதழ் என்பதாலும், வெளிவந்திருக்கும்
செய்தியின் தோரணையை பார்க்கும்போதே –
அந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்களே கொடுத்து,
வெளியிடும்படி கூறி இருக்கக்கூடும் என்பது
தெரிகிறது.
இது குறித்து நக்கீரனில் வெளிவந்திருக்கும் செய்தி –
—————————————–
“கலைஞர் டிவி முதலீட்டின் பின்னணி !
2008 செப்டம்பர் 15ந்தேதி கலைஞர் டிவி
தொடங்கப்பட்டது. ஏற்கெனவே சன் டிவியிலிருந்து
திருப்பி தரப்பட்ட பங்குத் தொகையிலிருந்து,
நவம்பர் மாதத்தில் கலைஞர் டிவியின்
60 % ஷேர்களை
தயாளு அம்மாள் வாங்கினார்.
அதே சன் டிவி பங்குத் தொகையிலிருந்து கலைஞர்
பிரித்துக்கொடுத்த பணத்திலிருந்து 2 கோடி
ரூபாயில் கலைஞர் டிவியின் 20 % ஷேர்களை
வாங்கினார் கனிமொழி.
இது போல நிர்வாக இயக்குநரான சரத்தும்
கலைஞர் டிவியின் பங்குகளை வாங்கினார்.
ஆனால் கனிமொழி பின்னர், கலைஞர் டிவியின்
டைரக்டர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
வெறும் ஷேர் ஹோல்டராக மட்டுமே நீடிக்கிறார்.
….. அது போல, சில மாதங்களில்
தயாளு அம்மாவும், தனக்கு தமிழில் மட்டுமே
கையெழுத்துப் போடத் தெரியும் என்பதால்
நிர்வாக ரீதியான கூட்டங்களில் பங்கேற்க இயலாது
என்றும், எந்த முடிவெடுத்தாலும் அதை
ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்து நிர்வாகப்
பொறுப்பிலிருந்து விலகி, சரத்துக்கு
அதிகாரங்களைக் கொடுத்தார்.
….சினியுக் நிறுவனத்தின் சார்பில் 214 கோடி
ரூபாய் ஷேர் தரப்பட்டது. எனினும், கலைஞர்
டிவியின் பங்குகள் குறித்த மதிப்பீட்டில் சேனலுக்கும்,
சினியுக் நிறுவனத்திற்கும் வேறுபாடுக்ள் ஏற்பட்டதால்,
பணத்தை திருப்பிக் கேட்டது சினியுக்.
பங்கு பணத்தை,கடனாகப் பாவித்து, வட்டியுடன்
அதனைத் திருப்பிச் செலுத்தி விட்டது கலைஞர் டிவி.
இந்த பரிவர்த்தனைகளை முழுமையாக கவனித்தவர் சரத்.
கலைஞர் டிவி முதலீடு காரணமாக கனிமொழிக்கு
சம்மன், ரெய்டு, விசாரணை என வதந்திகள் தினமும்
பரவிக் கொண்டிருக்கும் நிலையில் –
வெறும் ஷேர் ஹோல்டரான கனிமொழிக்கு இதனால்
எந்த நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு இல்லை
என்கிறது கலைஞர் டிவியின் சட்ட ஆலோசகர்கள் வட்டம்.”
—————————————
எதிர்காலத்தில் –
கலைஞர் டிவியில் –
முறைகேடுகள் என்று எதாவது
கண்டுபிடிக்கப்பட்டாலோ, அல்லது
நீதிமன்றத்தில் வழக்கு எதாவது வந்தாலோ –
சகலத்திற்கும் சரத்குமாரே பொறுப்பு.
அவ்வளவு தான் – தீர்ந்தது பிரச்சினை !!!!!!!!!!
ரெய்டு என்ன செய்யும் ரெய்டு ???????????
பி.கு.-1
அய்யோ பாவம் சரத்குமார் என்று அதற்குள்ளாக
அவசரப்பட்டு பரிதாபப்பட்டு விடாதீர்கள்.
அவருக்கு தகுந்த பரிசு ஏற்கெனவே
கொடுக்கப்பட்டு விட்டது -திருவள்ளூர் அருகே,
தேர்வாய் என்கிற இடத்தில் “டிராபிகல் புரூவரீஸ்”
என்கிற பெயரில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை.
இப்போது என்ன – “யார் தருவார் இந்த ….”
என்று பாடத் தோன்றுகிறதா ?
பி.கு.-2
மேற்படி நக்கீரன் செய்திகளின்படி –
கலைஞர் டிவியில் 20 % ஷேர் வாங்க
கனிமொழி கொடுத்த விலை 2 கோடி ரூபாய்.
அதே கலைஞர் டிவியில் 30 % ஷேர் வாங்க
சினியுக் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ்
தொகையே 214 கோடி ரூபாய் !
அப்படியும் விலை படியவில்லை என்று
தொகை கடனாகக் கருதி திருப்பிக்
கொடுக்கப்பட்டு விட்டதாம் !
—————————-
இவ்வாறு –
அத்தனையும் விஞ்ஞானபூர்வமாக –
மன்னிக்கவும் –
சட்டபூர்வமாக, விதிமுறைகளை
முற்றிலுமாக அனுசரித்து, செயல்பட்டிருக்கும் போது,
வட இந்திய மீடியாக்களும், உயர் சாதி பார்ப்பனர்களும்
அநியாயமாக குற்றம் சாட்டி, (இந்த தாழ்த்தப்பட்ட இனத்தவனான நல்லரசன் மாவலி ) மீண்டும்
ஆறாவது முறை ஆட்சிக்கு வர முடியாமல்
தடுக்கிறார்களே !
அய்யகோ – அய்யய்யோ –
அடுக்குமா இது ?
——————————————————————————
பகுதி-2 (19/02/2011 – காலை 11 மணி.)
டி.ஆர். பாலு தலைமையில்- கமாண்டோக்கள்
காவல் காக்க, நிகழ்ந்த ரெய்டு !!
நான் நேற்றிரவு மேற்காணும் இடுகையை
என் நோக்கில் தோன்றியதை எழுதி பிரசுரம் செய்தேன்.
சாதாரணமாக தமிழ் நாட்டில், அநேகமாக,
அனைத்து செய்தித் தாள்களும் ஆளும் கட்சிக்கு
விரோதமாக எதையும் எழுதுவதில்லை என்று
உறுதிமொழி எடுத்திருக்கும் (கொடுத்திருக்கும் ?)
வேளையில், தவறுதலாக ஒரு இன்று காலை
தின இதழ் ஒன்றில் இது தொடர்பாக சில
செய்திகள் வந்துள்ளன.
இதற்குள்ளாக அந்த இதழின் உரிமையாளர்கள்
“உரிய” விதத்தில் கவனிக்கப்பட்டு
இருப்பார்கள்.
நமது இடுகையில் உள்ள கருத்துக்களை
உறுதிப்படுத்தி இன்றைய செய்தித்தாளில் வந்துள்ள
சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும்,
நண்பர்கள் படிப்பதற்காக
கீழே கொடுத்துள்ளேன்.






அய்யகோ – அய்யய்யோ –
அடுக்குமா இது ?இது வேறு எங்கயாச்சும் நடக்குமா?தமிழன் இழிச்சவாயன் ……….???????????
//மேற்படி நக்கீரன் செய்திகளின்படி –
கலைஞர் டிவியில் 20 % ஷேர் வாங்க
கனிமொழி கொடுத்த விலை 2 கோடி ரூபாய்.
அதே கலைஞர் டிவியில் 30 % ஷேர் வாங்க
சினியுக் நிறுவனம் கொடுத்த அட்வான்ஸ்
தொகையே 214 கோடி ரூபாய் !
அப்படியும் விலை படியவில்லை என்று
தொகை கடனாகக் கருதி திருப்பிக்
கொடுக்கப்பட்டு விட்டதாம் !//
ஆஹா… பிரமாதம்… பிரமாதம்.
டீச்சர் : 20 பென்சில்களின் விலை 2 ரூபாய். 30 பென்சில்களை ஒருவர் 214 ரூபாய் கொடுத்து வாங்கினால் அவருக்கு லாபமா, நட்டமா? விற்றவர்களுக்கு லாபமா, நட்டமா?
மாணவன்: யாருக்கும்லாபமும் இல்லை, நட்டமும் இல்லை டீச்சர்.
டீச்சர்: குட், நீ எதிர்காலத்தில் பெரிய ஆடிட்டராக வருவாய்.
***
அதே தலைப்பில் -பகுதி-2 ல்
இன்னும்
சில செய்திகள்
இன்று காலையில்
புதிதாக சேர்த்திருக்கிறேன்…….
பார்க்கவும்.
-வாழ்த்துகளுடன்
காவிரிமைந்தன்
nantri…nantri..,clear picture
கேட்பவன் கேனப்பயலாக இருந்தால், கே.ஆர்.விஜயா பு…. அட விடுங்க எல்லோருக்கும் தெரிஞ்சது தானே…
மு.க, முபாரக் போல ஒரு சர்வாதிகாரி இல்லை.ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஒட்டு பெற்றே ஆட்சிக்கு வருகிறார் எனவே குற்றம் நம் மீது தான்.
நமக்கு நேர்மையே உருவான ஜீவாவும் ஒன்று, அநீதியின் மொத்த வடிவான மு.க வும் ஒன்று.
மேதை கலாமும் ஒன்று பேதை ப்ரதீபாவும் ஒன்று,
சிவாஜி கணேசனும் ஒன்று லூஸ் மோகனும் ஒன்று.
In democracy people get only what they deserve!
please dont insult loosmohan he s a good man and actor. U can put Vijay in tha place
ஒரு வரியில் தாழ்ந்த(சாதி) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது தாழ்ந்த அல்ல தாழ்த்தப்பட்ட சாதி என்பது தான் சரியான வார்த்தை பிரயோகம். தெரியாமல் எழுதி இருப்பீர்கள் என நினைக்கின்றேன். மற்றபடி உங்கள் கருத்துகளில் உடன்படுகின்றேன்.
நண்பர் நற்றமிழன்,
ஆம். கவனக்குறைவு தான்.
இப்போது சரி செய்து விட்டேன்.
மிக்க நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
now only i came to understand what is going on in indian politics.
நல்ல வேளை.
யாராவது கருணாவின் ஆசன வாயான நறகீரனை விமர்சிப்பார்களா என நினைத்திருந்தேன்.
அருமை அருமை.
நான் அறிந்தவரையில் கலைஞர் டிவிக்கு பத்து லட்ச ரூபாய் ஆத்தரைஸ்டு காபிடல் என்றும் ஒரு லட்சம் பெய்டு அப் காபிடல் என்றும் எகானமிக் டைம்ஸில் படித்ததாக ஞாபகம். அதாவது 60000 ரூ தயாளு அம்மாளும் 20000 ரூ கனியும் 20000 ரூ சரத்தும் முதல் போட்டிருப்பதாக -Registrar of Company-மூலம் அறியப்பட்டோம். அதற்கப்புறம் கலைஞர் டிவிக்கு உதவிய ஸ்டேர்லிங் சேவா சங்கரனைப்பற்றியோ, ரோசாவின் பினாமியாக கருதப்படும் பெரம்பலூர் தொழிற் சக்ரவர்த்தி தேன லேட்சுமி ஜீநிவாசநிடமோ இடமோ இன்னும் சிபிஐ நெருங்காதது என் ?