ஒரு ஜென் கதை ….!!!

……………………………..

…………………………………………………………………………………………

வாழ்க்கையில் பல சோதனைகளை அடைந்த ஒரு தொழிலதிபர் தான் மதிக்கும் ஆன்மீக குருவிடம் சென்று தன் நிலையை புலம்ப ஆரம்பித்தான்.

தொழிலதிபர்: குருவே என் வாழ்க்கையில எல்லாம் முடிஞ்சு போச்சு

எல்லாமே முடிஞ்சு போச்சு.

எதுவும் சரியில்ல

மனைவி சரியில்ல

பிள்ளைங்க சரியில்ல

தொழிலில் தோல்வி

வீதியில் நான் நடந்து போகும் போது யாரும் மரியாதை கொடுப்பதில்லை

நான் இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது குருவே ….???

குரு சொன்னார் : ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே நான் உனக்கொரு மருந்து கொடுக்கிறேன்.

குரு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அதில் 4 ஸ்பூன் உப்பை அள்ளி போட்டு அதை தொழிலதிபரிடம் கொடுத்து குடிக்க சொல்ல .அதை குடித்த தொழிலதிபருக்கு குமட்டல் ஏற்பட்டு அந்த தண்ணீரை கீழே துப்பினார்

தொழிலதிபர்: இவ்வளோ உப்பு போட்டு எப்படி குருவே குடிக்க முடியும். எனக்கு குமட்டுகிறது

குரு: ஓ அப்படியா… சரி என்னோடு வா….

அருகில் ஒரு குளத்திற்கு கூட்டி சென்று குரு அந்த குளத்தில் 4 ஸ்பூன் உப்பை போட்டு பின் தண்ணீரை குடிக்க சொல்கிறார்.

குரு: எப்படி இருக்கு தண்ணீர்?

தொழிலதிபர்: நல்லா இருக்கு குருவே….!!!

குரு : இனிப்பா இருக்கா?

தொழிலதிபர்: ஆமா இனிப்பா இருக்கு…

குரு: அதெப்படி இனிப்பா இருக்கும்? அதே 4 கரண்டி உப்பை தானே இதுலயும் போட்டேன் அப்புறம் எப்படி இனிக்கும்… ???

தொழிலதிபர்: என்ன குருவே விளையாட்டு ….???

அது சின்ன குவளை அதனால் குமட்டியது.

இது பெரிய குளம் குருவே அதனால் குமட்டவில்லை.

குரு: உன் மனதை ஏன் குவளையாக வைத்திருக்கிறாய் ?

குளம் போல் வைத்துக்கொள்ளேன்….

வருகின்ற கவலை என்ற உப்பு கரைந்து விட்டாலும்,

இனிமை மாறாத குளமாக உன் மனமிருந்தால் –

ஏன் உனக்கு குமட்டல் வரும்…?

…………….

அப்படி இருந்தால் தான் அது வாழ்க்கை

இதைத் தான் இன்னும் தெளிவாக கவியரசு கண்ணதாசன் தனது மந்திர வரிகளால் எடுத்துரைத்திருப்பார்.

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும் –

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை”

………………….

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக