(திருட்டு) லாட்டரி சீட்டு அதிபருடன் கூட்டு சேரலாமா முதல்வர் கலைஞர் ?

(திருட்டு)  லாட்டரி சீட்டு அதிபருடன்
கூட்டு சேரலாமா முதல்வர் கலைஞர்  ?

கேரள  சட்டமன்றத்தில் படாத பாடு படுகிறது
திருட்டு லாட்டரி சீட்டு விவகாரம் !

சிக்கிம், நாகாலாந்து போன்ற
பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு
விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகள்
கேரளாவில்  பிரபலம்.  தினமும் கோடிக்கணக்கான
ரூபாய் வியாபாரம்  நடக்கிறது. இந்த வியாபாரத்தில்
பல்லாயிரக்கணக்கான கோடிகள் பணம் பண்ணுபவர்
லாட்டரி   அதிபர் மார்டின் என்பவர்.

கடந்த  சில  ஆண்டுகளாக  தொடர்ந்து
விற்பனைக்கணக்குகளில் தில்லுமுல்லு மோசடிகள்
பண்ணி அரசாங்கத்திற்கு விற்பனை வரியாக
செலுத்தப்பட வேண்டிய
பல ஆயிரம் கோடி ரூபாய்களை ஏமாற்றி
சுருட்டி விட்டதாக இவர் மீது கேரள அரசு வழக்கு
நடத்திக்கொண்டு வருகிறது. கேரளத்தில்  மிகவும்
பிரபலமானவர் ( notorius ?) இவர் !
தமிழ் நாட்டில் கூட  பரவலாக சட்ட விரோதமாகப்
புழங்கி வரும்  லாட்டரி வியாபாரத்தில்  இவரது பணி
மகத்தானது (!) என்று கூறப்படுகிறது !

இவர் செயல்பாடுகள் / குற்றச்சாட்டுகளில் பல
மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால்  கேரள
(மார்க்சிஸ்ட்) அரசு  மத்திய அரசிடம்  சிபிஎய்
விசாரணையை  கோரி உள்ளது.

பாவம் நமது கலைஞர் –
இந்த  மார்டினின்  பின்னணி தெரியாமல்

தமது 75வது  மகத்தான  படமான “இளைஞன்”
படத்தை உருவாக்க இவருடன் போய்
உறவு வைத்துக் கொண்டிருக்கிறார் !

மார்டின், தமிழ்நாட்டில்  தன்னுடைய
சட்டவிரோத  லாட்டரி  விவகாரங்கள்
கண்டுகொள்ளப்படாமல் இருக்க   இந்த கூட்டுறவு (!)
உதவும்  என்கிற  நம்பிக்கையில்
தனக்கு சம்பந்தமோ  முன் அனுபவமோ இல்லாத
திரைப்படத்தயாரிப்பில் தீவிரமாக
ஈடுபட்டிருக்கிறார்   (என்று பொதுமக்கள்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் ? ! )

கலைஞரோ அரசு வேலைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்.
பாவம் இதை எல்லாம் விசாரிக்க முடியுமா  அவரால் ?
வெளுத்ததெல்லாம்  பால் என்று நம்புபவர் –
கிடைத்தவரை எல்லாம் புரோடியூசர் ஆக்க நினைக்கிறார் !

அருகில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் ?
கலைஞருக்கு இதைப்பற்றி எல்லாம் எடுத்துச்சொல்ல
வேண்டாமா ?

சரி –  யாராவது
எடுத்துச் சொல்லலாம் தான்.  ஆனால் அவர்களுக்கும்
பயம் போலும்.  உடனே கலஞர் “ஒனக்கு எப்படி
தெரியும் ? நீயும்  கூட இருந்து லாட்டரி வித்தியா ?”
என்று கேட்டு விட்டால்  என்ன செய்வது என்று
பயம் போலும் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.