Indi …. Go …!!!

…………………………………………….

………………………………………….

இண்டிகோ விமானங்கள் வரலாறு காணாத வகையில் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களுக்கு கடும் சிரமங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

இதில் உண்மையான பிரச்சனை என்ன என்று யாருக்குமே சரிவரத் தெரியவில்லை. கிடைக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு பார்க்கையில் பிரச்சினைக்கான காரணங்கள் பல இருப்பதும், அதில் முக்கிய காரணம் எது என்பது யாருக்கும் புரியவில்லை என்பதுமே நிஜம்.

மாபெரும் சீரழிவு நடந்துகொண்டிருக்கிறது. இதன் பின்னணிகளை தெரிந்து கொள்ள கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் –

ஜெட் ஏர்வேய்ஸ், ஏர் சஹாரா , ஏர் இந்தியா என ஃபுல் சர்வீஸ் விமானங்கள் இருந்த காலத்தில் மலிவு விலை விமானம் ஏர் டெக்கன் உள்ளே வருகிறது.

பெரும் பரபரப்பு. விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை அது அதிகப்படுத்துகிறது. விமானப் போக்குவரத்தில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்துகிறது.

அப்போது ஏர் டெக்கான் டிக்கட்டிங் சிஸ்டத்துக்கு (சாஃப்ட்வேர் + ஆன்லைன் புக்கிங்) இண்டர் க்லொப் ஏவியேஷன் என்ற நிறுவனம் பொறுப்பெடுத்துக்கொள்கிறது. இந்த இண்டர் க்ளோப் நிறுவனம் ஏர் டெக்கனின் கஸ்டமர் டேட்டாக்களை திருடிக்கொள்கிறது.

அதன் பிறகு இந்த டிக்கட் விற்ற நிறுவனமே இண்டிகோ ஏர்லைன்ஸ் என விமானக் கம்பனி ஆரம்பிக்கிறது.

ஆரம்பிக்கும் போதே திருட்டிலும், சீட்டிங்கிலும் ஆரம்பித்த நிறுவனம் தான் இண்டிகோ… !!!

இண்டிகோ ஆரம்பித்து ஓடினாலும், ஏர் டெக்கன் டிக்கட் சேல்ஸ் இண்டிகோ வசமே உள்ளது.

ஏர் டெக்கன் ஓடும் அதே நேரத்தில் , அதே செக்டரில் இண்டிகோவை ஓட்டுவது, ஏர் டெக்கன் விலையை விட ரூ 100 மட்டும் குறைத்து வைப்பது , ஏர் டெக்கன் டிக்கட்டிங் சர்வரை அவ்வப்போது முடக்குவது என கூத்தடிக்க ஆரம்பித்ததால், ஏர் டெக்கனை காப்பாற்றும் பொருட்டு, அதை = கோபிநாத், விஜய் மல்லையாவிடம் விற்கிறார். விஜய் மல்லையா அதை ஒரு தீவில் இருந்து வாங்கித் தன் மகனுக்கு பிறந்த நாள் பரிசாகக் கொடுக்கிறார். தீபிகா படுகோனை கிரிக்கெட் மைதானத்தில் வைத்து லைவ் ஐபிஎல் போட்டியில் லிப் கிஸ் அடித்த சித்தார்த் மல்லையாதான் அந்த பையன்.

( அந்த போட்டோவுடன் ஒரு இடுகை முன்பொரு சமயம், இந்த தளத்தில் வெளி வந்ததை இன்றைய வாசக நண்பர்கள் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை…😊😊😊 )

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் ஏர் டெக்கன் இணைக்கப்படுகிறது. அந்தக் கால கட்டத்தில் மற்றும் அதன் பின்பான வருடங்களில் , ஜெட் ஏர்வேய்ஸ், ஜெட் லைட் , ஏர் சஹாரா, கிங் ஃபிஷர் , ஸபைஸ் ஜெட் , கோ ஏர், பாராமவுண்ட் ஏர்வேய்ஸ் , ஏர் பிகாஸஸ், ஏர் கார்னிவல், ட்ரூ ஜெட் , ஏர் ஏசியா என கலந்து கட்டி இருக்கின்றன.

அப்போது நிறைய விமான நிறுவனங்கள் இருந்ததால், போட்டி அதிகம். டிக்கட்டிங் ஆப்பில் போய்ப் பார்த்தால் ஒரு வழிதடத்துக்கு நான்கு ஆப்ஷன்களாவது இருக்கும்.

இதன் பின் ஏர் சஹாராவை ஜெட் ஏர்வேய்ஸ் வாங்கி இரண்டும் சேர்ந்து இழுத்து மூடப்படுகிறது. ஏர் டெக்கனை வாங்கிய கிங் ஃபிஷரும் ஊத்தி மூடப்படுகிறது. ஆக மொத்தம் நான்கு மிகப்பெரிய விமான நிறுவனங்கள் கோயிந்தா.

அடுத்து பேராமவுண்ட் ஏர்வேய்ஸ், கோ ஏர் , என மற்ற அனைத்தும் நட்டுக்கொள்கின்றன.

இவ்வளவு களேபரங்களுக்கு நடுவே இண்டிகோ மட்டும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ஏர் இந்தியா + ஏர் ஏசியா + விஸ்தாரா வை ஒருங்கிணைத்து, ஆனால் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் ஏர் இந்தியா தூங்கி வழிந்துகொண்டு இருக்கிறது.

ஸ்பைஸ் ஜெட் தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா என முக்கிக்கொண்டு கிடக்கிறது.

இப்போது இந்தியாவுக்குள் பயணம் செய்ய வேண்டும் எனில் ஒரே வாய்ப்பு இண்டிகோதான். ஏர் இந்தியா எல்லாம் போட்டியே இல்லை. ஸ்பைஸ் ஜெட் பாவம். மக்களும் பாவம் தான்.

140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் பறப்பதற்கு மக்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் , ஒரு மோனோபோலி ஏர்லைன்ஸ் மட்டுமே. அதுதான் இண்டிகோ. அதனால் தான் அது தன் ஆப்பரேஷனை நிறுத்தினாலோ, சொதப்பினாலோ ஒட்டு மொத்த இந்தியாவும் பாதிக்கப்படுகிறது.

இந்த விஷயத்தில் அரசின் கொள்கை எப்படி இருக்க வேண்டும்… ??? விமானத் துறையில் தொழில் போட்டியை ஊக்குவித்திருக்க வேண்டும். புதிய நிறுவனங்கள் உள்ளே நுழைவதற்கு ஆதரவளித்து இருக்க வேண்டும். அதன் மூலம் மக்களக்கு தரமான விமான சேவையை நியாயமான விலையில் வழங்க முயற்சியெடுத்திருக்க வேண்டும்.

இவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதை ஒழுங்காகக் கையாண்டு இருந்தால், விமானக் கட்டணம் குறைந்திருக்கும். அதிக விமானங்கள் நிற்க நேரமில்லாமல் பறந்துகொண்டிருக்கும்.

பெருமளவு மக்கள் சம்மந்தப்பட்ட இந்த பிரச்சனையில் யாராவது என்னமாவது செய்துகொள்ளட்டும், நாம ரூல்ஸை மட்டும் போட்டு போட்டு வரியை மட்டும் புடுங்குவோம் என்றா ஒரு அரசு செயல்படுவது…?

கேட்டால் ஏர் சேவா ஆப் போட்டோம், டிஜி யாத்ரா போட்டோம். உடான் கஃபேன்னு ஏர்போர்ட்ல கம்மி ரேட்டுக்கு டீக்கடை போட்டோம் என்றுதான் அரசிடம் சாதனை லிஸ்ட் படபடக்கிறது.

இதில் டிஜிசிஏ என ஒரு மோடுமுட்டி இருக்கிறது. அதைப்போன்ற ஒரு மோடுமுட்டியை உலகெங்கிலும் காண முடியாது. கேப்டன் கோபிநாத் தன்னுடைய வானமே எல்லையில் டிஜிசிஏ வை கிழித்துத் தொங்க விட்டிருப்பார். சிவப்பு நாடா அபத்தத்தின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஒரு அமைப்புதான் டிஜிசிஏ.

விமானக் கம்பனிகளை எல்லாம் திருட்டு கும்பல் போலவே பார்ப்பது, புதிய விமான நிறுவனம் தொடங்க யாரேனும் வந்தால், தன் மனைவியையும் குழந்தைகளையும் வன்புணர்வு செய்ய வந்தவன் போலவே பார்த்து வெளக்குமாத்தால் அடித்துத் துரத்தி அடிப்பது என அவர்கள் தனி சொர்க்க லோகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எதுவானாலும் அறிக்கை கேட்பார்கள், 76 லட்சம், 2.45 கோடி என ஃபைன் அடிப்பார்கள்.

இப்படி சிவில் ஏவியேஷனில் எந்தக் கொள்கையும் இல்லாத ஒரு அரசு, தாந்தோன்றித்தனமான ஒரு சிவில் ஏவியேஷன் அமைப்பு என – இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அநாதைக் குழந்தையாக தவித்துக்கொண்டு இருக்கிறது.

பொதுவாக, நம் நாட்டில் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வை பெரும்பாலும் அவர்களே தீர்த்துக்கொள்வார்கள். தங்கள் பிரச்சனைகளுக்கான சொல்யூஷனை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். அரசையே நம்பிக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை , அனைத்துமே மத்திய அரசின் கைகளில் உள்ளது. மாநில அரசோ, பொது மக்களோ ஒரு துரும்பைக் கூட நகர்த்த முடியாது. ஆனால் அதிகாரத்தையும் பொறுப்பையும் கையில் வைத்திருக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தில் காது குடைந்துகொண்டு இருக்கிறது.

விமான கும்பினியில் 63 % ஷேர் வைத்திருக்கும், (கட்சிக்கு கணிசமாக டொணேஷன் கொடுக்கும் … ) முதலாளியை தொடக்கூட இல்லாமல் அப்படியே விட்டு விட்டு ) இண்டிகோ சிஇஓ-வை மட்டும் வேலையை விட்டு துரத்தி விட்டால் அனைத்துக்கும் தீர்வு ஆகி விடுமா… ?( கொஞ்சம் …அராத்து அவர்களிடமிருந்து …!!! )

………………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to Indi …. Go …!!!

  1. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான அரசியல் நிலைப்பாடு, அதே பயனுள்ள தன்மை என எழுதிக் கொண்டிருப்பது. இந்த விவகாரத்தில் என்ன ஏது எனத் தெரியாமல் இருந்தது. முழு விவரம் உங்களால் அறிந்தேன். நன்றியும் வாழ்த்துக்களும்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன்,

      இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்
      என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,
      வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி.

      முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்
      நான் இன்னமும் இருப்பதே எனக்கு வியப்பாக
      இருக்கிறது….

      இயங்கிக்கொண்டு இருக்கும்போதே,

      • சட்டென்று, உடன் இருப்பவர்களுக்கு எந்த வித
        தொல்லையும் கொடுக்காத வகையில் முடிவு
        வர வேண்டும் இறைவா என்று வேண்டிக்கொண்டே
        இன்னமும் எழுதிக்கொண்டு இருக்கிறேன்….

      உங்கள் பரிவுக்கும், வாழ்த்துகளுக்கும்
      மிக்க நன்றி.

      • உளம் நிறைந்த வாழ்த்துகளுடன்,

      காவிரிமைந்தன்

vimarisanam - kavirimainthan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி