நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும்
பேசியதை வெளியிட்டது தவறா ?
ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன்
பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது
பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி
ஒன்றில் கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி
மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும்
கூறி இருக்கிறார்.
இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும்
அந்த ஒலிப்பதிவில் என்ன இருக்கிறது ?
அவர்கள் அப்படி எதைப்பற்றி பேசி இருக்கிறார்கள் ?
———————————-
ஏர் இந்தியாவின் ஆலோசனைக்குழுவிற்கு
ரத்தன் டாட்டாவை தலைவராகப் போட
நீரா முயற்சி செய்வதைப்பற்றி –
விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்
பிரபுல் படேலிடம் இதைப்பற்றிக் கூறி
மேற்கொண்டு ஆவன செய்வதைப்பற்றி –
அனில் அம்பானி முதல் போடாமல்
லாபம் சம்பாதிப்பது பற்றி –
ராஜா கனிமொழி இருவரும் வழிவதைப் பற்றி –
ராஜா ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எப்படி
சிவாவை (ஷிவ் நாடார் ?) ஏமாற்றப் போகிறார்
என்பதைப் பற்றி –
——————————————-
– இவ்வளவு தான் வெளி வந்திருக்கிறது !
பெரிய இடங்களில் என்ன நடக்கிறது,
அவர்கள் தங்களுக்குள் காரியங்களை
எப்படி நடத்திக்கொள்கிறார்கள்,
இதற்காக அவர்கள் என்னென்ன வழிகளைப்
பின் பற்றுகிறார்கள் –
இந்த பெரிய மனிதர்களின் அந்தரங்கம்
எப்படி இருக்கிறது –
என்பதைப் பற்றி எல்லாம்
சிறிது – சிறிதே சிறிது –
கோடிட்டு காட்டுகிறது இந்த உரையாடல் நாடா.
ரத்தன் டாட்டா தாராளமாக நீதிமன்றத்திற்கு
போகட்டும். நீதி கேட்டு போராடட்டும்.
தடை உத்திரவும் பெறட்டும்.
ஆனால் – அதற்கு முன்னர்
இந்த பதிவுகளை வெளியிட்டவர்,
வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்,
யாராக இருந்தாலும் சரி -நாம் அவருக்கு
முழு மனதுடன்
நன்றி கூறுவோம் !
இத்தகைய பணி தொடர்ந்து நடக்க வாழ்த்துவோம் !




சிவாவை (ஷிவ் நாடார் ?) –Shiva is shivasankaran of sterling group -( aircel founder)
நச்சென்று உள்ளது ஒவ்வொரு வார்த்தைகளும்.பாராட்டுக்கள்.
அரவரசன்.
உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
நன்றி அரவரசன் –
– காவிரிமைந்தன்