ஏர்டெல் சுனில் மிட்டல் சோனியா காங்கிரசுக்கு கொடுத்த பணம் ….

ஏர்டெல் சுனில் மிட்டல் சோனியா
காங்கிரசுக்கு கொடுத்த பணம்  ….

உங்களிடம் தானம் பண்ணக்கூடிய அளவிற்கு
பணம் இருந்தால், யாருக்கு/எதற்காக பணம்
கொடுப்பீர்கள் ?

நீங்களோ, நானோ, ஏன் – நம்மில்
பெரும்பாலானோர்
அநாதை,  ஆதரவற்றோர் இல்லங்களுக்கு,
மனநலம் குன்றியோர் விடுதிகளுக்கு,
இலவச மருத்துவ மனைகளுக்கு,
கல்விக்கூடங்களுக்கு,
கோவில்களுக்கு – கொடுப்போம்.

அரசியல் கட்சிகளுக்கு கொடுப்போமா ?
தீவிரமான கட்சி ஆதரவாளர்களாக இருந்தால்
500, 1000 ரூபாய்   கொடுக்கக்கூடும்.

ஆனால் -ஒன்றல்ல இரண்டல்ல –
ஆயிரம் லட்சங்களை
(அதாவது  பத்து கோடி ) ஒருவர் –
ஊழலை ஒழிக்கவென்றே புதிதாக  அவதாரம்
எடுத்திருக்கும் சோனியா காந்தியின்
தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு
தானம் கொடுத்தார்  என்றால் அவர்
சும்மாவா கொடுத்திருப்பார் ?

உங்களையும் என்னையும் –
பேசுங்கள்,
பேசுங்கள்,
பேசிக்கொண்டே இருங்கள் என்று சொல்லி பணம்
பண்ணுகிறார்களே  தொழிலதிபர் சுனில் பார்தி
மிட்டலின் ஏர்டெல் செல்போன்  நிறுவனத்தார் –

அவர்கள் தான் 2008-2009 நிதியாண்டில்
காங்கிரஸ் கட்சிக்கு ரூபாய் பத்து கோடியை
தானமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

வருமான வரி இலாகாவிற்கு, காங்கிரஸ் கட்சி
கொடுத்துள்ள  அதிகார பூர்வமான கணக்கு  இது !

பதிலுக்கு ஏர்டெல் நிறுவனம் பெற்ற அல்லது பெற
விரும்பிய லாபம் எதுவோ ?

ஆஆஆ….  ராஜாவுக்கே  வெளிச்சம் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஏர்டெல் சுனில் மிட்டல் சோனியா காங்கிரசுக்கு கொடுத்த பணம் ….

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை.

    இன்று நம் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையும் ஊழல களையும் பார்க்கும் போது மிக பெரிய மக்கள் புரட்சி வந்தால் தவிர இவைகளை அழிப்பது இயலாது எனத்தெரிகிறது.சுயநலம் மிக்க மக்கள் வாழும் நம்நாட்டில் புரட்சி என்பது சாத்தியமும் இல்லை.

    இப்பொழுது ஆட்சி செய்யும் ஊழல்வாதிகளுக்கு (காங்.தி.மு.க)
    மாற்றாக நாம் கருதுவது இவர்களை விட ஊழல பிடித்த பி.ஜே.பி. அ.தி.மு.க வாகும்.குறிப்பாக அ.தி மு .க. நம் மாநிலத்திற்கு இழைத்த கொடுமை அளவிர்க்கரியது கருணாநிதியைவிட பல மடங்கு ஆபத்தானவர் ஜெயா

    செயலற்று கிடக்கும் மாக்கள் கூட்டத்திற்கு விவரங்கள் எதுவும் தேவையில்லை.உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

    நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.

      நமது நம்பிக்கை – எதிர்பார்ப்பு –

      இன்றில்லா விட்டாலும்
      நாளையாவது மாறுமல்லவா !

      அன்புடன்
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.