காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!!

………………………………..

………………………………

தணிக்கை அதிகாரியாக இருந்த சாஸ்திரி என்பவர் கண்ணதாசனுக்குப் போன் போட்டு சொன்னாராம் … ” இந்தப் பாட்டோடு பொருளைக் கேட்டால் கத்திரிக்கணும்போல தோணுது. ஆனால் நீங்க சொல்லியிருக்கும் விதத்தைப் பார்த்தால் கத்திரிக்க முடியல. எங்களையே அசர வைக்குது….” என்று.

பாசமலர்…..திரைப்படம்.

இதில் வரும் பாடல் தான் இது. பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்தப் பாடலில் மணமகளுக்கு அறிவுரை சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும். சிவாஜியின் தங்கை சாவித்திரி தான் மணமகள். இந்தப் பாடலுக்கு தலைமை தோழியாக வருபவர் சுகுமாரி. இவர் தான் படத்தில் பாடுவதாக அமைக்கப்பட்டு இருக்கும். கருவறை தொடங்கி கல்லறை வரை நம் வாழ்க்கையோடு ஒன்றாக வருவது கவியரசர் கண்ணதாசனின் பாடல்கள் தான்.

முதல் இரவுக்கு முன்பு – ஒரு தோழியின் குறும்பு கலந்த குரலில் எல்.ஆர்.ஈஸ்வரி வெகு அழகாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலைப் பார்க்கும்போது நாமே திருமண வீட்டிற்குள் இருந்தது போன்ற ஒரு உணர்வைத் தரும். பெண்ணை அழைக்கும் போது எல்லோரது திருமண வீட்டிலும் இந்தப் பாடல் நிச்சயமாக ஒலிக்கும். அதுதான் வாராய் என் தோழி வாராயோ… என்ற பாடல்.

பாடலுக்கு இடையே புரோகிதர் மந்திரங்களை உச்சரிப்பது அருமை. படத்தில் மணமகனாக வருபவர் ஜெமினிகணேசன். இந்தப் பாடலுக்கு இசைக்கோர்வையைச் செய்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடலில் நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு முத்தாய்ப்பு.

…………….

மணக்கோலம் கொண்ட மகளே… புதுமாக்கோலம் போடும் மயிலே… குலக்கோலம் கொண்ட கனியே

நம் குலம் வாழப் பாடு மயிலே… சிரிக்காத வாயும் சிரிக்காதோ… திருநாளைக் கண்டு மகிழாதோ…

………….

என அழகான வரிகளைப் போட்டுள்ளார் கவியரசர். இந்தப்பாடலுக்கு இடையே தோழிகள் நையாண்டி பண்ணி சிரிக்கும் விதம் அருமையாக இருக்கும்.

திருமணத்திற்கு அழைக்கும்போது மணமகளுக்கு எதைச் சொல்ல வேண்டுமோ அதைக் குறும்பாகத் தோழிகள் சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கும்.

இது காலம் கடந்து இன்றும் நினைவில் நிற்கும் பாடல்.

கொஞ்சம் கொஞ்சமாக பாடல் தாம்பத்தியத்திற்குள் போகும். அப்போது –

…………………….

எழிலான கூந்தல் கலையாதோ, இதமான இன்பம் வளராதோ என அருமையாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

…………………..

கடைசி வரிகள் –

……………………..

மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும்.

மயங்காத கண்கள் மயங்கும். முன்பு விளங்காத கேள்வி விளங்கும்.

இரவோடு நெஞ்சம் உருகாதோ, இரண்டோடு மூன்றும் வளராதோ…

……………………………………….

இப்போது பாடலைப் பாருங்கள் – கேளுங்கள்….. அதன் அருமை புரியும்…

………………………………………………………….

கண்ணதாசனுக்கு ஏது மறைவு ,,,??? இறவாப்புகழ் உடையவர் அவர்…. ….!!!

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக