“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை
சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் !
இன்று மாலை (08/08/2010) சென்னையில் EVKS
இளங்கோவன் பேசியது –
“காமராஜர் பெயரைப் பயன்படுத்துவது எல்லா
கட்சிகளுக்கும் பேஷனாகிவிட்டது.
காமராஜர் ஒழுக்க சீலர்.
காமராஜரைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று
சொல்லாதீர்கள். லாலுவைப் போல் ஆட்சி செய்கிறோம் என்று
சொல்லுங்கள் சரியாக இருக்கும்.
காமராஜர் ஆட்சியை காங்கிரஸ்காரர்களால்
மட்டும்தான் தரமுடியும்.இதையெல்லாம்
நான் பேசக்கூடாது என்றால் சாமியாராகி இமயமலைக்குத்தான்
போக வேண்டும்.
மக்களுக்கு சில உண்மைகளை எடுத்துச் சொல்ல
வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆட்சியில்
நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது
சில விசயங்களை வைப்பதற்கு முன்பு
சூட்கேஸ்கள்தான் தேவைப்பட்டன. ஆனால்
இன்றைக்கு அரசியல்வாதிகள் சில விசயங்களை வைப்பதற்கு
குடோன்கள்
தேவைப்படுகின்றன என்று சொல்லக்கூடிய அளவிற்கு
வளர்ந்திருக்கிறீர்களே.
யாரால்? நாங்கள் போட்ட பிச்சைதானே.
எங்களுடைய ஆதரவினால்தானே முதல்வராக,
துணைமுதல்வராக வலம் வருகிறீர்கள்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் தாக்குகிறீர்கள்.
நாங்களும் பதிலுக்கு தனிப்பட்ட முறையில் தாக்க
ஆரம்பித்தால்…பாவம்..தாங்க மாட்டீர்கள்.
தொடர்ந்து இப்படி நீங்கள் பேசினால்,
கலைஞர் பற்றிய ரகசியங்களை வெளியிட வேண்டி வரும்.
87 வயது என்று சொன்னால் அதில்
77 வயது சரித்திரத்தை சொல்ல ஆரம்பித்தால் பல சங்கடங்கள்;
பல கஷ்டங்கள்.
————————————
வாழ்க இளங்கோவன். வளர்க அவரது
வெளிப்படையான பேச்சு !
இது தன்னையும் அறியாமல் இளங்கோவன்
தமிழருக்கு ஆற்றும் தொண்டு !




நிஜமான சாமியாரா இல்லை ….