கருணாநிதியின் உருவப்படத்தை சட்டமன்றத்திற்குள்
வைக்க வேண்டுமெனற தீர்மானத்தை கலைஞரே
வரவேற்று பாராட்டினார் – வீரபாண்டி ஆறுமுகம்
ஒப்புதல் வாக்குமூலம் –
இன்று (10/03/2010)நக்கீரன் செய்தியில்
வெளிவந்துள்ள செய்தியிலிருந்து –
——————————-
இதுகுறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கருணாநிதியின் உருவப்படத்தினை சட்டமன்றத்திற்குள்
வைக்க வேண்டுமென்ற தீர்மானத்தை அமைச்சரவையிலே
முன்மொழிந்தவன் நான் தான்.
நான் முன்மொழிந்த பிறகு அமைச்சரவையிலே உள்ள
அனைவரும் ஒருமனதாக அதனை வரவேற்று,
அப்படியொரு தீர்மானத்தை நான் முன்மொழிந்ததற்காக
பாராட்டும் தெரிவித்தார்கள்.
———————
முன்பெல்லாம் திமுக அமைச்சர்கள் மிகவும்
புத்திசாலித்தனமாகவும்,
கவர்ச்சிகரமாகவும் பேசுவார்கள்.
எல்லாருக்கும் வயதாகி விட்டது ! யோசிக்காமல்
பேசிவிட்டு ஏடாகூடமாக மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விஷயத்தில் மந்திரி மாட்டிக்கொண்டாரா இல்லை
போட்டுக்கொடுத்தாரா என்பது சந்தேகமாகவே
இருக்கிறது !
அமைச்சரவை என்பது முதல் அமைச்சரையும்
உள்ளடக்கியது. எனவே –
அனைவரும் ஒருமனதாக வரவேற்று அப்படியொரு
தீர்மானத்தை முன்மொழிந்ததற்காகப் பாராட்டினார்கள்
என்றால் அது முதலமைச்சரையும் சேர்த்து என்றாகி
விடுகிறதே!
தன் படத்தை வைப்பதை கலைஞரே
வரவேற்றுப் பாராட்டினார் என்றல்லவா அர்த்தம்
வருகிறது.
மதி (?) மந்திரி இதை யோசிக்காமலா
இருந்திருப்பார் ?
ஒருவேளை இப்படியும் இருக்கலாமோ –
அமைச்சர் அப்படி எல்லாம் முன்யோசனை இல்லாமல்
பேசக்கூடியவர் அல்ல யோசித்து தான் அறிக்கை
விட்டார் என்றால் –
ஒரே கல்லிலே இரண்டு மாங்காய் !
கலைஞரை பாராட்டிய மாதிரியும் ஆயிற்று –
போட்டுக் கொடுத்தது
மாதிரியும் ஆயிற்று – என்று நினைத்து
சொல்லி இருப்பாரோ ?
இருக்கலாம் – வீரபாண்டியார் ஆயிற்றே !



ஒருவரைப்பற்றி முன் மொழிந்த பிறகு, அவர் பின் மொழிவாரா
மற்றவர்கள்தான் மொழிந்ததாகக் கொள்ள வேண்டும். இது என்ன ஒரு சின்ன கேள்வி. அரவம் அத்வானம் என்று சொல்வதுஇதுதான்.