தமிழ் நாட்டின் சட்ட அமைச்சர் ஒரு பண்பாளர்,
இலக்கிய மேதை -அறிவீர்களா ?

நமது சட்ட அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன்
அவர்கள், அறிவாளர், சிறந்த பண்பாளர்
என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் தமிழிலும், இலக்கியத்திலும் அவருக்கு
உள்ள புலமையை பலர் அறிய மாட்டார்கள்.
எனவே டாக்டர் சுப்ரமணியன் சுவாமியைப்பற்றி
அவர் பேசிய இலக்கியத் தரம் மிக்க
ஒரு பேச்சை நண்பர்கள் கவனத்திற்காக
கீழே பிரசுரிக்கிறேன்.
————————————
சுப்பிரமணியம் சுவாமி என்பவர் யார்,
அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை
இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில்
எல்லாம் தான் ஏதோ மெத்தப் படித்த மேதாவி’
என்பதை போல காட்டிக்கொள்பவர்.
அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி.
நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டிவிட்டு
வரும் ஜென்மம்.
ஒரு கட்சியில் கூட நிலையாக நிற்காத
அரசியல் நாடோடி.
ஆதாயம் கிடைக்கிறது என்றால்,
யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர்.
விளம்பரம் கிடைக்கும் என்றால்
மனிதக் கழிவையும் கூட தொடத் துணியும்
அற்ப பேர்வழி.
ஒரு முதிர்ந்த அரசியல் ஜோக்கர்.
ஆனால், அவருக்கு தான் ஒரு அறிவாளி மேதை
என்கிற நினைப்பு.
அதனால் எதிலும்
மூக்கை நுழைக்கலாம் என்கின்ற அரிப்பு.
அந்த அரிப்பின் விளைவுதான் ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து
அந்த வழக்கில் கருணாநிதியின் பெயரையும்
சேர்த்துச் சொல்லியிருக்கிறார்.
காவல் துறையினரின் பாதுகாப்பு அவருக்கு
இன்றளவும் உள்ளது. அந்த பாதுகாப்பு மட்டும்
இல்லாவிட்டால் அவர் ஈடுபடும் நடவடிக்கைகளுக்கு
ஊருக்கு ஊர் தர்ம அடி விழும்.
அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது வழக்கறிஞர்.
ஆனால், அதை கருணாநிதியே அனுப்பியது
போல நினைத்துக் கொண்டு மீண்டும் பதில்
சொல்லியிருக்கிறார். அது நீதிமன்றக் கண்டனம்
என்றும் விஷயம் தெரியாமல் பதில் சொல்லி,
அது சில ஏடுகளிலே வெளிவந்துள்ளது.
கருணாநிதியைப்பற்றி, 5 முறை தமிழகத்தின்
முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த
அரசியல்வாதியைப் பற்றி இந்த ஜென்மம்
அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு
அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது
என்பதைத்தான் காட்டுகின்றது.



அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது வழக்கறிஞர்.
ஆனால், அதை கருணாநிதியே அனுப்பியது
போல நினைத்துக் கொண்டு மீண்டும் பதில்
சொல்லியிருக்கிறார்
நல்ல கேலி கூத்து
துரைமுருகன் விசுவாசத்தை காண்பிக்க எழூப்பும் ஜால்ரா சத்தம் ,நம் காதை கிழிக்கிறது.
வழக்கறிஞர் தாமாகவே நோட்டீஸ் அனுப்பினாராமா… யார் சொல்லியும் இல்லாமல் தானாகவே அனுப்பியிருக்கிறாரா… நல்ல காமெடி இது. சுப்ரமண்ய சுவாமி ஒரு சூரியன். அந்த சூரியனைப் பார்த்து….
idha subramani-swamy padikum padi seinga please
அரசியலில் தரம் இன்னும் தாழுமா என நாம் நினைத்துக்கொண்டு இருக்கையில் கலைஞரும் அவர் அடிவருடிகளும் மீண்டும் மீண்டும் நமக்கு வியப்பு அளித்துக் கொண்டே இருக்கிறார்கள். சு. சுவாமியின் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க தகுதி அற்றவர்கள் அவருக்கு அர்ச்சனை செய்வது நம் துரதிஷ்டம்.