………………………………………………………..

………………………………………………………………………………………………………..
கார்ல் மார்க்ஸிற்கு, நண்பர் எங்கெல்ஸ் – ‘ என் மனைவி இறந்து விட்டார்’ என தந்தி அடித்தார்.
அதைப் பெற்ற காரல் ‘ஆழ்ந்த வருத்தங்கள் …’ என்று எழுதி விட்டு,
‘அவசரத் தேவை 50 ரூபிள் பணம் அனுப்பவும் ‘ என பதில் போட்டார். எங்கெல்ஸிற்கு கடும் கோபம்.
உடனே பதிலோ, ரூபிளோ அனுப்பவில்லை. திரும்ப காரலிடம் ரூபிள் கோரிக்கை.
வெகுண்டார் ஏங்கெல்ஸ் ,,,,,,,,,,,
“என் மனைவி உன் மீது – உன் அறிவாற்றலின் மீது
என்னை விட அதிகமாய் உயிரையே வைத்திருந்தாள். நான் அவள் மரணச் செய்தி அனுப்புகிறேன். அதற்கு ஒற்றை வார்த்தை மட்டும் வருத்தங்கள் என எழுதி விட்டு, ரூபிள் கேட்டு எழுதுகிறாயே.
இவ்வளவுதான் என் மனைவி மீது வைத்திருந்த பாசம், அன்பு, பரிவா?
அவளை விடவும் உனக்கு 50 ரூபிள்தான் பெரிசா?”
ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டி அவர் எழுதின கடிதம் காரல் கைக்கு கிடைத்தது. அப்படியே கண்ணீர் உகுத்தார். அதைப் பார்த்து ஜென்னி பதை பதைத்தார்.
கடிதத்தை பிடுங்கி படித்தாள். எங்கெல்ஸை விடவும் ஆவேசம் கொண்டார். ‘இதற்கு பதில் நீ எழுத வேண்டாம் கார்ல். நான் பார்த்துக் கொள்கிறேன்’ எனச் சொல்லி தாளை எடுத்தார்.
…………..
அவர் எழுத்தில் அழுகை, வெம்பல், கண்ணீர், அடக்க முடியாத கண்ணீர் – கதறல், துயரம், துக்கம் எல்லாம் பீறிட்டது.
அதில் எந்த இடத்திலும் எங்கெல்ஸ் மனைவி பற்றி குறிப்பிடவில்லை. காரலும், ஜென்னியும், அவள் குழந்தைகளும் தந்தி வந்த அன்று இருந்த கோலத்தை மட்டுமே எழுதினார்.
அது எழுத்து அல்ல. ரத்தக் கண்ணீர் காவியம்.
அதைப் படித்த எங்கெல்ஸ் தவறுக்கு வருந்தி, துயரில் ஆழ்ந்து 50 ரூபிள்கள் அல்ல –
500 ரூபிள்களை அனுப்பினார்.
அதை மாதந்தோறும் ஜென்னி சாகும்போது வரை மட்டுமல்ல, அதற்குப் பிறகு நடைப் பிணமான மார்க்ஸ் மரணிக்கும் வரை –
தவறாது அனுப்பிக் கொண்டே இருந்தார்.
அப்படி எங்கெல்ஸிற்கு என்ன எழுதினார் ஜென்னி…???
அதைப் படித்த பின்புதான் உலகத்துப் பெண்களிலேயே தலைசிறந்த பெண்மணியாக நான் ஜென்னியை ஆழ்ந்து நேசிக்க – அன்பு செலுத்த – காதலிக்க – பாசம் காட்ட ஆரம்பித்தேன்.
அவரைப் பற்றி சிறு துணுக்கு கிடைத்தாலும் படித்து விட்டு சேகரிக்கவும் செய்கிறேன். அப்படி என்ன எழுதினார் ஜென்னி என்கிறீர்களா? நிறைய பதிவுகளில் நிறைய தடவை எழுதி விட்டேன்.
ஆயினும் இப்போதும் சொல்கிறேன்…….
“உங்கள் தந்தி வந்த போது எங்கள் நிலைமை என்ன தெரியுமா ஏங்கல்ஸ்….??? அதிலும் என் அன்புக் கணவன் கார்லின் துயரம் வார்த்தைகளில் அடங்காது.
அன்றைய தினம்தான் வீட்டுக்காரன் வாடகை தரவில்லை என்று எங்களை வெளியில் தள்ளியிருந்தான்.
அதற்கு முன்பே ஒரு கடன்காரன் வந்து எங்கள் பொருட்களில் விலையுள்ளதை எடுத்துச் சென்று விட்டான்.
அதில் முக்கியமாக காரலின் ஒரே ஒரு கோட்டும் அகப்பட்டுக் கொண்டது.
என் காரல் இரவு முழுக்க கொட்டும் பனியில் வெட வெடத்து விரைத்துப் போயிருந்தார்.
அதறகு முந்தின நாள் தான் என் மூன்று வயது மகன் ரத்த சோகையில் மரித்துப் போய் அவனின் உடல் அடக்கம் செய்தோம்.
எனது அடுத்த பிள்ளை -கைக்குழந்தை என் மார்பைக் கடித்துக் கடித்து பாலை சப்ப முயற்சித்துத் தோற்றுப் போயிருந்தது.
நானும் பிள்ளைகளும் சரியாக சாப்பிட்டு மூன்று நாட்கள் கடந்து விட்டது. அப்படியிருக்க மாரில் ஏது பால். ரத்தமாகக் கசிந்தது.
குழந்தை பசியில் துடிதுடித்து அழுதழுது விரைத்தான். என்ன செய்வேன் பாவி. என்னைக் கைப்பிடித்த காதலன் படும் வேதனைதான் என் துயரில் பெரும் துயராக இருந்தது.
அந்த நேரத்தில்தான் தங்கள் துணைவியார் இறந்த தந்தி காரலின் கைக்குக் கிடைத்தது.
அவரால் என்ன செய்ய முடியும்… ???
ஒரு பொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட அவர் உடலில் நீர்ச்சத்து இருந்திருக்காது.
அப்படியானவரிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் எங்கெல்ஸ்….??? வெற்றுத் தாள்கள் ரூபிள்களுக்கு ஆசைப்படுபவரா அவர். ………………எப்படிப்பட்ட மேதை…….???
உலகத்து வறுமையெல்லாம் ஒழிக்கத் துடித்திடும் சிந்தனையை –
ஓயாமல் உள்ளூர கசியச் செய்து இயங்கிக் கொண்டிருப்பவன்.
அவர் உன்னதம் உலகுக்குத்தான் தெரியவில்லை. உங்களுக்குமா புரியவில்லை எங்கல்ஸ்!” (உதவி – நவீன நாடோடி ….)
………………………………………………………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….