…………………………….

……………………………

…………………………………

………………………………..
என்றாவது ஒரு நாள் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்தா சுவாமிகளின் கைலாசா நாடு பற்றி கூட இப்படி எதாவது செய்தி வரலாம்…..!!!
………………………………..
உலகில் நமக்குத் தெரியாத விஷயங்கள் பல உள்ளன.
அவற்றைப் பற்றி நாம் கேள்விப்படும் போது ஆச்சரியமாக இருக்கும்.
உலகின் மிகச் சிறிய நாடுகள் என்று வரும்போது, சான் மரினோ,
வாடிகன் சிட்டி போன்ற நாடுகளின் பெயர்கள் நமக்கு நினைவுக்கு
வரும். ஆனால் அவற்றையெல்லாம் விட மிகச் சிறியதாக
14 சதுர கிலோமீட்டரில் மட்டுமே ஒரு நாடு இருக்கிறது என்பதை
அறியும் யாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இந்த சிறிய
நாட்டின் பெயர் செபோர்கோ.
கடந்த 1000 ஆண்டுகளாக சுதந்திர நாடு என்ற அந்தஸ்து பெற்றுள்ளது
இந்த நாடு. இது சிறியதாக இருந்தாலும், இங்கு வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்று அர்த்தமில்லை. செபோர்கோ நாட்டுக்குள்
செல்வதற்கும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
இந்த நாடு சுதந்திரம் பெற்று 1000 ஆண்டுகளுக்கு முன்பு அதன் உரிமையாளரை இளவரசராக போப் அறிவித்தார். செபோர்கா
1719 ஆம் ஆண்டில் விலைக்கு விற்கப்பட்டது. 1800-ல் இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்ட போது, மக்கள் இந்த கிராமத்தை மறந்து
விட்டனர்.
1960 ஆம் ஆண்டில், செபோர்கா முடியாட்சி முறைப்படி இத்தாலிக்குள் வரவில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். ஆனால் செபோர்கோவின் இளவரசராக ஜார்ஜியோ-1 என்பவர் தன்னை அறிவித்துக் கொண்டார்.
அடுத்த 40 ஆண்டுகளில், அரசியலமைப்பு, நாணயம், முத்திரை மற்றும்
தேசிய விடுமுறை ஆகியவற்றை இவரே உருவாக்கினார்.
வெறும் 320 பேர் கொண்ட இந்த நாட்டில் இளவரசர் மார்செலோ
அடுத்த மன்னரானார். தற்போது, நினா என்பவர் செபோர்காவின் இளவரசியாக உள்ளார் . அவர் 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த
இளவரசி 297 பேரை ஆட்சி செய்கிறார்….
ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தான் இளவரசி ஆவேன்
என்று நினைத்துக் கூடப்பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். இங்கு
செபோர்கா லுய்ஜினோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. இது
ஆறு அமெரிக்க டாலர்களுக்கு சமம். அதாவது இந்திய மதிப்பில் ஒரு செபோர்கோ நாணயம் 499 ரூபாய்.
அழகான பழைய வீடுகள் மற்றும் உணவகங்கள் இங்கு இருப்பதால்
சில சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
செபோர்கா பற்றிய ஒரு அழகிய காணொளி கீழே –
.
……………………………………………….
மேலேயுள்ள செய்தி எந்த அளவுக்கு ஏற்கத்தக்கது என்று
தேடிப்பார்த்தேன்…..விக்கிபீடியா சொல்கிறது –
………………
Giorgio Carbone,claimed that Seborga had
existed as a sovereign state of Italy since 954,
and that from 1079 it was a principality of
the Holy Roman Empire. According to Carbone’s
claims, Seborga was not included in the 1861
Italian unification, and that it should be
recognised as a sovereign principality.
Supporters of the independence claim promote
the Principality with the trappings of a state, including the creation of a flag, minting of
coins, the formation of a “border guard” and the installation of sentry boxes on the unofficial
border crossing on the main road into Seborga.
An official Principato di Seborga website
asserts the historical arguments put forward
by Carbone.
The independence claims of a
“Principality of Seborga” have not been recognised internationally, and Seborga remains officially
part of Italy….!!!
…………………………………………………………………………………………………………………………….….



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…