சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம்
நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே
அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்
கீழே இருப்பது எதிர்க்கட்சித்தலைவர்
ஜெயலலிதாவின் அறிக்கை –

“பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும்
பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை
பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து
கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும்
மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல்
கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்;
கோவையில் இளம் பிஞ்சுகள் இறந்ததற்குக்
காரணமான கொடூரர்களை விரைந்து தண்டிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும்
முதல்வர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில்
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
———————
இது முதல் அமைச்சர்ன் பதில் அறிக்கை –

தமிழகத்தில் குறைந்த அளவிலேயே குற்றச்செயல்கள்
நடைபெறுகின்றன:ஜெ.வுக்கு கலைஞர் பதில்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது
என்று ஜெயலலிதாவின் கருத்துக்கு முதல்வர்
கருணாநிதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர், ‘’தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக
பராமரிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு
சீர்குலைந்துள்ளதாக ஜெயலலிதா பொய்ப்பிரச்சாரம்
செய்கிறார்.
அதிமுக ஆட்சியில்தான் அதிகமாக குற்றச்செயல்கள்
நடந்தன. பிற மாநிலத்தை விட தமிழகத்தில்
குறைந்த அளவிலேயே குற்றச்செயல்கள்
நடைபெறுகின்றன’’என்று தெரிவித்துள்ளார்.
—————————————–
பதிலுக்கு பதில் முதலமைச்சர் லாவணி கச்சேரி
நடத்துவதை மக்கள் ரசிக்கவில்லை என்பதை
அவர் உணர வேண்டும்.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள் – நடைமுறையில்
அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் – நடப்பது என்ன என்பது அவர்களுக்கு
நன்றாகவே தெரிகிறது.
சேலத்தில் உறவினரான கொலைக்குற்றவாளிக்கு
அமைச்சரின் பகிரங்க ஆதரவு.
ஈரோட்டில் கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள
NKKP ராஜாவுக்கு மீண்டும் பதவி.
கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு
ஆளும் கட்சி ஆதரவு கொடுத்தால் – காவல் துறை
எப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் ?
கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
என்கிற பய உணர்ச்சி (deterrance)
இல்லாவிடில் சமூதாயத்தில் குற்றவாளிகளுக்கு
குளிர் விட்டுப் போய் விடும். குற்றங்கள்
அதிகரிக்கவே செய்யும்.
முதல்வருக்கு இது தெரியாதா ?
அவர் கண்ணை எது மறைக்கிறது ?



//பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும்
பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை
பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து
கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும்
மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல்
கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்;
கோவையில் இளம் பிஞ்சுகள் இறந்ததற்குக்
காரணமான கொடூரர்களை விரைந்து தண்டிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும்
முதல்வர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில்
வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. //
கூடவே, பத்து ஆண்டுகளுக்கு முன் தர்மபுரியில் மூன்று கல்லூரி மாணவிகளை பஸ்ஸில் வைத்து உயிருடன் எரித்த என் மூன்று கட்சிக்காரர்களையும்
உடனடியாக தூக்கில் போடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழகத்தை 43 ஆண்டுகளாக பிடித்துள்ள இரண்டு சனியன்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க . இரண்டும், பெருந்தலைவர் சொன்னது போல,”ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் “