Hero of the day -இன்றைய கதாநாயகன்
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !
ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் –
ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும்,
காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா?
முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி
ஒரு ஹீரோ.
ராஜா, துரைமுருகன், கலைஞர் கூட்டணிகள் –
வெளியில் இவரை காமெடியன்/ஜோக்கர் என்று கூறி
எள்ளி நகையாடினாலும் –
உள்ளுக்குள்ளே அவரை மிகப்பெரிய வில்லனாகக் கருதி
அஞ்சி நடுங்குவது எல்லாருக்கும் வெளிப்படையாகவே
தெரிகிறது.
முந்தாநாள் கலைஞர் சுப்ரமணியன் சுவாமிக்கு
நோட்டீஸ் அனுப்பினார் –
24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக்கேள் –
சொன்னதை திரும்பப் பெறு –
இல்லையேல் விளைவைச் சந்திக்க நேரிடும் என்று.
சரியாக 24 ஆவது மணி நேரம்,
கலைஞரின் கோட்டையிலேயே, சென்னை கிண்டி
ராஜ்பவன் வாயிலிலேயே – டாக்டர் சுவாமி ஆஜர்.
இன்னும் மேற்மொண்டு பல குற்றச்சாட்டுக்களை
வெட்டவெளியில்
பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அள்ளி வீசினார்.
கலைஞர் மீதே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம்
பிரிவுகளில் கோர்ட்டில் வழக்குத் தொடுக்க
கவர்னரிடம் அனுமதி கேட்டு மனு கொடுத்திருப்பதாக
அறிவித்தார்.
(அவரை சந்திக்க பயந்த, ஆளுனர் பகல் 12 மணிக்கு
உடல்நிலை சரி இல்லாததால் தூங்குகிறார் என்று
சாக்கு, போக்கு சொல்லி தட்டிக்கழிக்கப் பார்த்தும்,
விடாமல், அவரது பாதுகாவலரிடமே மனுவைக் கொடுத்து
புகைப்பட ஆதாரமும் பெற்றுக் கொண்டு விட்டார் சுவாமி)
என்ன செய்யப் போகிறார் கலைஞர் ?
மீண்டும் நோட்டீஸ் அனுப்புவாரா ?
இல்லை ஏற்கெனவே அனுப்பிய நோட்டீஸின்படி
நடவடிக்கை எடுப்பாரா ?
(நண்பர் விஸ்வாமித்ரா கூறியது போல் –
ஒப்புக்காக ஒரு மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒரு
சிவில் வழக்கை பதிந்து விட்டால் – வருடக்கணக்காக
அது காத்திருப்பிலேயே இருக்கும். அப்படியே
காணாமலும் போய் விடும் )
இல்லை வழக்கம் போல் சவால் விட்டு விட்டு
பிறகு பம்மிப் பதுங்குவாரா ?
சுப்ரமணியன் சுவாமி கொடுத்த ஊழல் புகாரில்
உள்ள வீட்டு வசதி வாரியம் பற்றிய
விஷயங்கள் ஏற்கெனவே,
சில வலைத்தளங்களிலும்,
ஜுனியர் விகடனிலும் வெளி வந்திருக்கின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் –
கோபாலகிருஷ்ணன் என்கிற பொது நலத்
தொண்டர் ஒருவர்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் போராடிப்
பெற்றிருக்கும் தகவல்களின்படி இந்த விவரங்கள்
வெளி வந்திருக்கின்றன.
இது விஷயமாக இதே விமரிசனம் வலைத்தளத்தில்
கூட அனைத்து விவரங்களுடன் ஒரு இடுகை –
“வீடு வேண்டுமா வீடு ?
கலைஞருக்குப் பிடித்த –
அப்பழுக்கில்லாத அரசு ஊழியர் –
சமூக சேவகர்கள் !” –
என்கிற தலைப்பில் 10/12/2010 அன்று
வெளிவந்திருக்கிறது.
(சொடுக்கவும் –
71 வயதில், இன்னும் உற்சாகமாகவும்,
தன்னம்பிக்கையுடனும், தன்னந்தனியாக
பொதுப்பணி ஆற்றிவரும் சுப்ரமணியன் சுவாமி
என்னை பிரமிக்க வைக்கிறார்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நான் அவரை
கவனித்து வருகிறேன்.
அவர் போக்கைப் பற்றியும்,
நம்பகத்தன்மை அற்ற குற்றச்சாட்டுகளைப் பற்றியும்
பல குறைகள் கூறப்பட்டாலும்,
(தனிப்பட, இலங்கை பிரச்னையில்
அவரது அணுகுமுறையை சுத்தமாக ஏற்காதவன் நான்)
இதுவரை அவரைப் பற்றி எந்தவித ஊழல் புகாரும்
கூறப்பட்டதில்லை. 5 முறை பாராளுமன்ற
உறுப்பினராக இருந்திருக்கிறார். மத்திய அமைச்சராகவும்
பதவி வகித்திருக்கிறார். அவரை சுயநலவாதி என்றோ,
பதவியைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்றோ
இதுவரை யாரும் குறை கூறியதில்லை.
இன்றைய தினம் -அவருக்குப் பெரிய கட்சி பின்னணி
எதுவும் இல்லை. பெரிய அளவில் தொண்டர் பலமும்
கிடையாது. இந்த வயதிற்கு மேல் அவருக்கு
பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்கிற நம்பிக்கையும்
கிடையாது.
இருந்தாலும், நிறைந்த தன்னம்பிக்கையுடன்,
பரந்த அளவில் தகவல்களைத் திரட்டி,தன்னந்தனியாக
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராடுகிறார்.
நேற்று மதியம் தொலைக்காட்சியில்,
சென்னை ராஜ்பவன் வாசலில், தன்னந்தனியாக
நின்று கொண்டு அவர் பத்திரிகையாளர்களைச்
சந்தித்த விதம் – பிரமாதம்.
அவரைக் காணும்போது, நம்மைப் போன்றவர்களுக்கும்
துணிந்து போராட ஊக்கம் பிறக்கிறது.
ஒரு நம்பிக்கை வருகிறது.
வாழ்க டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
உங்கள் பழைய சரித்திரம் எப்படி இருந்தாலும்
பரவாயில்லை.
எதிர்காலத்தில் நீங்கள் எப்படி மாறினாலும் சரி.
இன்றைய உங்களுக்காக, இன்றைய சுப்ரமணியன்
சுவாமிக்காக நாங்கள் துணை இருக்கிறோம்
என்று சொல்ல விழைகிறேன்.
சரி தானே நண்பர்களே ?
————————————
தொடர்ந்து தொலைக்காட்சியில் (NDTV-HINDU)
மற்ற ஒரு நிகழ்வையும் பார்த்தேன்.
(தொலைக்காட்சி வந்த பிறகு இது ஒரு வசதி.
பதில் கொடுக்கும்போது பேட்டி கொடுப்பவரின்
முகபாவத்தையும், உடல் மொழியையும்
(body language) வைத்தே அவர் வார்த்தைகளை
நம்மால் எடை போட முடிகிறது !)
தொலைக்காட்சி நிருபர்கள் திமுக தலைமை நிலைய
செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான
டிகேஎஸ் இளங்கோவனை- சுப்ரமணியன் சுவாமி
கூறியுள்ள வீட்டு வசதி வாரிய ஊழல் பற்றியும்
ஏற்கெனவே வீடுகள் உள்ளவர்களுக்கு எல்லாம்
விருப்புரிமை கோட்டாவில் மீண்டும் வீடுகள்
அளிக்கப்பட்டதைப்
பற்றியும் கேள்வி கேட்கின்றனர்.
அதற்கு அவர் பதில் கூறுகிறார்.
“விண்ணப்பங்களில் கூறப்பட்டுள்ள விவரங்கள்
உண்மை என்கிற நம்பிக்கையில் தான் வீடுகளும்,
மனைகளும் ஒதுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு விண்ணப்பத்திலும் கூறப்பட்டுள்ள
விவரங்களை சரி பார்ப்பது அரசாங்கத்தின்
வேலை அல்ல.”
(இந்த பதிலே தவறு. ஒவ்வொரு விண்ணப்பத்தின்
கீழும், ஒரு உறுதிமொழி தரப்படுவது/பெறப்படுவது
வழக்கம்.
மேலே கூறியுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மை.
பிற்காலத்தில், இவற்றில் எதாவது தவறு இருப்பது
கண்டு பிடிக்கப்பட்டால், அதற்கான விளைவுகளையும், முழுப்பொறுப்பையும் நான்
ஏற்றுக்கொள்வதோடு, இந்த ஒதுக்கீடு ரத்து
செய்யப்படுவதற்கும் ஒப்புதல் அளிக்கிறேன் என்று
விண்ணப்பதாரரிடமிருந்து உறுதிமொழி பெறுவது வழக்கம்.)
“இதில் யாராவது தவறான தகுதிகளுடன்
ஒதுக்கீடு பெற்றிருந்தால்,
அதைப்பற்றி யாராவது
புகார் கொடுக்கும் பட்சத்தில்,
வீட்டு வசதி துறை
அதை விசாரணை செய்து,
தவறு நடந்திருக்கும்
பட்சத்தில் உரிய (?) நடவடிக்கை எடுக்கும்.”
உடனே ஒரு பெண் நிருபர் கேட்கிறார்.
“ஒரே விண்ணப்பதாரருக்கு,ஒரே சமயத்தில்,
அருகருகே இரண்டு
மனைகள் ஒதுக்கி இருக்கிறார்களே.இதற்கு தனியாக
சரி பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே.
ஒரே நபருக்கு ஒரே நேரத்தில் இரண்டு மனைகள்
ஒதுக்குவது எப்படி சரியாகும் ?”
எரிச்சலுடன்,திரு திருவென்று விழிக்கும்
இளங்கோவனின்
இரண்டுங்கெட்டான் நிலை
நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது.
சில நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில்
எழுதி இருந்தேன். நமது இளம் பத்திரிக்கையாளர்கள்
இன்னும் விழிப்புடனும், துடிப்புடனும் இருக்க வேண்டும்.
பேட்டி கொடுப்பவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டு
வந்து அப்படியே பத்திரிகையில் போடுவதில்
எந்த சாமர்த்தியமும் இல்லை.
பேட்டியாளர் சொல்லத் தவறுவதை, சொல்ல மறுப்பதை,
மறைப்பதை, வெளிக்கொண்டு வரும் வகையில்
சாமர்த்தியமாகக் இடையே கேள்விகள் கேட்க வேண்டும்.
அத்தகைய கேள்விகளுக்கு பேட்டியாளர் பதில் அளிக்க
மறுத்தால் கூடப் பரவாயில்லை. ஏனென்றால் –
பதில் சொல்ல மறுப்பதே – ஒரு வகையில் பதில் தான்.
அதை நாம் புரிந்து கொண்டு விடலாம் என்று எழுதி
இருந்தேன்.
அந்த என் ஆவலை நிறைவேற்றும் வகையில் கேள்வி
கேட்ட அந்த முகம் அறியாத இளம் பெண் நிருபருக்கு
என் பாராட்டுகள்.
இத்தகைய விழிப்புணர்வு உள்ள மீடியா தான்
இன்றைய தேவை.




Very nice!
Keep up the good work, people need quality web content to read and see 🙂
வீட்டு மனைகளை தன் அடியாட்களுக்கு அள்ளி விட்டதைப் போலவே கருணாநிதி அரசு துறைகளுக்கு அப்ளிக்கேஷன் சாஃப்ட்வேர் செய்து தரும் காண்டிராக்டை எந்த வித விதி முறையும் ஏலமும் இன்றி பர்னாலா பையன் நடத்தும் பர்னாஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு அளித்துள்ளார். ஆகவே என்ன நடந்தாலும் சரி ஊழல் பெருச்சாளி பர்னாலா கருணாநிதி மீதான வழக்குக்கு அனுமதி அளிக்கப் போவதேயில்லை. கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரை சுவாமியால் கருணாநிதி மீது வழக்குப் போட பர்னாலா எந்தக் காலத்திலும் அனுமதிக்கப் போவதில்லை. கருணாநிதி பதவி இறங்கும் வரை சுவாமி காத்திருக்க வேண்டியதுதான். அந்த தைரியத்தில்தான் துரை முருகன் போன்ற பொறுக்கிகளை விட்டு கருணாநிதி சுவாமியை ஆபாசமான முறையில் தாக்கியிருக்கிறார்.
சுவாமி ஒரு கர்ம வீரன். சமீப காலங்களில் அவரது நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு குடிமகனும் கடமை பட்டிருக்கிறார்கள். தன் கடமையைச் செய்வதாகவும் பலன் குறித்துத் தான் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் ஆண்டவன் அருளட்டும்
வருக நண்பர் விஸ்வாமித்ரா,
பர்னாலாவின் மகன் ராஜ்பவனில் இருந்து கொண்டு
நடத்தும் லீலைகளைப் பற்றி அரசல் புரசலாக
டிரெய்லர் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
விரைவில் முழு திரைப்படமும் “ரிலீஸ்” ஆகும்
என்று நம்புகிறேன் !
சுப்ரமணியன் சுவாமி இந்த மனுவைக் கொடுத்தது
24 மணி நேரத்துக்குள்ளாக
தன் “ரெஸ்பான்ஸ்” என்ன .என்பதைக் கலைஞருக்கு
காட்டுவதற்காகத் தான் என்று நினைக்கிறேன்.
– வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
என்னை பொறுத்தவரை,சுப்ரமணியன் சுவாமி மனோபலம் மிக்க,மிக அற்புதமான மனிதர்.
வாழ்க டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.
உங்கள் பழைய சரித்திரம் எப்படி இருந்தாலும்
பரவாயில்லை.
எதிர்காலத்தில் நீங்கள் எப்படி மாறினாலும் சரி.
இன்றைய உங்களுக்காக, இன்றைய சுப்ரமணியன்
சுவாமிக்காக நாங்கள் துணை இருக்கிறோம்
என்று சொல்ல விழைகிறேன்.
சரி தானே நண்பர்களே
நான் மிகவும் பரிதாபப்படுவது …
சந்தன கடத்தல் புகழ் வீரப்பனை நினத்துத்தான்!!
1980 களில் தன் “தொழிலை”த் தொடங்கிய ,வீரப்பன் 2004 இல் “அமரத்துவம்” எய்தும் வரை அடித்த மொத்த கொள்ளை ரூ 50 கோடி இருந்தால் அதிகம்.இதற்கு அவன் கொடுத்த விலையோ மிக அதிகம்.
ஒரு மிருகம் போல பல்லாண்டுகள் வனத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்தான்.முடிவில் ஒரு விலங்கைப்போலவே சுட்டுக்கொல்லப்பட்டான்
அப்படி அவன் செய்த தவறுதான் என்ன?
கொள்ளை அடித்ததா?
கொலை செய்ததா?
ஆட்கடத்தல் செய்ததா?
இல்லை இல்லை!
இல்லவே இல்லை…
அவன்,தன் “தொழில்” துவங்கியவுடன் ,
தி.மு.க விலோ ,
அ.இ.அ.தி.மு. க.விலோ,
காங்கிரஸிலோ,
உறுப்பினராக சேராதாதுதான்!!
அப்படி செய்திருந்தால்…
அதிகபட்சம்
இப்பொழுது மத்திய வனத்துறை அமைச்சராக இருந்திருப்பான்.சுட்ட போலீஸ் அதிகாரிகள்
அவனுக்கு சல்யூட் அடித்துக்கொண்டிருப்பர்.
குறைந்தபட்சம்
ஒய்வு பெற்று ஒரு மருத்துவக்கல்லூரிக்கோ ,
அல்லது
பொறியியற்கல்லூரிக்கோ
தாளாளராக
மதிப்புடன் வாழ்ந்துகொண்டிருப்பான்.
இப்போ சொல்லுங்க !!
அவன் பாவம் தானே!!!
மிகச் சரியாகச் சொன்னீர்கள் கண்பத்.
வீரப்பன் செய்த ஒரே தவறு –
இவர்கள் எல்லாம் வைத்துக்கொண்டிருக்கும்
“அரசியல்வாதி” என்கிற லைசென்ஸை
அவன் வாங்காதது தான்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
My grand mother who is illeterate and aged 80+ says Raja’s extension of custody is only an eye wash. During these two days he will be given Royal treatment and on the third day he will be immediately released on bail.