ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !

ஸ்பெக்ட்ரம் ஊழல்  பணத்தில் வாங்கிய
சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !


இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை
எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில்
வாங்கிய  அசையும் மற்றும் அசையா சொத்துக்களை
முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு !

இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும்
மற்றும்
சேர்க்க முயன்று கொண்டிருக்கும்
சொத்துக்களைப்  பற்றிய பட்டியல் ஒன்றினை
இன்று  வெளியிட்டிருக்கிறது  ஜூனியர் விகடன் –

அதிலிருந்து  சுருக்கமாக –

1)லண்டன் அருகே ஹன்ஸ்ப்ரேர் என்கிற  தீவு  –
பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ளது.

2)மலேசியாவில் பிஸியான ஜே.பி. ஏரியா
அருகே சுமார் 600 ஏக்கர் அளவிற்கு  மூங்கில்
எஸ்டேட்.

3) சென்னை ஒட்டேரி அருகே பல மாடி
பில்டிங் ஒன்று. ( கட்டப்பட்டு வருகிறது )

4) பழைய மகாபலிபுரம் சாலையில் பல மாடி
அபார்ட்மெண்ட் ஒன்று.(கட்டப்பட்டு வருகிறது )

5) சென்னைக்கு வெளியே சிறு நகரம் ஒன்றில்
பெரிய மாளிகை ஒன்று.(கட்டப்பட்டு வருகிறது)

6) திருச்சி மாவட்டத்தில் ஒரு பிரபலமான
கல்லூரி பல நூறு கோடி ரூபாய் விலையில்
(ரெடிமேட் )ஏற்கெனவே
விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

சிபிஐ  வசம் இந்த தகவல்கள்  ஏற்கெனவே
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  இதற்கு மேல்
கைது செய்வது,  வழக்கு தொடுப்பது,
நடவடிக்கை எடுப்பது போன்றவை –
ஆளும் கட்சியின்,(மத்திய அரசின் )
விருப்பத்தைப்  பொறுத்தே  இருக்கும்.

பி.கு. இதை எழுதி முடித்த நேரத்தில்
செய்தி வந்து கொண்டிருக்கிறது.எனவே
மீண்டும் தொடர்கிறேன் –

இதில் தொடர்புடைய  சில ‘பெரிய’ இடங்கள் –

கலைஞரின் உயிர் காக்கும் மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்தின் உரிமையாளர்கள்,
(ஸ்டார்  க்ரூப், துபாய் )

அனில் அம்பானி ( தம்பி )

இன்னும் பல பெயர்கள்  தொடரலாம் !

இப்போது கூட – மக்கள் உயிர்ப்புடன் செயல் பட்டால்
நிறைய  செய்யலாம். செய்ய வைக்க வேண்டும் –

பதவியிலுள்ள ( அதிகாரமுள்ள )
உச்ச நீதி மன்ற நீதிபதியை கொண்டு ஒரு
விரைவு நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

தொடர்புடையவர்களின்  சொத்துக்கள்
(முக்கியமாக பாஸ்போர்ட் ) முடக்கப்பட வேண்டும்.

வழங்கப்பட்ட  லைசென்சுகள்
உடனடியாக  ரத்து செய்யப்பட்டு – மீண்டும் புதிதாக
ஏலம் விடப்பட வேண்டும்.

இந்த ஊழல் அரக்கர்களைக் காக்க முயற்சிக்கும்,
வக்காலத்து  வாங்கும் அரசியல்வாதிகளை –
மக்கள் நன்கு  “கவனித்து” – “ஆவன”
செய்ய வேண்டும்.

செய்வார்களா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் வாங்கிய சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !

  1. vignaani's avatar vignaani சொல்கிறார்:

    thank you.
    Kindly provide the website(s) where this subject is covered.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      வணக்கம் நண்பர்களே,
      வருகைக்கு நன்றி.

      சொத்துக்கள் பட்டியல்
      குறித்த செய்திகள்
      இந்த வார ஜூனியர் விகடன்
      இதழில் வெளிவந்துள்ளன.
      (வலைத்தளத்தில் கிடைக்காது )

      மீதி பணம் எங்கே என்று நண்பர்
      கேட்டுள்ளார்.
      இந்திய மக்கள் அனைவரும்
      அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறார்கள் !

      பொதுவாக ராஜாவின் பணம்
      ராணியின் பார்வையில் தானே இருக்கும் ?

      ராணியை விசாரித்தால் தெரியலாம்.

  2. vetriselvan's avatar vetriselvan சொல்கிறார்:

    meedhi panalam enga!

  3. seeniinn's avatar seeniinn சொல்கிறார்:

    Leave alone scam.The way Soni,the congress and the Kalagnar’s Group behaved to Give support in all possible ways to end the ethnic war in Srilanka at the thousands of cost civilian lives is highly unpardonable.it is believed from one of the Interviews of Dr Subrahmaniam Swamy that Sonis’s father is an acompaniment of Hitler,who got himself released after debacle.So one might understand the inner nature of Sonia gandhi.Nothing sane or noble could be expected from hetr.It is still puzzling as to why this lady went to Jail to meet NaliniThe meeting was said to have happened against the rules of jail.Nobody is ever prepared to talk on this,including the so called neutral and the press at large.Why is not the international amnesty /any other community really interested against crimes by States not acting fast on this.all the nations in the world got benefitted by Srilankan Tamils.But Here and there ,there might be possibilities of the widespread community taking the route of unethical means.But tht should not undermine that communitiy’s contribution to the world.

  4. M.Purusoth's avatar M.Purusoth சொல்கிறார்:

    ipadiye Ponal Nadu Velankidum……………!
    Valga Jananayagam…………..!

  5. இளங்குமரன்'s avatar இளங்குமரன் சொல்கிறார்:

    ம்… இதுதான் நம் தலையெழுத்து என்று உட்கார்ந்து விடாமல் மக்கள் களத்தில் இறங்க வேண்டும்.

  6. muthu's avatar muthu சொல்கிறார்:

    kandupidikka mudiyu anal mudiyathu.

  7. karthick's avatar karthick சொல்கிறார்:

    enaku oru 70,000 kudutha honda unicorn vangippan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.