டி.ஆர்.பாலுவும் – பசுமாடு – எருமை மாடு விளக்கமும்

டி.ஆர்.பாலுவும் – பசுமாடு – எருமை மாடு
விளக்கமும்

டி.ஆர்.பாலு தஞ்சையில் பேசும்போது கூறியது –

1)   பாலை பசுமாடும் கொடுக்கிறது, எருமைமாடும்
கொடுக்கிறது. இந்த  பாலின் விலையும் அந்த பாலின்
விலையும் ஒன்றா? அதே  போன்றுதான் 2ஜி மற்றும்
3ஜி இரண்டும்  அலைக்கற்றைதான்.
ஒரே விலையில்  இரண்டையும் வாங்கிவிட முடியுமா?

2)  ” கருணாநிதி  ஊமைகளை  பேசவைத்தவர்.
அவர்  செவிடர்களை கேட்க வைத்தவர். இனி தமிழ்
நாட்டில் எப்போதும் அவர் ஆட்சி தான் “.

———————————————————————————
பாலு அவர்களுக்கு விளக்கம் –

1)  அதையே தான் தணிக்கையாளர்களும் சொல்கிறார்கள்.
எப்படி பசும்பாலின் விலைக்கு எருமைப்பாலை
வாங்க முடியாதோ –  அதே போல்,
அதிகம் பேரால் பயன்படுத்த முடியாத
3ஜி  யே ஏலத்தில் இவ்வளவு விலை போகுமானால் –
மிகக் குறுகிய காலத்தில்
40 கோடி இணைப்புகளை பெற்றுத்தந்துள்ள
2ஜி க்கு ஏலத்தில் எவ்வளவு அதிகம்  பணம்
வந்திருக்க வேண்டும் ?

அதைத்தான்  இழப்பு என்கிறார்கள்.

இதை  –  தெரியாமல்  செய்வது வேறு.

டிராய் முதற்கொண்டு, நிதி அமைச்சகம்,
சட்ட அமைச்சகம், பிரதமர் ஆகிய அத்தனை பேரின்
ஆலோசனைகளையும் மீறி வேண்டுமென்றே –
கையூட்டு பெற்றுக்கொண்டு,
சுயலாபம்  கருதி, செயல்பட்டதால் தான் –
இதை
ஊழல் என்றும்,
சுரண்டல் என்றும்
கொள்ளை என்றும் சொல்கிறார்கள்.
தூங்குபவர்களை எழுப்பலாம் –
கண்ணை மூடிக்கொண்டு விழிக்க மறுப்பவர்களை
யாரால் எழுப்ப முடியும் ?

அவர் சொல்லிய இரண்டாவது  விஷயம் –
நித்தியானந்தாவிற்கு மாற்று இல்லாமல் தமிழகமே
தத்தளித்து கொண்டிருந்தது !  இனி மக்களுக்கு
கவலையே இல்லை !
பேச முடியாதவர்களையும்,
கேட்க இயலாதவர்களையும்,
பார்க்க இயலாதவர்களையும்
இனி பாலுவே கலைஞரிடம் அழைத்து சென்று
குணப்படுத்தி விடுவார் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.