13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய
கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ?
கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?
இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில்
மட்டும் தான் பாட வேண்டும். இது வரை தமிழிலும்
பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று
கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான்.
“அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின்
உள்ளத்தை மேலும் புண் படுத்தாதீர்கள். தொடர்ந்து
தமிழிலும் தேசிய கீதம் பாட அனுமதியுங்கள்”
என்று இறைஞ்சுகிறார் கலைஞர்.
இதென்ன பைத்தியக்காரத்தனம்.
யாருக்கு வேண்டும் சிங்கள தேசிய கீதம் ?
சிரிலங்காவின் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று
இனியும் எந்த தமிழனாவது விரும்புவானா ?
யாருக்காக கேட்கிறார் இவர் ?
இவருக்கு உரைக்கவே உரைக்காதா ?
மனசாட்சியே இல்லையா ?
இந்த வார ஆனந்த விகடன் இதழில் வெளிவந்துள்ள
ஒரு கட்டுரையின் கீழ்க்கண்ட வாசகங்களைப்
பாருங்கள் – ரத்தம் கொதிக்கிறது இதைப் படித்ததும்.
—————————–
“இணைய தளத்தில் ஒரு தமிழ் இளைஞர்
நான்கு வரிகள் எழுதி இருக்கிறார்.”
“நான் குவைத்தில் இருக்கிறேன்.
சமீபத்தில் இலங்கை சென்று வந்த என்
தமிழ் நண்பன் என்னிடம்,
“என் ஊரில் 13,14 வயதுச் சிறுமிகள்
எல்லாருமே இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள்”
என்று அந்நாட்டின் நிலைமையைச் சொன்னதும்,
என் நெஞ்சம் பதறியது.
எனக்கு தமிழக,
இந்திய அரசுகள் மீது வெறுப்பு தான் வந்தது”
என்று எழுதி இருக்கிறார்.
———————————-
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது –
1971 ஆம் ஆண்டு மெட்ராஸ் ரெஜிமெண்டைச்
சேர்ந்த, தமிழ் வீரர்கள் தான்,
தங்கள் ராணுவ உடையைக் கழட்டி வைத்து விட்டு
லுங்கியைக் கட்டிக்கொண்டு
கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைந்து,
பாகிஸ்தான் ராணுவத்தோடு போரிட்டு
“வங்க தேசம்”
என்கிற ஒரு புதிய தேசம் பிறக்கவே காரணமாக
இருந்தார்கள்.
கடல் மட்டும் குறுக்கிடவில்லை என்றால் –
எவர் அனுமதியையும் எதிர்பாராமல்,
தமிழக இளைஞர்கள் என்றோ இலங்கைக்குள்
புகுந்திருப்பார்கள். சுதந்திர ஈழம் மலர
தங்கள் பங்கு பணியைச்
செய்திருப்பார்கள்.
மாவீரர்கள் நினைவுநாளின் போது –
பெரியவர் நெடுமாறன், வைகோ ஆகியோர்
சென்னை தியாகராய நகரில் விடுத்த
அழைப்பின்போது – திரண்டிருந்த இளைஞர்களிடம்
அந்த ஆவேசத்தை நான் நேரில் பார்த்தேன்.
ஈழத்தில் – ஈழ தேசிய கீதம் மட்டும்
ஒலித்தால் போதுமானது . அதற்கான அடிக்தளத்தை
கொலைகார ராஜபக்சேவே நாட்டியதாக இருக்கட்டும்.
இது ஒரு நல்ல முடிவிற்கான துவக்கமே.



நிஜமான சாமியாரா இல்லை ….