அவதூறு செய்தி குறித்து கனிமொழியின்
தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !
நேற்றைய தினம் டெல்லியிலிருந்து வெளிவந்த
செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள்
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை –
(நக்கீரனில் வெளிவந்துள்ளது )
—————————————-
அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை
ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில
மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக
ராஜாத்தி அம்மாள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது
சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சில மீடியாக்களில் புதன்கிழமை வெளியான
செய்திகள் குறித்து விளக்கம் அளித்த ராஜாத்தி அம்மாள்,
ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து,
தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம்
வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர்,
சென்னை
அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த
இடத்தை
அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி
முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத்
தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக
தெரிகிறது.
டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல்
நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ,
தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப்
போல சில
மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை
உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது.
தொடர்ந்து இத்தகைய செயல்களில்
ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக
சட்டப்பூர்வமான
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
——————————————-
நேற்று நள்ளிரவில் (சிபிஐ ரெய்டு முடிந்த பிறகு )
டெல்லி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தியில்,
சென்னை அண்ணா சாலையில்,
டாடா நிறுவனம் –
53,000 சதுர அடி கொண்ட சுமார் 250 கோடி ரூபாய்
மதிப்புள்ள ஒரு சொத்தை வெறும் 25 கோடிக்கு
ராஜாத்தி அம்மாளின் அரசியல் செயலாளர் (political
secretary ) சரவணன் என்பவருக்கு விற்பனை
செய்ததைப் பற்றி வியப்பு தெரிவித்திருந்தது. அந்த
சொத்து மீண்டும் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர்
ஷன்முகநாதன் என்பவருக்கு மாற்றம் செய்யப்பட்டதையும்
தெரிவித்திருந்தது.ஒரு விற்பனைப் பத்திரத்தின்
நகலையும் வெளியிட்டது.
(ராயல் நிறுவனம் என்கிற பெயரெல்லாம் வரவே இல்லை)
————————————
அந்த நிறுவனம் சரியான ஆதாரங்கள் இல்லாமல்
இத்தகைய செய்திகளை வெளியிட்டது தவறு தானே !
கனிமொழியின் வீட்டிற்கு ரத்தன் டாடாவும்,
நீரா ராடியாவும் விருந்துண்ண வந்தபோது தான்
இது பற்றி முடிவு செய்தார்கள் என்று செய்தி தளம்
தானாகவே நினைத்துக் கொண்டு விட்டதா ?
சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்ய வேண்டாமா ?
மேலும், சென்ற வாரம் வெளியான,
அவுட்லுக் பத்திரிகையில் வெளிவந்த –
நீரா ராடியா பேச்சுக்களில் நீரா ராடியா முதலில் ராஜாத்தி
அம்மாளுடனும், பிறகு அவர் மூலமாக அவரது
ஆடிட்டர் ரத்தினம் என்பவருடனும் பேசியது
இந்த சொத்தைப் பற்றியது தான் என்று அந்த செய்தி தளம்
மீண்டும் தானாகவே ஊகம் செய்து கொண்டு விட்டதா ?
மேலும் (இத்தகைய செய்திகள் வெளிவர
ஆரம்பித்தவுடனேயே)
உதவியாளர் சரவணன் – அவர்களை விட்டுப்
பிரிந்து போய்
தனியே தொழில் செய்ய ஆரம்பித்து விட்டது
செய்தி நிறுவனத்திற்கு தெரியாதா ?
அதை விசாரித்து தெரிந்து கொண்டிருக்க
வேண்டாமா ?
250 கோடி ரூபாய் சொத்தை வெறும் 25 கோடி
ரூபாய்க்கு டாடா சரவணனுக்கு விற்றார் என்றால்
அதற்கு காரணம் என்ன என்று விசாரித்து
அறிந்து கொண்டார்களா ?
ஒரு வேளை டாடா அவர்கள்
சரவணனுக்கு நெருங்கிய நண்பராகவோ,
பள்ளியில் கூடப்படித்தவராகவோ கூட
இருந்திருக்கலாம் அல்லவா ?
சரவணனுடைய உண்மையான அந்தஸ்து என்ன ?
அவரால் இந்த அளவு தொகை புரட்ட முடியாதா ?
ரத்தன் டாடாவிற்கும் அவருக்கும் உள்ள நெருக்கம்
எத்தகையது ?
அவரை நம்பி டாடா பவர் ஆப் அட்டர்னி
கொடுத்திருக்க மாட்டாரா ?
மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் ஷன்முகநாதன்
என்பவர் யார் ?
பணப் பட்டுவாடா எப்படி செய்யப்பட்டது ?
பத்திரம் எப்போது பதிவு செய்யப்பட்டது ?
சாட்சி கையொப்பம் இட்டவர்கள் யார் யார் ?
சரவணன் – வருமான வரி கட்டுபவரா ?
எத்தனை வருடங்களாக அவர் வரி கட்டுகிறார் ?
இந்த பத்திரங்களின் பிரதிகள் எதாவது
சிபிஐ வசம் கிட்டினவா –
என்பது போன்ற
விவரங்களையும் சிபிஐ யிடமிருந்தே
உறுதி செய்து கொண்ட பிறகு தானே
செய்தி தளம் தகவலை வெளியிட்டிருக்க வேண்டும் ?
அவசரப்பட்டு அறை குறையாக இப்படி
செய்தி வெளியிடுவது தவறு என்பதை
அந்த செய்தி நிறுவனம் உணர வேண்டாமா ?
ராஜாத்தி அம்மாளின் குறை நியாயமானதே –
அவர் வெறும் எச்சரிக்கையுடன் நின்று விடாமல்,
உடனடியாக மேற்படி செய்தி நிறுவனத்தின் மீது
அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும்.
அப்போது தான் அந்த நிறுவனத்தின்
உள்நோக்கம் வெளிவரும் !



அருமையான பதிவு கா.மை.
மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை, பொய் அதிகம் சொல்லப்பட்ட ஆண்டு கி.பி 2010 தான் என்ற புகழுடன், இந்த ஆண்டு இன்னும் பதினைந்து நாட்களில் நிறைவு பெறுகிறது.
ayyo ayyo orey kamadeythaan ponga
1) கண்பத் சொல்வது மிகச்சரி.
பொய்யர்களுக்கான ஆண்டாகி விட்டது 2010.
2 ) அதிகம் பொய் சொன்னவர்களுக்கான
பரிசை அளிப்பதாகத் தீர்மானித்தால் –
இவர்களில் யாருக்குக் கிடைக்கும் ?
3) உளவுத்துறையை தன் வசம் வைத்திருக்கும்
கலைஞருக்குத் தன் (இரண்டாவது ) வீட்டில் நடப்பது
தெரியாமலா இருந்திருக்கும் ?
– அல்லது – சுயமரியாதை குடும்பம் ஆயிற்றே –
பெண்களுக்கும் சம உரிமை
என்கிற விதத்தில் குடும்பத்தில் இவர்களுக்கும்
சம்பாதிக்க பிள்ளைகளுக்கு ஈடாக
சம வாய்ப்பு அளிக்கப்பட்டதோ ?
p