ஜூவி சொல்லும் – இதுவரை வெளிவராத சில தகவல்கள் ….கரூர் சம்பவம், விஜய் சம்மன் …

…………………………………………..

………………………………………………

கரூர் துயரச் சம்பவத்துக்கு முன்னதாகவே, காவல்துறை அதிகாரிகள் சிலருக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் இடையே சில பரிமாற்றங்கள் ….

கரூர் சம்பவம் -விஜய்யிடம் சிபியை-யால் கேட்கப்பட இருப்பவை …

……………………..

ஏற்கெனவே, ‘ஜனநாயகன்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படாத விவகாரத்தில், த.வெ.க மல்லுக்கட்டிவருகிறது.

இப்போது சி.பி.ஐ சம்மனும் இன்னொரு நெருக்கடியாக விஜய்க்கு சேர்ந்திருக்கிறது.

விஜய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் சம்மன் குறித்து,
சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பிரசாரப் பயணத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்பதாலும், அவருடைய உத்தரவில்தான் அந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதாலும் விஜய்க்கு சாட்சி சம்மன் அனுப்பியிருக்கிறோம்.

அவரிடம் கேட்பதற்கு 48 கேள்விகள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன….

‘சம்பவ இடத்தில்தான் கூட்டம்
நடத்த வேண்டும் எனக் காவல்துறையினர் கட்டாயப்படுத்தினார்களா… ??

அன்றைய தினம் மாலை 6 மணிக்குப் பிறகு காவல்துறையிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா… ??

‘கூட்டத்துக்கு வராதீர்கள்’ என்று கட்டுப்பாடு விதித்தார்களா..??

சம்பவ இடத்துக்கு வந்தவுடன், காவல்துறைக்கு நன்றி தெரிவித்தீர்களே ஏன்… ??

நீங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எத்தனை ஆம்புலன்ஸ் வேன்கள் உங்களைத் தாண்டிச் சென்றன…?? ’

என்கிற ரீதியில் அந்தக் கேள்விகளை வகைப்படுத்தியிருக்கிறோம்.

சாட்சி சம்மன் என்பதால்,

முதல் சம்மனுக்கே அவர் ஆஜராக வேண்டும் என்று கட்டாயமில்லை. இரண்டு சம்மன்கள்
வரையில் அவர் அவகாசம் கேட்கலாம். ஆனால், மூன்றாவது சம்மனுக்கு நேரில் ஆஜராகித்தான் தீர வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க,

கரூர் துயரச் சம்பவத்துக்கு முன்னதாக காவல்துறை அதிகாரிகள் சிலருக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் இடையே சில பரிமாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றார்கள்.

‘ஜனநாயகன்’ பட சர்ச்சை, கட்சி – கூட்டணிக் குழப்பங்கள் என்று பல்வேறு இடர்ப்பாடுகள் இருப்பதால், சாட்சி சம்மனுக்கு ஆஜராவதில் அவகாசம் கேட்கலாம் என்றாலும்,

வரும் ஜனவரி 12-ம் தேதி சி.பி.ஐ முன்பாக ஆஜராவதற்கு ரெடியாகிறாராம் விஜய்.

“நாம என்ன தப்பு செஞ்சோம்… ஏன் அவகாசம் கேட்கணும்?” என்று அவர் திடமாகவே இருப்பதாகச் சொல்கின்றன த.வெ.க வட்டாரங்கள்.

அதேசமயம், `விசாரணை’ என்கிற பெயரில் விஜய்யைக் குடைந்தெடுக்கவும் டெல்லி உத்தரவு போட்டிருப்பதாகத் தெரிகிறது.

“காங்கிரஸுக்கு 20 சீட்டுகள் அளிக்கும் தி.மு.க-வையே உண்டு, இல்லையென உருட்டுகிறது டெல்லி.

70 சீட்டுகள் வரை அளிக்கத் தயாராகும் விஜய்யை விட்டுவைப்பார்களா..?” என்கிறார்கள் பா.ஜ.க சீனியர் நிர்வாகிகளே…..!!!

சி.பி.ஐ-யிடம் விஜய் என்ன பேசப்போகிறார், அதனுடைய எதிர்வினை தமிழக அரசியலில் எப்படியெல்லாம் ஒலிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான்
பார்க்க வேண்டும்….( நன்றி -ஜூனியர் விகடன் … )

……………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக