மறக்க முடியாத ஸ்ரீதர் ….!!!

………………………………………..

……………………………………….

இயக்குனர் ஸ்ரீதர் உடல் நலமின்றி ஓய்வில் இருந்த நேரம் (1997).

வீடு தேடிப் போனார் ரஜினி.

“நல்லா இருக்கீங்களா ஸார் ?”

“நல்லா இருக்கேன். சொல்லுங்க ரஜினி.”

“அடுத்து ஒரு படம் பண்றேன்.”

“ரொம்ப சந்தோஷம் !”

“ ‘அருணாச்சலம்’ னு டைட்டில் வச்சிருக்கேன்.”

“ஓ… நல்லா இருக்கு. ”

“இந்தப் படத்தின் மூலமா, நம்ம சினிமா இண்டஸ்ட்ரில கஷ்டப்படற சிலருக்கு உதவலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்.”

“ஒரு எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன். அவங்க முதலீடு எதுவும் போட வேண்டாம். ஆனா இந்தப் படத்தில வர்ற லாபத்தில இருந்து, அந்த எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையை கொடுக்கலாம்னு இருக்கேன்.”

ரஜினி சொல்ல சொல்ல அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதர்.

ரஜினி தொடர்ந்தார் :

“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு…”

.

இடை மறித்தார் ஸ்ரீதர் : “இல்லை ரஜினி. எனக்கு இந்த உதவி தேவையில்லை. ஏன்னா நான் அவ்வளவு கஷ்டப்படலை. என்னை விட கஷ்டப்படற நிறைய பேர் இருக்காங்க. அதில் யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க.”

ஸ்ரீதரிடமிருந்து இந்தப் பதிலை கொஞ்சம் கூட ரஜினி எதிர்பார்க்கவில்லை !

.

மௌனமாக இருந்த ரஜினி எழுந்தார் : “அப்போ புறப்படறேன் ஸார்.”

“ஒரு நிமிஷம் ரஜினி.”

ஸ்ரீதரை திரும்பிப் பார்த்தார் ரஜினி.

ஸ்ரீதர் சொன்னார் : “உண்மையாகவே நீங்க எனக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சா, அடுத்து நீங்க நடிக்கும் ஏதாவது ஒரு படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கொடுங்க. அல்லது உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. அதற்கு வேலை செய்ய நான் தயாரா இருக்கேன்.

தப்பா எடுத்துக்காதீங்க ரஜினி.

இந்த அருணாச்சலம் பட உதவியை வேறு யாருக்காவது செய்யுங்க.”

பிரமித்துப் போனார் ரஜினி !

தனது உடல் நலன் ஒத்துழைக்காத நிலையிலும், உழைக்கத் துடித்த இயக்குனர் ஸ்ரீதரின் மன உறுதியைக் கண்டு நமக்கும் கூட

பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

தனது படங்களின் மூலமாக மட்டுமல்ல, தான் வாழ்ந்த வாழ்க்கையின் மூலமாகக் கூட நம்மைப் பிரமிக்க செய்தவர் – இயக்குனர் ஸ்ரீதர்.

….. ( நன்றி – ஜான் துரை ஆசிர் செல்லையா … )

…………………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to மறக்க முடியாத ஸ்ரீதர் ….!!!

  1. girianagai's avatar girianagai சொல்கிறார்:

    NOV 10 முதல் பதிவு இல்லை உடல் நலம் காரணமா அன்புடன் கிரி ..

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பரே,

    நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானே
    எழுதிக்கொண்டிருக்கிறேன்…..
    இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி.

    வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டமொன்றை இடுக