காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

காட்டிய கணக்கும் –
மக்கள்  காண விரும்பும்  கணக்கும் !

“கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு
இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால்
அளிக்கப்பட்டுள்ள  பட்டம் ) தன்னுடைய்
சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010)
விலாவாரியாக வெளியிட்டுள்ளார் !
(கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்)

சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை
என்று குறிப்பாகச்  சொல்கிறார் –

“அப்படியானால் வேறு எந்த
ஊரிலேயாவது வாங்கி இருக்கிறீர்களா” என்று
அநாவசியமாக  கேள்வி கேட்டு அவரைத் தொந்தரவு
செய்ய வேண்டாம்.
சொல்ல வேண்டும்
என்று நினைத்தால்
அவரே சொல்லி இருக்க மாட்டாரா ?

அவரது வங்கிக் கணக்கில் ரூபாய்
5 கோடியே
65 லட்சத்து
92 ஆயிரத்து
134 வைப்பு நிதி தவிர,

சேமிப்பு கணக்கில் சுமார்
ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86
மட்டும் தான் உள்ளது

என்று  அவரே முன்வந்து சொல்லி இருக்கிறார்.
பாவம் மிகவும்  ஏழை தான்.
இத்தனையூண்டு பணத்தை வைத்துக்கொண்டுள்ள
சாமான்யர் அவர் !

எப்போதுமே – அவர் கொடுத்தால் – கணக்கு –
சரியாகத்தான் இருக்கும்.

ஏற்கெனவே எம்ஜிஆர் கேட்டபோதே
கணக்கு கொடுத்து அவரைத் திணற
அடித்த அனுபவம் உள்ளவர் ஆயிற்றே !

சிறியவர் நமக்கு பெரியவர் அவர் கொடுத்துள்ள
கணக்கைப் பற்றி
ஒரே ஒரு கேள்வி – அவ்வளவு தான் !

அதென்ன –
சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில்
அளிக்கப்பட்ட பணத்தில் 10 கோடி ரூபாய்
கிடைத்தது – என்று மொட்டையாகச் சொல்லி
விட்டாரே !
சிறியோர் நமக்கு எப்படிப் புரியும் ?
சன் தொலைக்காட்சியில்  முதல் போட்டிருந்தாரா ?
எப்போது ?
எவ்வளவு ?
அவர்  போட்ட முதல் தானே
திரும்பக்கொடுக்கப்பட்டது  ? –

சிலர் அநாவசியமாக
மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட
பிறகு  மாறன் குடும்பத்துடன் ஏற்பட்ட மனவருத்தம்
நீங்குவதற்காக செய்யப்பட்ட செட்டில்மெண்ட் என்று
சொல்கிறார்களே –
“கண்கள் பனித்தன – இதயம் இனித்தது”
என்கிற வார்த்தை உருவானது அப்போது தானே !

இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லி
இருந்தால் காண  கண்கள் இருந்தும்,
யோசிக்க அறிவு இல்லாத  ஆசாமிகளுக்கு,
இந்த சந்தேகம் வர வாய்ப்பில்லாமல்
போயிருக்குமே.

ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை –
இப்போது கூட  விளக்கம் கொடுத்து விடலாம்.

அப்புறம் – ஒரு சின்ன விண்ணப்பம்.

இரண்டாவது அசோக சக்கரவர்த்தியின் சொத்தைப்பற்றி
தெரிந்து கொள்வதை விட – அவர் மனைவிகள்,
மக்கள், பேரன், பேத்திகள் ஆகியோர்
சொத்து விவரங்களை அறிவதற்கு தான்
இந்த பாழாய்ப்போன தமிழ் மக்கள்
ஆசைப்படுகிறார்கள்.

“இவ்ளோ செஞ்சோம் – இதை செஞ்சுட
மாட்டோமா ” என்று விஜய் ஸ்டைலில்
இதையும்  நிறைவேற்றி
வைத்தால் நன்றாக இருக்கும்.

கடைசி கடைசியாக ஒரு சின்ன சந்தேகம்.

அது என்ன புதியதாக ஒரு சொல் பிரயோகம்-
“திராவிடத் தமிழர்” ?
இதுவரை  இந்த இடத்திலிருந்து இப்படி
ஒரு சொல் பிரயோகத்தைக் கேட்டதே இல்லையே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

  1. SAM's avatar SAM சொல்கிறார்:

    Yappa Saami !!! Pothum ya !!! Manam Niraivaki vittathu.

  2. SAM's avatar SAM சொல்கிறார்:

    அது என்ன புதியதாக ஒரு சொல் பிரயோகம்-
    “திராவிடத் தமிழர்” ?

    ANS:- Vijayakanth (Telugu Kavarai Naidu) Avarkalukaaga Than.

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    பின்னிட்டீங்க காவிரி மைந்தன்.
    ரொம்ப ரசிச்சேன்

    அசோகர்,வீரமணி,ராமதாசு=திராவிட தமிழ் தமிழர்
    ஜெயா=ஆரிய கன்னட தமிழர்
    விஜயகாந்த்=திராவிட தெலுகு தமிழர்
    ரஜினிகாந்த்=திராவிட கன்னட தமிழர்
    கமல்=ஆரிய தமிழ் தமிழர்
    நமீதா=ஹிஹி ..

  4. Venkateswaran's avatar Venkateswaran சொல்கிறார்:

    கண்பத்
    Hats off!
    மிக சிறப்பான தமிழன் விளக்கம்.
    சரி, அசோகர் என்றாலே சாலையின் இருமருங்குகளில் மரங்களை நட்டா‌ர் என்பது தானே புத்தகம் எடுத்து படித்த அனைத்து சிறார்களூக்கும் தெரிந்தது?
    2வது அசோகர் என்றால் முதல்வர் நட்டதை வெட்டி விற்றவரா?

  5. Skumar's avatar Skumar சொல்கிறார்:

    illai, eru manaivikalukkum (both sides) samamaga sotthuu serthavar, athan 2m asokar.

  6. elan's avatar elan சொல்கிறார்:

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் இந்த நாட்டிலே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.