ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?
அதை அவ்வளவு சுலபமாகச்
சொல்லி விட மாட்டேன்.
இந்த இடுகையை முழுவதுமாகப்
படியுங்கள் – தெரியும் !
இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப்
பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை
சுமார் 11 லட்சம்.
இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக
நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை
ஆண்டுக்கு சுமார் 32,000 மட்டுமே.இந்த
நிதானத்தில் இருந்தால் இவர்கள் எல்லாரும்
பார்வை பெறுவது என்று ?
கண் தானம் செயவது அப்படி என்ன பெரிய காரியமா?
அப்படி ஒன்றுமில்லை. நமக்கு பயன்படாததைத் தான்
பிறருக்கு கொடுக்கப் போகிறோம் – இதில் என்ன கஷ்டம் ?
மண்ணுக்கு கொடுப்பதையோ,
நெருப்புக்கு கொடுப்பதையோ
பார்வை இல்லாத பாவப்பட்ட மனிதருக்குக்
கொடுத்தால் தான் என்ன ?
சில தகவல்கள் –
ஒருவர் தானம் செய்தால் –
இருவருக்கு பார்வை கிடைக்கும்.
ஒரு வயதுக்கு மேற்பட்டவர் –
எவ்வளவு வயதானவராக
இருந்தாலும் கொடுக்கலாம்.
கண்ணாடி அணிந்தவராக இருந்தாலும்,
காடராக்ட் செய்து கொண்டவராக இருந்தாலும்,
ரத்தக்கொதிப்பு உள்ளவராக இருந்தாலும்,
சர்க்கரை நோய் உள்ளவராக இருந்தாலும்,
கண்களைத்தவிர மற்ற இடங்களில் கேன்சர்
உள்ளவராக இருந்தாலும் கூட பரவாயில்லை.
தானம் கொடுக்க தகுதி உடையவர்களே !
இறந்து 6 மணி நேரத்துக்குள்ளாக கண்கள்
சேகரிக்கப்பட வேண்டும்.
இதற்கு ஆகும் நேரம் வெறும்
20 நிமிடங்கள் மட்டுமே !
இதை எங்கு வேண்டுமானாலும் டாக்டர்கள்
மிகச்சுலபமாக செய்து விட முடியும் – இதற்காக
உடலை மருத்துவ மனைக்கு
கொண்டு போக வேண்டிய அவசியமே இல்லை.
வீட்டிலோ, ஆம்புலன்சிலோ – ஏன்
இடுகாட்டிலேயே கூடவோ செய்யலாம்.
எந்தவித விகாரமும் தெரியாது. அந்த இடத்தில்
செயற்கை கண்கள் உடனடியாக வைக்கப்படும்.
இறந்தவர் கண்களை மூடி, அதன் மேல் ஈரப் பஞ்சை
வைத்து கண்களை ஈரமாக வைத்திருந்தால் நல்லது.
இறந்தவர் தானம் செய்ய எழுதிக்கொடுத்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை. நெருங்கிய உறவினர்
தகவல்/சம்மதம் கொடுத்தாலே போதுமானது.
அருகில் உள்ள கண் வங்கியிலோ அல்லது அரசு பொது
மருத்துவ மனையிலோ தகவல் கொடுக்கலாம்.
உடனே டாக்டர்கள் வருவார்கள். அகில இந்திய அளவில்
இலவச தொலைபேசி எண் – 1919 க்கு தொடர்பு
கொண்டாலும் ( 24 மணி நேரமும் வேலை செய்யும் )
தேவையான தகவல்கள் கிடைக்கும்.
இனிமேல் தலைப்புக்கு வரலாம்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் கண்தானம் செய்ய
எழுதிக் கொடுத்திருக்கின்றார்.
கார்னியாவைப் பொறுத்த வரையில் உலக அழகியாக
இருந்தாலும், உள்ளூர் அழகியாக இருந்தாலும் –
நீங்களாக இருந்தாலும் – நானாக இருந்தாலும்
ஒன்று தான்.
எழுதிக்கொடுப்பது கூட முக்கியமில்லை. இதைப்பற்றிய
விழிப்புணர்வை – செய்தியை பரப்புவது தான் முக்கியம்.
நாம் மனம் வைத்து முனைந்தால்- இரண்டே வருடங்களில்
காத்திருப்போர் பட்டியலே(waiting list)
இல்லாமல் செய்து விடலாம். சரி தானே நண்பர்களே !
செய்யலாமா ?
எப்போது, யாரிடமிருந்து இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டாலும்,
சம்பிரதாயமாகப் பேச வேண்டியதைப் பேசிய பின்னால்
தொடர்ச்சியாக, தவறாமல் கேட்க வேண்டிய கேள்வியாக
இதை வைத்துக்கொள்வோமே –
“கண் வங்கிக்கு தகவல் கொடுத்து விட்டீர்களா ?”




Hi, i have read your post by accident. Thank you for clearing certain doubts in eye donation. i like to donate. But i have defect (-0.5 Diopter power) But now i am happy to know that even i can donate. Thank You.
நல்ல பதிவு; ஒரு நல்ல மனிதரிடம் இருந்து.நன்றி காவிரிமைந்தன்.
இன்று நம் கப்பலோட்டிய தமிழன்,செக்கிழுத்த செம்மல்,பூஜ்யஸ்ரீ ,அண்ணல்
வ.உ.சி. அவர்களின் 139 ஆவது பிறந்ததினம்.
“சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
இம்மண்ணில் அவர் மீண்டும் பிறந்து வர பிரார்த்தனை செய்வோம்
சாதாரணமாக திரைப்படங்களைப் பார்க்கும்போது
நான் உணர்ச்சி வசப்பட மாட்டேன்.
ஆனால் என்னை தியேட்டரிலேயே அழச்செய்தது
கப்பலோட்டிய தமிழன் திரைப்படம்.
எப்பேற்பட்ட தியாகிகள் பிறந்த, வாழ்ந்த நாடு
நம் நாடு.
ஆனால் இன்று …..?
அது கிடக்கட்டும்.
நினைவூட்டியதற்கு மிக்க
நன்றி கண்பத்.
கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு
வீர வணக்கம் செய்து அவரை, அவர்
தியாகங்களை நினைவு கூர்வோம் !